பேச்சு:பொதுச் சட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

common law என்பதை பொழுதுவழக்குச் சட்டம் என்று கூறலாமா? மக்களிடையே பொதுவழக்காக (மரபு போல்) உள்ளதை சட்டப்படி ஏற்புடையதாகக் கொள்ளுதல் என்பதே நான் புரிந்துகொண்ட பொருள். நான் சட்ட வல்லுனன் அல்லன்.இதில் சட்டபப்டி நுணுக்கங்கள் இருக்கக்கூடும். --செல்வா (பேச்சு) 13:58, 8 மார்ச் 2012 (UTC)

நமது தமிழகச் சட்டத்துறையில் எவ்வாறு தமிழாக்கி உள்ளார்கள் என அறிய ஆவல். common என்ற ஆங்கிலச் சொல் சீராக பொது என்றே வழங்கப்பட்டு வருகிறது....பொது மக்கள் common people, பொது அறிவு common sense என்றவாறு. இதனை வழக்கு சட்டம் (Case law) என்றும் கூறலாம். பொது வழக்கு என்பது பொதுநல வழக்குடன் குழப்பம் ஏற்படுத்தலாம். எனவே பொதுச் சட்டம் என்பதை மாற்றத் தேவையில்லை என்பது என் கருத்து.--மணியன் (பேச்சு) 17:09, 8 மார்ச் 2012 (UTC)
ஆம், மணியன் காமன் என்பதைப் பொது என்றே மிகப்பல இடங்களிலும் பெயர்க்கின்றோம். ஆனால் இங்கே பொதுச் சட்டம் என்பது ஒருவகையான குழப்பத்தை உண்டு செய்வதாகவும், துல்லியக்குறைவு உடையதாகவும் உணர்கின்றேன். சட்டம் எல்லோருக்கும் பொதுதான், பொதுச்சட்டம் என்றால் பொதுவான சட்டம் எல்லோருக்கும் பொதுவான சட்டம் என்னும் பொருள் தருகின்றது. அதுவல்ல இங்கு பொருள். "சட்டம்" என்பதில் பதிவாகாமல், மரபுவழியாக அல்லது பொதுவழக்காக இயங்கிவரும் பழக்க வழக்கங்களை ஏற்கும் சட்டம். எடுத்துக்காட்டாக ஓர் ஆணும் பெண்ணும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாகவே வாழ்ந்தால் அவர்களை காமன் லா ஒய்ஃவு, காமன் லா அசுபண்டு என்பர். இங்கே இவர்கள் திருமணச் சட்டத்தின் படி திருமணம் செய்துகொண்டவர்களோ, பதிவு செய்துகொண்டவர்களோ அல்லர். எனினும் சட்டத்தின் பார்வையில் இவர்கள் பொதுவழக்கான கணவன்-மனைவி போன்றவர்கள் என்றே பல பயன்பாடுகளுக்கும் கருதி தீர்ப்பு வழங்கும் (சில உரிமைகள் இல்லாமல் இருக்கலாம்). காமன் என்பது பல இடங்கலிலும் "பொது" என்பதால் எல்லா இடங்களிலும் பொருந்துவதாக அமையாமல் இருக்கலாம். sea shore என்பதை நாம் கடற்கரை என்கின்றோம். நாம் ஆற்றங்கரை என்பதை ஆங்கிலத்தில் river bank என்கிறான் (அவன் rivershore என்பதில்லை). Bank என்று வரும் இடம் எல்லாம் நாம் வங்கி என்றோ, shore என்று வரும் இடம் எல்லாம் கரை என்றோ மொழி பெயர்த்தால் சரியாக வராது அல்லவா ? (வங்கி என்பது மொழி பெயர்ப்பு அல்ல என்பதைக் கண்டுகொள்ளாதீர்கள்). பொதுச் சட்டம் என்பது ஏதோ நெருடலாக உள்ளது. எனவேதான் கருத்துரைத்தேன். பொருத்தமாக இருப்பதாக இருந்தால் மாற்ற வேண்டாம். --செல்வா (பேச்சு) 18:44, 8 மார்ச் 2012 (UTC)
செல்வா, இங்கு பொதுச் சட்டம் என்பது சட்டத்துறையின் குழுஉக்குறி போன்றது. ஆங்கிலத்திலேயே காமன் லா என்பது சட்டம் அறியாதவர்களுக்கு குழப்பத்தை உண்டு செய்யலாம். நான் தானியக்கமாக காமன் என்பதை பொது என்று பெயர்க்க பரிந்துரைக்கவில்லை. தமிழக சட்டத்துறையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்து மாற்றங்களை மேற்கொள்ளலாம். --மணியன் (பேச்சு) 00:16, 9 மார்ச் 2012 (UTC)
சரி மணியன் அப்படியே செய்வோம். ஆனால் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் இப்படியான சட்டம் ("காமன் லா") உள்ளதா என்று அறியேன். தமிழகச் சட்டத்துறையில் என்ன சொல்கிறார்கள் என்று அறிய முடிந்தால் நல்லது. --செல்வா (பேச்சு) 02:12, 9 மார்ச் 2012 (UTC)
மணியன் விளக்கியது போல் இது ஆங்கிலத்திலும் குழப்பம் வர வாய்ப்புள்ள ஒரு குழூஉக்குறி போன்றது தான். சீனாவில் உள்ள normal universityஐ நாம் சாதாரணப் பல்கலைக்கழகம் என்று பல இடங்களில் தமிழாக்கியுள்ளோம். முதலில் இதனைக் கண்ட போது அது என்ன சாதாரணப் பல்கலைக்கழகம் என்று குழம்பினேன். எனவே, செல்வா சொல்வது போன்ற நெருடல் உள்ளதும் உண்மை தான். எனினும், இது மிகவும் அடிப்படையான ஒரு சொல் என்பதால், தமிழகச் சட்டத்துறையில் என்ன சொல் பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து பின்பற்ற வேண்டும்--இரவி (பேச்சு) 20:48, 9 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொதுச்_சட்டம்&oldid=1059344" இலிருந்து மீள்விக்கப்பட்டது