பேச்சு:பொன்னேர் உழுதல்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம்
பொன் + தேர் = பொற்றேர், அழகிய தேர்
பொன் + ஏர் = பொன்னேர், பொலிவு ஏர், மழை பொழிந்து நிலம் பொலிவு பெறும் நாளில் ஊரார் கூடி பொன்னேர் பூட்டி உழுவர்.
நானும் என் இளமைக் காலத்தில் என் எருதுகளை ஏரில் பூட்டி என் சொந்த ஊர் செங்காட்டுப்பட்டியில் நூற்றுக்கணக்கான ஏர்களில் ஒன்றாக உழுதிருக்கிறேன்.

தங்கள் கட்டுரையில் பொன்னேர், பொற்றேர் குழப்பம் உள்ளதால் அங்கேயே என்னால் செப்பம் செய்ய இயலவில்லை. நீங்களே உடனடியாகச் செப்பம் செய்யுங்கள். இல்லாவிட்டால் பெரும்பிழை நேரும். --Sengai Podhuvan 19:49, 27 நவம்பர் 2011 (UTC)Reply[பதில் அளி]

ஐயா, நிங்கள் கூறியது சரியெனவே தோன்றுகிறது. வேறு ஏதேனும் சங்கப்பாடலில் பொன்னேர் உழுதல் விளக்கம் காணப்பட்டுளதா? மூலத்தை பார்த்ததில் சில பாடல்கள் அகப்படன. ஆனால் மறுபடியும் அதில் பழய தவறு நேரக்கூடாது என்பதற்காக நீங்கள் மறுபடியும் கட்டுரையை பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் 06:33, 28 நவம்பர் 2011 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரையில் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ள அனைத்துப் பாடல்களிலும் வரும் 'பொன்னேர்' என்னும் தொடர் பொன் போன்ற என்னும் பொருளைத் தருபவை.
பொன்+நேர் = பொன்னேர்
நேர் என்பது உவம உருபு
பொன்+ஏர் எனப் பிரித்து இவற்றிற்குப் இப் பாடல் பகுதிகளுக்குப் பொருள் தர இயலாது.
இந்த எடுத்துக்காட்டுகளை அறிஞர்கள் புறக்கணிப்பர் என்பதை நீங்களே அறிவீர்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:31, 26 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

தவறான மேற்க்கோள்கள்[தொகு]

பொன்னேர் பசலை பாவின்று மன்னே! அகம் - 18 இந்தப்பாடல் அகநானூறு 18 இல்லை அகநானூறு 172. குறிஞ்சி தோழி தலைமகளை இடத்துஉய்த்துவந்து தலைமகனை வரைவு கடாயது. என்பதில் வருகின்றது அறியேன் யானஃது அறிந்தனென் ஆயின் அணியிழை உண்கண் ஆயிதழ்க் குறுமகள் மணிஏர் மாண்நலம் சிதையப் பொன்நேர் பசலை பாவின்று மன்றே.

அகநானூறு 52 என்ற பாடல் குறிஞ்சியில் வருகின்றது. அந்த பாடலிலே குறமகள் என்று வருகின்றது. ஆக குறிஞ்சியில் ஏர் பூட்டி உழுதார்களா? மேலும் அந்தப்பாடலில் பொன் நேர் என்று தனித்தனியாகத்தானே வருகின்றது? [1]

பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி நல்மா மேனி தொலைதல் நோக்கி, அகம் - 228. இந்தப்பாடல் அகநானூறு 228 இல்லை அகநானூறு 229 பாலை தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் வன்புறை யெதிரழிந்து சொல்லியது.[2] என்ற பகுதியில் வருகின்றது. ஆக பாலை நிலத்திலும் பொன்னேர் பூட்டி உழுதார்களா?

இரண்டு தவறான மேற்க்கோள்களை காட்டி இருப்பதால் ஏன் இந்த மேற்க்கோள்களை நீக்கக்கூடாது?

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/slet/l1270/l1270son.jsp?subid=3469
  2. http://www.tamilvu.org/slet/l1270/l1270are.jsp?stind=312&edind=314&no=503&bkname=book2&stext=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&stval=0

பாடல்கள் உவமை[தொகு]

தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்) இந்த நூலில் இருந்து மேற்கோள்களைப் போட்டது. அதில் தவறிருந்திருக்கலாம்.

//அகநானூறு 52 என்ற பாடல் குறிஞ்சியில் வருகின்றது. அந்த பாடலிலே குறமகள் என்று வருகின்றது.//

நீக்கியாயிற்று.

//ஆக பாலை நிலத்திலும் பொன்னேர் பூட்டி உழுதார்களா?//

பாலை நிலத்தவள் ஏர் பூட்டி உழுதலை உவமையாகச் சொல்கிறாள். அது எந்த நிலமென்றெல்லாம் சொல்லவில்லை. அதனால் இது அப்படியே இருக்கட்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:20, 11 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

தவறு என்று உங்களுக்கே தெரிகிறது
இருக்கட்டும் என்கிறீர்கள்
இருந்துவிட்டுப் போக்கடுமே --Sengai Podhuvan (பேச்சு) 07:00, 12 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

பயனர்:Sengai Podhuvan தவறென நானெங்கும் குறிக்கவில்லை. பொய் கூற வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:17, 12 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

தங்கள் மேற்கோள்களுக்குத் தரப்பட்டுள்ளள உரையை அருள் கூர்ந்து பாருங்கள். உண்மையை உணர்ந்துகொள்வீர்கள். வாழ்க வளமுடன். --Sengai Podhuvan (பேச்சு) 15:44, 13 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

பயனர்:Sengai Podhuvan

நான் தான் சொல்லிவிட்டேனே நூலில் இருந்து எடுத்தது என்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:52, 14 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]