பேச்சு:பென்சைல் அசிட்டேட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சு:பெ'ன்சில் அசிட்டேட் பக்க உரையாடல்[தொகு]

எழுத்துகளுக்கு இடையே குறியீடுகள் இட்டு வழிமாற்று தருவது தேவை இல்லை என்று நினைக்கிறேன். இது போல் செய்வதால் எண்ணற்ற வழிமாற்றுகள் பெருகும்.--ரவி 18:13, 22 ஜூலை 2009 (UTC)

ரவி, இது ஒரு மெய்த்தேர்வுக்காக செய்கிறேன். தேடு பொறிகளில் கிட்டுகின்றனவா என்று சில நாட்கள் கழித்து பார்க்க இருக்கின்றேன். இது போல முன்னொருமுறை வேறு 3-4 கட்டுரைகளுக்கு செய்து பார்த்தேன். இது ஒரு வழிமாற்றுதான். பெரிது படுத்தாதீர்கள்! பென்சில் (pencil) என்பதில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது தேவையா, இயலுமா என்று பார்க்கவே. --செல்வா 19:12, 22 ஜூலை 2009 (UTC)

சோதனை முயற்சி என்றால் சரி :) முறையாக எல்லா பக்கங்களுக்கும் தர விரும்பினால், உரையாடி முடிவெடுத்த பின் செய்யலாம். வழிமாற்றுகள் தேவையற்றுப் பெருகுவது துப்புரவுப் பணிகளுக்கு சிரமம் தரலாம் என்பதாலேயே குறிப்பிட்டேன்.--ரவி 03:35, 23 ஜூலை 2009 (UTC)

எல்லா பக்கங்களுக்கும் தர முயலவில்லை, ஆனால் உங்கள் கருத்தைப் புரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன். ஒலிப்பைக் குறிக்க ஆங்கிலத்தில் ஐ.பி.ஏ முறையைப் பின்பற்றுகிறார்கள் அல்லவா(வழிமாற்றுகள் தருவதில்லை, ஒப்புக்கொள்கிறேன்), ஆனால் அது போல தமிழில் ஒலிப்பைக் குறிக்க பெ'ன்சைல் என்று குறிக்கலாம்தானே? அதில் என்ன தவறு? வேண்டாம், கூடாது எனில் வலியுறுத்தவில்லை, நீக்கி விடுகிறேன். ஆனால் இது பயனுடையதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். செல் (chell/cell)என்பதையும் செ'ல் (gel) என்பதையும் வேறுபடுத்திக்காட்ட (ஒலிப்பில்) பயனுடையதாக இருக்கும். --செல்வா 04:29, 23 ஜூலை 2009 (UTC)

IPA போல் தமிழ் எழுத்துகளைக் கொண்டே ஒலிப்பை எழுதிக் காட்ட ஒரு முறை கண்டிப்பாக தேவை. உங்கள் பரிந்துரைகள் அதற்கு மிகவும் உதவும். விரைவில் இது குறித்து ஒரு வழிகாட்டல், கொள்கை உரையாடல் செய்வோம். ஆனால், ipa போன்ற ஒரு முறையைக் கூட வழிமாற்றுக்கோ முதன்மைத் தலைப்பாகவோ பயன்படுத்துவதில் உடன்பாடில்லை. தேவைப்படும் இடங்களில் அடைப்புக்குறிக்குள் தாராளமாக எழுதிக் காட்டலாம்.--ரவி 05:01, 23 ஜூலை 2009 (UTC)