பேச்சு:போக்கம்பாளையம் ஊராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில்

தொழில்[தொகு]

விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் இங்கு வாழும் மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல் மற்றும் அது சார்ந்த தொழில்களும் செய்யப்படுகிறது

ஆனாலும் அரசாங்கத்தின் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை செய்வதையே இங்குள்ள பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்

வனவிலங்குகள் மற்றும் பறவையினங்கள்[தொகு]

பாம்புகள், உடும்பு, கீரி, பச்சோந்தி, எறும்புதிண்ணி, முயல்கள் போன்ற காட்டு விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.

மயில்கள் அதிகமாக காணப்படுகின்றன மேலும் காகம், சிட்டுக்குருவிகள், கிளிகள், புறாக்கள், வவ்வாள்கள் ஆகிய பறவையினங்களும் இங்கு காணப்படுகின்றன

சுற்றுலா மற்றும் தொல்லியல் முக்கியத்துவம்[தொகு]

இங்குள்ள பிள்ளைதிண்ணி மலை என்னும் மலையின்மீது சமணர்படுக்கைகள் காணப்படுகிறது

மொழி[தொகு]

தமிழ் மொழி இங்கு வாழும் மக்களின் முழுமையான மொழியாக இருக்கிறது. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளை வெளிமாநிலத்தில் சென்று தொழில் செய்பவர்கள் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்த தெரிந்து வைத்துள்ளனர்

சமயம்[தொகு]

இந்து சமயத்தை பின்பற்றுபவர்களே இங்கு வசித்துவருகின்றனர்

பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள்[தொகு]

தமிழர்கள் பொதுவாகக் கொண்டாடும் பொங்கல், தீபாவளி, ஆடிப்பெருக்கு, போன்ற பண்டிகைகள் இங்கு கொண்டாடப்படுகின்றன.

இங்குள்ள சிற்றுார்களில் குடிகொண்டு அருள்பாலித்துவரும் அருள்மிகு விநாயகர், மாரியம்மன், முனிஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு இங்குள்ள மக்கள் வருந்தோறும் தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் திருவிழா எடுத்து கொண்டாடுகிறார்கள்.

விளையாட்டுக்கள்[தொகு]

இங்குள்ள பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவர்கள் கிரிகட் விளையாட்டை ஆர்வமுடன் விளையாடுகிறார்கள்

அரசாங்கத்தின் ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் பணியாற்றுபவர்கள் தங்களது பணிநேரத்தின்போது தாயம் விளையாட்டை மிக ஆர்வமுடன் விளையாடுகிறார்கள்