பேச்சு:பெரியசாமி சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விசாரணை - தமிழ்ச்சொல்லா? மாற்றுச்சொல் என்ன?--Ravidreams 19:11, 13 நவம்பர் 2006 (UTC)

விசாரணை வடமொழிச் சொல் மட்டுமல்ல, வேறு பொருள் தரும் வடமொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. :( வடமொழியில் அது ஏதேனும் ஒரு விதையத்தைப் பற்றி ஆழ்ந்து மனதிற்குள் எண்ணிப் பார்த்தல் என்று பொருள் படும். மெய்யியலில் வெகு ஆழமாக வடமொழி வேரூன்றியிருப்பது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. வியப்பூட்டும் வகையில் நாயண்மார்களின் வைணவ சமயப் பாடல்களில் இதுவிதையங்களில் தூய தமிழ்சொற்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை வடக்கன் ஒருமுறை சுட்டிக் காட்டினார்! நேரம் கிடைத்தால் இனி திருப்பாவை போன்றவற்றைப் படித்துத் எந்தன் தமிழை வளர்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.
சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி மற்றும் ஃவேப்ரிசியஸ் அகரமுதலி ஆகியவை உசாவுதல், வினாவுதல், கேள்வி போன்ற சொற்களைத் தருகின்றன.[1][2][3][4] -- Sundar \பேச்சு 05:51, 14 நவம்பர் 2006 (UTC)

நன்றி, சுந்தர். வட மொழி இருப்பது கூட கவலை இல்லை. ஆனால், அதை தமிழ் என்றே நினைத்துக் கொள்வதும் அதற்கு இணையான அழகு தமிழ் சொற்கள் காணாமல் போவதும் தான் வேதனை. இனி இது போன்ற சொற்களை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடுகிறேன் :( வழக்கு விசாரணை, காவல்துறை விசாரணை என்பவற்றை எப்படி தமிழில் சொல்லலாம்?--Ravidreams 05:56, 14 நவம்பர் 2006 (UTC)

வழக்கு உசாவுகை, காவல்துறை உசாவல் என்று பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியிலும் அவ்வாறே தரப்பட்டுள்ளது. சுந்தர்பாட்டை விரைவுபடுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. மேலும், நான் முன்னர் மேற்கோள் காட்டிய அனைத்து அகரமுதலிகளும் காமன்சு காப்புரிமையின்கீழ் வழங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. முடிந்தால சிகாகோ பல்கலைக்கழகத்தினருக்கு ஒரு விண்ணப்பம் எழுதி அவர்களது தரவை அப்படியே பெறமுடியுமா என்று பார்க்கவேண்டும். -- Sundar \பேச்சு 06:23, 14 நவம்பர் 2006 (UTC)

இந்த அகரமுதலிகளை எல்லாம் விக்சனரியில் சேர்த்தால் என்னை விட மகிழ்பவர் யாரும் இருக்க முடியாது !! விரைந்து செய்யுங்கள் சுந்தர். தொடர்புடைய மடல்களில் என் யாகூ மெயிலுக்கும் ஒரு படி அனுப்புங்கள். ஆமா, சுந்தர்பாட்டை தொடர்ந்து இயக்குங்க..--Ravidreams 06:56, 14 நவம்பர் 2006 (UTC)