பேச்சு:மனித இரையகக் குடற்பாதை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனித இரையகக் குடற்பாதை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
மனித இரையகக் குடற்பாதை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சமிபாட்டுத்தொகுதி என்ற இந்தக் கட்டுரை சமிபாடு கட்டுரைக்கு மீள்வழிப்படுத்தப்ப்பட்டுள்ளது. ஆனாலும் சமிபாடு, சமிபாட்டுத் தொகுதி ஆகியன இரு வேறுபட்ட கட்டுரைகளாக இருப்பதே நல்லது என நினைக்கின்றேன். நாம் சமிபாட்டுத்தொகுதி என ஒரு மனித உடலில் விபரிப்பதற்கும், எளிய கலங்களில் சமிபாடு எனக் குறிப்பிடுவதற்கும் வேறுபாடு இருப்பதனால் இதனைக் குறிப்பிடுகின்றேன். ஏனையோரின் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.--கலை 22:57, 17 மே 2011 (UTC)[பதிலளி]

நிச்சியமாக நீங்கள் கூறியபடிச் செய்யலாம். --Natkeeran 00:13, 18 மே 2011 (UTC)[பதிலளி]

எனக்கும் அதில் உடன்பாடு உண்டு; கலை கூறியது போல சமிபாட்டுத்தொகுதி எனும்போது உடற்கூறியல் நோக்கில் பார்க்கலாம், சமிபாடு எனும் போது உடலியங்கியல் நோக்கில் பார்க்கலாம்.--செந்தி//உரையாடுக// 15:10, 18 மே 2011 (UTC)[பதிலளி]

// மனித இரையகக் குடற்பாதை என்பது இங்கே Human digestive system என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் மனித இரையகக் குடற்பாதைக்குரிய ஆங்கில மூலக்கட்டுரையைத் (en:gastrointestinal tract) தழுவி இத் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் en:gastrointestinal tract என்பதே மனித இரையகக் குடற்பாதை; மனித சமிபாட்டுத் தொகுதி / மனித செரிமானத் தொகுதி என்பதே en:Human digestive system. en:gastrointestinal tract எனும் ஆங்கிலக்கட்டுரைக்கு விக்கித்தரவில் தமிழ்க் கட்டுரைகள் இல்லை. முறையில் மனித இரையகக் குடற்பாதை (gastrointestinal tract உடன்) அங்கே இணைக்கப்படவேண்டும். மனித சமிபாட்டுத் தொகுதிக்கு கட்டுரை உருவாக்கப்படல் வேண்டும்.

இங்கு எழுதப்பட்டுள்ள கட்டுரை இரண்டையும் உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கின்றது, ஆனால் இது மனித இரையகக் குடற்பாதையை பெரும்பாலும் விவரிப்பதால் இக்கட்டுரையை மனித இரையகக் குடற்பாதை கட்டுரையாக வைத்துக்கொண்டு Human digestive system எனும் மனித சமிபாட்டுத் தொகுதி கட்டுரையை ஆக்கள் வேண்டும் அதற்கு இக்கட்டுரையில் இருக்கக்கூடிய சில உள்ளடக்கங்களை அங்கே நகர்த்தல் தேவையானது. The human digestive system consists of the en:gastrointestinal tract plus the accessory organs of digestion (the tongue, salivary glands, pancreas, liver, and gallbladder). பயனர்:Shriheeran, பயனர்:Kalaiarasy இது தொடர்பங்களிப்பாளர் போட்டியின் கட்டுரைகள் பட்டியலில் இடம்பெறுமா என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது. பயனர்:கி.மூர்த்தி உங்கள் கருத்து இங்கே தேவைப்படுகின்றது. --சி.செந்தி (உரையாடுக) 20:06, 12 மே 2017 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன் செந்தி. சமிபாடு, மனித இரையகக் குடற்பாதை ஆகிய இரு கட்டுரைகளும் போட்டிக்கான பட்டியலில் இருந்து, ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தேவையான மாற்றங்களைச் செய்யலாம் என்றே நினைக்கிறேன்.--கலை (பேச்சு) 20:40, 12 மே 2017 (UTC)[பதிலளி]
சமிபாடு இக்குழப்பத்துக்குள் வரவில்லை கலை, en:gastrointestinal tract மற்றும் en:Human digestive system இவை இரண்டுமேதான் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியவை.--சி.செந்தி (உரையாடுக) 21:18, 12 மே 2017 (UTC)[பதிலளி]
ஆம், புரிந்திருந்தது. ஆனால் இது தொடர்பாக இரு கட்டுரைகள் பட்டியலில் இருந்ததையே குறிப்பிட விரும்பினேன். நீங்கள் கூறியபடியான மாற்றங்களையே செய்யலாம் என்பதே எனது கருத்து.--கலை (பேச்சு) 22:30, 12 மே 2017 (UTC)[பதிலளி]