பேச்சு:மதன் (இதழாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to searchஅன்பார்ந்த நண்பர்களே! உங்கள் பழைய நண்பனான நான் நீண்ட காலம் கழித்து மீண்டும் வந்துள்ளேன். உங்களுக்கு என்னை நினைவிருக்கும் என நம்புகிறேன். நண்பர்களே! இன்று எழுத்தாளர் திரு.மதன் அவர்கள் பற்றி நம் தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்று தேடினேன். இருந்தது. ஆனால் அஃது அவருடைய இயற்பெயரான கோவிந்த குமார் என்னும் பெயரில் இருக்கிறது. அவருடைய இயற்பெயர் யாருக்குத் தெரியும்? அவரைப் பற்றி அறிந்து கொள்ளத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வருபவர்கள் மதன் எனும் அவருடைய புனைபெயரில்தான் தேடுவார்கள். எனவே அந்தப் பக்கத்தை மதன் என்று பெயர் மாற்றி அமைக்க வேண்டும்! எனக்கு அஃது எப்படி எனத் தெரியவில்லை. எனவே நீங்கள் யாராவது அதைச் செய்யக் கோருகிறேன்! மேலும் இப்படித் தவறாகப் பெயரிடப்பட்ட பக்கங்களின் பெயர்களைத் திருத்துவது எப்படி என்றும் யாராவது விளக்கினால் மகிழ்வேன்!!

--இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 15:59, 6 மார்ச் 2012 (UTC)

ஞானப்பிரகாசன், உங்களை மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் காண்பதில் மகிழ்ச்சி. மதன் (இதழாளர்) என்ற தலைப்புக்கு நகர்த்தி உள்ளேன். பக்கத்தின் மேல் உள்ள நட்சத்திரக் குறிக்கு அருகே உள்ள அம்புக்குறியிடம் செல்லுங்கள். நகர்த்தவும் என்ற தெரிவு வரும். அதன் மூலம் பக்கப்பெயர்களை நகர்த்தலாம். குறிப்பிட்ட கட்டுரைகள் குறித்த கருத்துகளை அந்தந்த கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களிலேயே இடலாம். நன்றி--இரவி (பேச்சு) 16:11, 6 மார்ச் 2012 (UTC)
நன்றி நண்பரே! --இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 10:45, 8 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மதன்_(இதழாளர்)&oldid=2505325" இருந்து மீள்விக்கப்பட்டது