பேச்சு:மடுப்பனை
Jump to navigation
Jump to search
சஞ்சீவி சிவகுமார், நீங்கள் மடுப்பனை என்று குறிப்பிட்டிருப்பது சவுக்கு அல்லவா? Cycus என்பது பொதுவாகச் சவுக்கு என்பதாகப் படித்த ஞாபகம்.--பாஹிம் 17:33, 11 திசம்பர் 2011 (UTC)
- இல்லை பாஹிம். சவுக்கு-en:Casuarina.எனப்படும். அது வேறு தாவரம். Cycusஐ மண்டு எனவும் அழைப்பர். கிழக்கிலங்கையிலுள்ள மண்டூர் அங்கு இம்மரங்கள் அதிகம் இருந்ததால் ஏற்பட்டதாக ஒரு கருத்துள்ளது. ஆயினும் இப்போது கிழக்கிலங்கையில் மடுப்பனையை மிக அரிதாகவே காணமுடிகிறது. தமிழ் நாட்டில் பனைப் பெரணி என்பதாக "ஊடகப் போட்டிக்கு" வந்த படிமம் ஒன்றின் விளக்கக் குறிப்பின் மூலம் அறியமுடிந்தது. அத்தக்வல்களையும் கட்டுரையில் சேர்த்துள்ளேன். கட்டுரையை விரிவுபடுத்தும் போது இன்னும் தெளிவுபெறும்.நன்றி.--சஞ்சீவி சிவகுமார் 23:43, 11 திசம்பர் 2011 (UTC)
சரி சரி. இப்போது தான் ஞாபகம் வருகிறது. Casuarina என்பது தான் சவுக்கு. மடுப்பனை என்பது குட்டையான தாவரம் அல்லவா? முக்கியமான கட்டிடங்களின் முற்றங்கள் போன்ற சில இடங்களில் அழகுக்காக நட்டிருப்பர். எனக்கு அத்தாவரத்தைத் தெரியும். பெயர் தான் சற்றுக் குழம்பி விட்டது. விளக்கத்துக்கு நன்றி, சஞ்சீவி.--பாஹிம் 02:05, 12 திசம்பர் 2011 (UTC)
- ஆம் வீடு, மண்டபங்களின் உள்ளக அலங்கரிப்புகளுக்கும் அதன் இலை பயன்படும்.--192.248.66.3 07:26, 12 திசம்பர் 2011 (UTC)