பேச்சு:பேண்தகுநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேண்தகுநிலை என்ற சொல் விக்கிபீடியாவுக்கு உருவாக்கப்பட்டதா இல்லை வேறு எங்கும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதா?--ரவி 12:50, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

பேண்தகு என்ற பிரயோகம் அண்மைக் காலங்களிலேயே பயன்பட ஆரம்பித்துள்ளது. பேண்தகு அபிவிருத்தி என்பது sustainable development என்ற கருத்ததை உணர்த்தப் பயன்படுவதை அவதானித்துள்ளேன். ஆனால் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் இச்சொல் இல்லை. பேணத்தக்க நிலை என்பது பேண்தகுநிலை தான். ஆனால் விக்சனரியில் இணைப்பதே பொருத்தமானது என்றே எனக்குப்படுகிறது.

கோபி 16:34, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

என் phd தலைப்பே sustainability பற்றியது தான். ஆக, இது குறித்த சொல்லாக்கங்களில் ஒரு தெளிவான நிலையை எதிர்பார்க்கிறேன் ;(--ரவி 16:54, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

பேண்தகுநிலை இலங்கை பாட புத்தகங்களில் பயன்படுத்தப்படுவதாக தெரிகின்றது. எனினும் இங்கு தரப்பட்ட வரையறை எனது அவசர, அரைகுறை குறிப்பே. எனவே, வரையறையை சீர்செய்யப்பட வேண்டியது. --Natkeeran 22:19, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

வளங்குன்றாமை (Sustainability=வளங்குன்றாமை; Unsustainable=வளங்குன்றல்/வளங்குன்றத்தகு; Sustainable Development=வளங்குன்றா வளர்ச்சி) என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா? சரியாக இருக்குமா? கருத்து தேவை. @ ரவி, Natkeeran, கோபி.

--Surya Prakash.S.A. (பேச்சு) 12:41, 7 சனவரி 2016 (UTC)

வாழ்க்கைமுறை ஒப்பீடு[தொகு]

பேண்தகுநிலையை விளங்கிக் கொள்ள ஈழத்து வாழ்வுமுறையை புகலிட வாழ்வுமுறையோடு ஒப்பிட்டு பாக்கலாம். இது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட ஒப்பீடே. ஈழத்தின் எளிய வாழ்வு நிலையையும், புகலிட நகரத்தின் உயர் தொழில்நுட்பமய நிலையையும் இது ஒப்பிடுகிறது.

 • ஈழத்தில் அரசி, மரக்கறி, பழங்கள் விட்டுத் தோட்டத்திலேயோ, அல்லது கிராமத்திலேயே பெறப்படுகிறது. முட்டையும் பாலும் வீட்டில் வழக்கப்படும் கோழி, ஆடு, மாடுகளிடம் இருந்தோ அல்லது கிராமத்தில் வளக்கப்பட்ட மிருகங்களிடம் இருந்தே பெறப்பட்டு விற்கப்படுகின்றன. மீன்களும் அருகில் இருக்கும் கடலில் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அங்கே வெகு தூரத்தில் இருந்து உணவுப் பொருட்கள் வருவது மிகக் குறைவு. அனேகர் தாமே சமைத்து உணவு உண்ணுகின்றார்கள். coca cola, nestle பால்மா, தேயிலை போன்றவை அப்படி வந்தாலும். ஒட்டு மொத்தமாக பாக்கலையில் அவற்றின் சதவீதம் குறைவே.
 • ஈழத்தில் சமைப்பதற்கு விறகே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
 • ஈழத்தில் சமையல் பாத்திரங்கள் பல மண் பாத்திரங்கள். அவை நீர் கொண்டு கையாலேயே அலம்பப்படுகின்றன.
 • ஈழத்தில் நீர் கிணற்றில் இருந்தோ அல்லது அருகில் இருக்கு குழத்தில் இருந்தோ பொறப்படுகிறது. அங்கே ஒரு cetralized water processing or distribution system இல்லை. மேலும், சூடேற்றிய நீர் அரிதாகவே தேவைப்படுகிறது.
 • உடையும் துணி வாங்கி தையல் கலைஞரிடம் குடுப்பது வழமை. ஒப்பீட்டளவில் தைப்பது வாங்கும் உடையை விட குறைந்த விலை உடையாதகவும், அளவு பொருந்தியும் வரும். உடை கிழியும் போது தைத்து பயன்படுத்துகின்றனர்.
 • உடையை கையாலேயே தோய்க்கின்றனர்.
 • ஈழத்தில் centralized waste removal system இல்லை. என்னனென் குப்பை சேர்க்கப்படுகிறதோ. அவை பசளைக்காக ஓரத்தில் சேர்க்கப்படும், அல்லது எரிக்கப்படும்.
 • ஈழத்தில் centralized sewage system இல்லை. எனவே கழிவறைகள் தனித்தனியாக கிணறுகளுக்கு அப்பால் கட்டப்பட்டு, அவ்வப்பொழுது எடுத்து வெளி இடத்துக்கு எடுத்து கொட்ட வேண்டும். இது ஒரு பிரச்சினையே.
 • ஈழத்தில் மின்சக்தியை முற்றிலும் நம்பி இருப்பதில்லை. நம்பி இருக்கவும் தேவையில்லை. சூடேற்ற பட வேண்டிய தேவை இல்லை. சூரிய வெளிச்சமும் 12 மணித்தியாலம் அளவுக்கு கிடைக்கிறது.
 • வீடுகளில் பல ஜன்னல்களும், கதவுகளும் இருப்பதாலும், சுற்றி இருக்கும் வேம்பு, பலா போன்ற பல மரங்கள் காற்று தருவதாலும் ventilation system இருப்பதில்லை.
 • ஈழத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு தானுந்து இல்லை. நெடுந்தூரம் பயணம் செய்வது குறைவு. பலர் ஈருளியைப் பயன்படுத்துகின்றனர். வயலும் வீடும், அல்லது கடலும் வீடும் அருகருகே இருக்கின்றன.

