பேச்சு:பெயின்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் பெயிந்து, பெயிண்டு, பெயின்று என்றுதான் எழுத வகை உண்டு (எல்லா மொழிகளிலும் இப்படியான சிக்கல்கள், அல்லது முறைமைகள், இயல்புகள் மெய்யொலிக்கூட்ட விதிகள் உண்டு). பெயின்ட் என்று -ன்ட்- ஏற்றுக்கொள்ளலாம் எனில் அது புது விதியே (தமிழில் கூறப்பட்ட விதியை மீறிய முறை). இதனால் வரும் சிக்கல் என்னவென்றால் மிக நுட்பமான ஒலிப்பு முறை சீர்கெடும். மாற்றாக பெயின்.ட்டு என்று இடையே புள்ளிவைத்து எழுதலாம். இப்படி சொல்லிடையே (பிறமொழிச்சொல்லிடையே புள்ளி வைத்து) எழுதும் வழக்கம் உரோமன் எழுத்திலும் உண்டு. இதனை ஏற்க வேண்டும் என்றோ ஏற்கத்தான் வேண்டும் என்றோ நான் கூற வரவில்லை (என் பரிந்துரைப்பின் நோக்கம் இதனைக் கருத வேண்டும் என்பதே- இதுவும் புதுமை. இப்படி விக்கியில் புதுமை செய்தல் கூடாது. விக்கி அதற்கான இடம் கிடையாது, என்பதை நன்கு அறிவேன். ஆனால் பெயின்ட் என்பதும் புதுமை தமிழ் விதிகளுக்கு அப்பாற்பட்டது. பலர் தவறாக எழுதினால் ஏற்கலாம் என்று கூறுவதும் பொருந்தாது.) நாம் நான்கு நன்கு என்ற சொற்களை naanku, nanku என்று வல்லின ககரம் கொண்டு ஒலிக்க இது வழிவகுக்கும், இதனால் குழப்பம் வரும். எனவேதான் பெயின்.ட்டு என்று பரிந்துரைக்கின்றேன். அல்லது பெயின்ட்*டு என்றும் மாற்றிக்காட்டலாம். அண்மையில் Naki என்பதை ஒரு பயனர் (பார்வதி என நினைக்கின்றேன்) நாகி என்று எழுத்துப் பெயர்த்திருந்தார். நாகி என்பது naagi என்றுதான் ஒலிக்கும் தமிழில் (கி என்னும் ஒலிப்பில் சிலர் சிறிது காற்ரொலி கலப்பர் ஆனால் வல்லின ககரம் ஆகாது). Naki என்பதைத் தமிழில் எழுதப் நாக்கி என்றுதான் என்றுதான் எழுதுதல் வேண்டும். நாகி என்று எழுதி Nagi என்று படித்தால் பிழை இல்லை. ஒரே சீரான அமைப்பைக் கொள்வது தேவை. penta என்பதைத் தமிழில் பென்.டா என்று எழுதலாம்.--செல்வா (பேச்சு) 15:44, 21 ஆகத்து 2012 (UTC)

சில சொற்களின் இடையே இடைக்கோடு இட்டு எழுதும் வழக்கம் போலும் என்றும் இந்த இடைப்புள்ளி வைத்து எழுதுவதைக் கொள்ளலாம். வேறுபடுத்திக்காட்ட ஓரு முறைதான். கார்பன்-டை-ஆக்சைடு என்று இடைக்கோடு இட்டுக் காட்டுவதால் தெளிவு கிடைக்கின்றது. இதைப்போன்றதே. இடைப்புள்ளி வேண்டாம் எனில் பெயின்-ட்டு என்றும் எழுதலாம்.--செல்வா (பேச்சு) 15:51, 21 ஆகத்து 2012 (UTC)

தமிழ் முறைப்படி எழுதுவதைப் பெரும்பாலும் கடைப்பிடிப்பவன் நான். பெயிண்டு என்று எழுதுவதில் எனக்கும் ஏற்பே. ஆயினும் விண்டோசு 7 இயங்குதளத்தில் பெயின்ட் என்றே அம்மென்பொருளின் பெயரை எழுதுகிறார்கள் (கட்டுரையிலுள்ள படிமத்தைப் பார்க்கவும்.). வணிகப் பெயர் என்பதாலேயே மாற்றாது விட்டு விட்டேன்.

// நம் மொழிக்காக பெயரை மாற்றக்கூடாது எனில், பெயருக்காக மொழியின் அடிப்படையையே மாற்றக் கூடாது என்றும் மற்றவர்கள் சொல்லலாம் அல்லவா?// (பேச்சுப் பக்கமென்றில் செல்வாவின் கருத்து)

இக்கருத்தை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனாலும் கிரந்த எழுத்துகள் தொடர்பாகவே விக்கிப்பீடியாவில் இன்னும் தெளிவான வரையறை இல்லாத நிலையில் வலிந்து வணிகப் பெயரை ஏன் மாற்ற வேண்டும் என்று விட்டு விட்டேன். 50000 கட்டுரைகள் என்ற இலக்கை எட்டிய பின் இதைப் பற்றிக் கலந்துரையாடலாம் என்று இரவி கூறினார். வணிகப் பெயர்கள் இல்லாத பெயர்களையே லியோன் ட்ரொட்ஸ்கி என்றவாறு கிரந்தங்கலந்தும் தமிழ் மரபுகளை மீறியும் எழுதி வரும் நிலையில் வணிகப் பெயர்களை மாற்றுவது தொடர்பில் கொள்கை தேவை (வணிகப் பெயர்களைத் தமிழ் இலக்கண மரபுகளுக்கேற்ப மாற்றுவதில் எனக்கு எதிர்ப்பில்லை. முதலில் கொள்கை தேவை.). --மதனாகரன் (பேச்சு) 11:02, 22 ஆகத்து 2012 (UTC)

ஆம்! உங்கள் நிலை மிகச்சரியானதே! கொள்கை இல்லாமலே, அதிக இறுக்கம் இல்லாமல் நல்ல புரிந்துணர்வுடன் பல இடங்களில் கிரந்தம் கலந்தும் கலக்காமலும் எழுதி வந்தோம். சீரான கொள்கை தேவை என்னும் நிலையை நோக்கி நகர வேண்டிய தேவை போல் தெரிகின்றது! கருத்துக்கு நன்றி!--செல்வா (பேச்சு) 21:49, 22 ஆகத்து 2012 (UTC)👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 06:43, 23 ஆகத்து 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெயின்ட்&oldid=1194967" இருந்து மீள்விக்கப்பட்டது