பேச்சு:பூவிழி வாசலிலே (தொலைக்காட்சித் தொடர்)

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதைச் சுருக்கம்[தொகு]

கஸ்தூரி என்ற ஏழை பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் அப்பா விபத்தில் இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் பண்டிதருக்கு தட்சிணையாகக் கொடுக்க மாதவனிடம் பணமோ பசுவோ இல்லை. அதனால் மாதவனும் கஸ்தூரியும் பெரிய வீட்டிற்குச் சென்று அண்ணாச்சியிடம் பணம் கேட்டனர். அண்ணாச்சியின் மனைவி அஸ்வினி, கஸ்தூரியின் குழந்தையை அடமானம் வைக்குமாறு ஆலோசனை கூறுகிறார். பிறகு இருவரும் தங்கள் பிறக்காத குழந்தையை அடமானம் வைத்தனர். கஸ்தூரி அப்பாவின் இறுதிச்சடங்கு நிறைவேறியது. பிறகு கஸ்தூரி முழு நிலவு நாளில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அஸ்வினி, அந்த குழந்தையை 7 வருடங்களுக்கு பிறகு தங்கள் வீட்டில் ஒப்படைக்க வேண்டும் என்கிறாள்.

7 வருடங்களுக்குப் பிறகு மாதவன், தேன்மொழியை பெரிய வீட்டில் விட்டுச் செல்கிறான். தேன்மொழி ஒரு தைரியமான, புத்திசாலியான மற்றும் அன்பான நெஞ்சம் கொண்ட சிறுமி ஆவாள். அவள் கையில் அடிமை முத்திரை பதிக்கப்படுகிறது. தேன்மொழியும் மனோகரின் மகன் விஷ்ணுவும் நண்பர்களாயினர். ஒருநாள் பெரிய வீட்டுத் தொழுவத்தில் இருக்க பிடிக்காமல் தேன்மொழி தப்பித்து விடுகிறாள். பிறகு மாதவனைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதால் கஸ்தூரி, தேன்மொழியை மீண்டும் பெரிய வீட்டிலேயே விட்டு வந்தாள். தேன்மொழிக்கு விஷ்ணுதான் உதவினான் என்று அஸ்வினி அறிகிறாள். அதனால் மனோகர், தன் அண்ணனின் ஆணைப்படி தன் மனைவி ரஞ்சனா மற்றும் மகன் விஷ்ணுவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இதனால் மனோகரை வெறுக்கும் ரஞ்சனா, லக்னோ சென்று வாழ்கிறாள். தன் அப்பாவும் அம்மாவும் பிரிய தேன்மொழி தான் காரணம் என்பதால் விஷ்ணு அவளை வெறுத்தான்.

லக்னோவின் கலெக்டர் ஈஷ்வர். அவரது அப்பா பிரபாகரும் அண்ணாச்சியும் நண்பர்கள். அதனால் அண்ணாச்சி பிரபாகரை அழைத்தார். அங்கு வந்த ஈஷ்வர், தேன்மொழியின் கையில் அடிமை முத்திரையை காண்கிறார். அதனால் அவர் அண்ணாச்சியின் அடிமை ராஜ்ஜியத்தை ஒழிக்க நினைக்கிறார். அவன் மகன் ஆதித்யா, தேன்மொழியின் நண்பனானான். தேன்மொழியை தன்னுடன் லக்னோவிற்கு கூட்டிச் சென்றான். அங்கு தேன்மொழி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள். குடும்பத்தில் அனைவரும் அவளை ஏற்றுக் கொண்டாலும் அவளால் பிரச்சினை வந்துவிடுமோ என பிரபாகர் பயப்படுகிறார்.

கலைக்களஞ்சிய நடையில் இல்லாததோடு மட்டுமில்லாமல், மிக விரிவாகவும் அமைந்துள்ளதால் இப்பகுதியை கட்டுரையிலிருந்து நீக்கியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:47, 29 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]