பேச்சு:பெண்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png பெண்குறி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

விக்சனரியைத் துணையாகக் கொண்டு Vagina என்ற ஆங்கிலச் சொல்லிற்கு யோனி என்றும் Vulva என்ற ஆங்கிலச்சொல்லிற்கு அல்குல் என்றும் தலைப்பிட்டுள்ளேன். இவை பொருத்தமானவையா என ஆராய்ந்து சரியான தலைப்புகளுக்கு நகர்த்துமாறு வேண்டுகிறேன். மேலும் clitoris என்பதற்கு யோனிலிங்கம் சரியானதா ? --மணியன் (பேச்சு) 16:42, 28 ஏப்ரல் 2012 (UTC)

அல்குல் என்றால் பெண்குறி அன்று! பலரும் செய்யும் பிழை இது. பெண்குறி என்று பொதுப்பட உள்ள தலைப்பில் எழுதலாம். --செல்வா (பேச்சு) 18:54, 28 ஏப்ரல் 2012 (UTC) கிளிட்டோரிசு என்பதற்குப் பெண்குறிப்பருப்பு என்பது பொருந்தும். முகநூலில் ஓர் "பெரிய" எழுத்தாளர் ஒர் இளம் பெண்ணிடம் தவறாகப் (அரட்டைப் பெட்டியில்) உரையாடினார் என்று ஒரு பேச்சு நடைபெற்றது (இது உண்மையா பொய்யா என எனக்குத் தெரியாது), ஆனால் அப்பொழுது யோனிப்பருப்பு என்னும் சொல்லாட்சியைப் பார்த்தேன். பருப்பு, காம்பு என்னும் சொற்கள் புடைத்திருக்கும் பகுத்திக்குப் பயன்படுவன. எனவே பெண்குறிக்காம்பு, பெண்குறிப்பருப்பு என்பன ஈடான சொற்களாக இருக்கலாம்.--செல்வா (பேச்சு) 19:01, 28 ஏப்ரல் 2012 (UTC)
முக்கிய தலைப்புகளில் கட்டுரைகளைத் தொடங்கியதற்கு நன்றி, மணியன்.
புழை என்ற சொல் பல இடங்களில் நுழையும் வழி என்ற பொருளில் ஆளப்படுகிறது. புணர்ச்சியின்போது ஆணுறுப்பு நுழையும் வழி என்பதால் vagina-வுக்கு புணர்புழை என்று பயன்படுத்துவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மலையாளத்தில் ஆற்றுக்கு புழா என்றிருப்பது அவ்வழியே இருக்க வாய்ப்புண்டு. (அதே வேளையில் வெளியில் தெரியக்கூடிய துளையின் பகுதியை மட்டும் குறிப்பதாகத் தவறாகப் பொருள் கொள்ளவும் வாய்ப்புள்ளது. இலத்தீனத்தில் வாளுறை என்ற பொருள் தரும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாக இருப்பதால் செருகுவதைக் காட்டும் பொருளில் சொல் எதுவும் இருந்தால் பயன்படுத்தலாம்.
Vulva என்ற இலத்தீனச் சொல்லின் பொருள் பெண்ணுறுப்பு என்பதே. வேறு அறிவியல் வழக்குச்சொல் இல்லையென்றால் அதைப் பயன்படுத்தலாம். கூதி என்ற வழக்குச்சொல் வெறும் வசவுச்சொல்லா எனத்தெரியவில்லை.
Clitoris என்ற சொல்லின் பிறப்பு கிரேக்கத்தில் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. தாழ் என்ற பொருள் அடிப்பொருள் போலத் தெரிகிறது. மூடியிருப்பதை உணர்த்துகிறது போலும். பருப்பு அல்லது காம்பு என்ற சொற்கள் உருவ அடிப்படையில் பொருத்தமானதாகவே தோன்றுகின்றன. விக்சனரியில் கூதிக்காம்பு என்று ஒரு சொல் தருகிறார்கள். -- சுந்தர் \பேச்சு 16:46, 29 ஏப்ரல் 2012 (UTC)
வேறு மாற்றுக் கருத்துக்கள் இல்லாதவிடத்து vagina =புணர்புழை, Vulva=பெண்குறி , Clitoris=பெண்குறிக் காம்பு என்ற சொற்களை சீராக பயன்படுத்தலாம் என எண்ணுகிறேன். தொடர்புடைய பிற கட்டுரைகளிலும் வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்தாது சீராக இதனைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 02:20, 30 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெண்குறி&oldid=1249488" இருந்து மீள்விக்கப்பட்டது