மேற்கண்ட எளிய நிலைமை ஈழம் விரும்பி ஏற்றுக்கொண்ட்ட நிலை இல்லை என்றாலும், சூழலியலை நோக்கும் பொழுது இத்தகைய வாழ்க்கை முறை மிகக் குறைந்த பாதிப்பை சூழலுக்கு ஏற்படுத்துகிறது.

இதை மேற்கு நாட்டு நகர வாழ்க்கையோடு பினவருமாறு ஒப்பிடலாம்.

 • அனைத்து வகை உணவுகளும் பேரங்காடியில் கிடைக்கின்றன. அவை பல்வேறு நாடுகளில் இருந்து மிக நீண்ட தூரம் பயணித்து வருகின்றன. நீண்ட நாட்கள் உணவுகளை பாதுகாக்க உணவுகள் வேதியல் மற்றும் பல்வேரு முறைகளில் பதினிடப்பட்டு அவற்றின் சத்து பெறுமானம் மிகவும் குறைந்ததாக அமைகிறது. கோழி, ஆடு, மாடு போன்றவை தொழிற்சாலை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு பல சூழல் மாசுறல் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. நகரத்தில் வாழும் பலர் அதிகமாக சமைத்த உணவை fast food outlets இருந்து பெற முற்படுகிறார்கள்.
 • நகரதில் உணவு மின்சக்தி, அல்லது gas அடுப்புகள் பயன்பத்தி சமைக்கின்றார்கள்.
 • நகரத்தில் சமையல் பாத்திரங்கள் கூடிய நீரும் மின்சக்தியும் பயன்படுத்தும் dish washing machine கொண்டே பெருதும் கழுவப்படுகின்றன.
 • நகரத்தில் நீர் centralized water processing ditribution system மூலம் குழாய்க்கு வருகிறது. இவ்வாறு வரும் நீருக்கு கூடிய விலை தர வேண்டி இருக்கிறது.
 • நகரத்தில் உடையை தைய்ப்பது பணம் படைத்தவர்களாலேயே முடிகிறது. அனேக உடைகள் சீனா, இந்தியா, வங்காளதேசம், இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து உற்பத்தி செய்ப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. அங்கு தொழிலாளர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்காமல் இங்கே குறைந்த விலைக்கு இறக்குமதி செய்வதால் தொழில் இழக்கும் தொழிலாளர்கள் பிரச்சினையும் இருக்கிறாது.
 • நகரத்தில் தைத்து உடையைப் பேணுவது கடினம். இங்கே தைக்கும்திறன் அனேகரிடம் இல்லை. இதனால் உடைகள் விரைவில் உடுத்த முடியாமல் போகின்றன. தைக்கும் கூலி வாங்கும் விலையை விட அதிகமாகவும் இருக்கிறது.
 • நகரத்தில் washing machine கொண்டே பெரும்பாலான உடைகள் தோய்க்கப்படுகின்றன.
 • நகரத்தில் கழிவுகளை கிழமைக்கு இருமுறை அல்லது ஒரு முறை வந்து அகற்றுகின்றார்கள். நித்தம் அந்தக் கழிவுகளை எங்கெ புதைப்பது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக வளருகிறது. இப்போது கூடிய குப்பைகளை அகற்ற போட்டால் கூடிய கட்டணம் கட்ட வேண்டும்.
 • நகரத்தில் centralized sewage removal and treatment system உண்டு. இது நகர உருவாக்கத்தை ஏதுவாக்கிய ஒரு முக்கிய தொழில் நுட்பம். நோய் பரவலை தவிர்க்க, நகரத்தை தூய்மையாக வைத்திருக்க இது அவசியம்.
 • நகரத்தில் மின்சக்தி உயிர்வாழ் மிக முக்கியம். குறிப்பாக குளிர் நாடுகளில் குளிர் காலத்தில் மின்சக்தி இல்லையென்றால் கட்டிடங்களை சூடாக வைத்திருக்க முடியாது. சில மணித்தாலங்களுக்கு மேலாக பரந்த power cut ஏற்பட்டால் பலர் விறைத்து இறக்கும் நிலையும் ஏற்படலாம். இங்கு குளிர் காலத்தில் 6 மணித்தாயலங்களுக்கும் குறைவாகவும் சூரிய ஒளி கிடைக்கலாம். எனவே ஒளிக்கும் மின்சக்தி தேவை. கோடை காலத்தில் cooling system தேவையாகிறது.
 • வீடுகளில் ventilation system இருப்பது நன்று. அடுக்கடுக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் மத்தியில், கட்டிங்களுக்கு உள்ளேயே வாழ்க்கை பெரும்பாலும் கழிவதால் இது தேவை.
 • நகரத்தில் தானுந்து அவசியமாகிறது. வேலைகள் தொலைதூரத்தில் அமைவதால், அல்லது வீடுகளை குறைந்த விலைக்கு suburbs வாங்குவதாலும் இது அவசியமாகிறது. --Natkeeran 18:27, 7 மார்ச் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேண்தகுநிலை&oldid=1996013" இருந்து மீள்விக்கப்பட்டது