பேச்சு:மகாயான பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Lotus-buddha.svg மகாயான பௌத்தம் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இக்கட்டுரையின் தலைப்பு மகாயான பௌத்தம் என்றே இருக்கலாம். பிற மொழிகளிலும் இருப்பதைப் பாருங்கள்: சீனம்: 大乘, Dàshèng; ஜப்பானியம்: 大乗, Daijō; கொரிய மொழி: 대승, Dae-seung; வியட்னாமிய மொழி: Đại Thừa; திபெத்திய மொழி: theg-pa chen-po; மங்கோலிய மொழி: yeke kölgen. எனவே பிற மொழிகளில் அத்தனை வேறுபாடு இருக்கும் பொழுது தமிழில் தமிழ் முறைப்படி மகாயான பௌத்தம் என்று எழுதுவதால் தவறில்லை. பல இடங்களிலும் மகாயானம் என்றே எழுதியும் உள்ளனர். --செல்வா 05:44, 28 நவம்பர் 2007 (UTC)

மஹா-வுக்குப் பதிலாக மகா என்பது தமிழில் பரவலான வழக்கில் உண்டு. (எ.கா - மகாகவி). தலைப்பை மாற்றி இருக்கிறேன்--ரவி 22:49, 28 நவம்பர் 2007 (UTC)

ஆம். நான் தான் இதை கவனிக்கத் தவறிவிட்டேன். மகாயான பௌத்தம் என்ற வழக்கை கல்கி அவர்கள் தன்னுடைய சிவகாமியின் சபதம் நாவலில் பரவலாக கையாண்டிருப்பார். தவறுக்கு மன்னிக்கவும் வினோத் 15:58, 29 நவம்பர் 2007 (UTC)

வினோத், இன்னொரு முறை நீங்கள் எதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டாம் :) சில மேம்பாடுகள் சுட்டிக்காட்டப்படுவதும் திருத்தப்படுவதும் இங்கு வாடிக்கை தான்.--ரவி 17:34, 29 நவம்பர் 2007 (UTC)