பேச்சு:மகாமாயா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் மகாமாயா எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@Kanags: அன்புடையீர், இந்தக் கட்டுரையில் தயாரிப்புக்குழு பகுதியில் பாடல்கள், இசையமைப்பு என இரண்டு மேலதிக தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. கீழே பாடல்கள் என்ற தனியான பகுதியில் இசையமைத்தவர்கள், பாடல்களை இயற்றியவர்கள் ஆகியோரின் பெயர்களை ஏற்கெனவே கொடுத்திருக்கிறேன். புதிதாகச் சேர்க்கப்பட்ட விபரத்தில் எஸ். வி. வெங்கட்ராமையர் என்ற பெயர் காணப்படுகிறது. நானறிந்த வரை இந்தப் பெயரில் இசையமைப்பாளரோ சங்கீத வித்துவானோ இருந்ததாகத் தெரியவில்லை. எஸ். வி. வெங்கட்ராமன், குன்னக்குடி வெங்கடராம ஐயர் ஆகிய இருவர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளதாகவே The Hindu கட்டுரையும், பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுப் பட்டியலும் விபரம் தந்துள்ளன. - Uksharma3 11:22, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தமிழாக்கம்[தொகு]

Antonbot தானியங்கி காமிரா என்ற சொல்லை ஒளிப்பதிவுக்கருவி என மாற்றியுள்ளது. ஒளிப்பதிவுக்கருவி என்பது விளக்கம் (Description), பெயர்ச்சொல் அல்ல. காமிரா (Camera) என்பதற்குத் தமிழ்ச்சொல் படமி அல்லது படவம் என்பதாகும். பார்க்க: https://ta.wiktionary.org/wiki/camera UKSharma3 உரையாடல் 04:22, 18 மே 2023 (UTC)[பதிலளி]

@Uksharma3:, ஒளிப்படக்கருவி அல்லது ஒளிப்பதிவுக்கருவி என்பதும் camera வைக் குறிக்கும் பெயர்ச்சொல் தான், படமி, படவம் என்பவை வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. அவற்றின் மூலமும் தெரியவில்லை. ஆனால், கட்டுரையில் காமிரா எனத் தரப்படுவது ஒளிப்படத்தை எடுத்தவரைக் (cameraman) குறிக்கும். எனவே சரியான மொழிபெயர்ப்பு: படப்பிடிப்பு அல்லது படப்பிடிப்பாளர் எனலாம் என நினைக்கிறேன். @AntanO:.--Kanags \உரையாடுக 09:15, 18 மே 2023 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO (பேச்சு) 16:07, 19 மே 2023 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கியின் தமிழ் விக்சனரியில் இருந்ததால் குறிப்பிட்டுக் காட்டினேன். அவ்வளவுதான். நன்றி. வணக்கம் --UKSharma3 உரையாடல் 00:21, 19 மே 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாமாயா&oldid=3719993" இலிருந்து மீள்விக்கப்பட்டது