பேச்சு:பூக்குழித் திருவிழா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளில் (குறிப்பாக நமது இலங்கையில்) இந்தத் திருவிழா நடக்கிறதா? விவரமிருப்பின் இக்கட்டுரையில் சேர்க்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆம். இதை விபரமாகக் கூறினால்..அம்மன் ஆலயங்களில் ஆகமம் சார்ந்த பூசை முறை. ஆகமம் சாராத பத்ததி பூசை என இரு வகைகளில் பூசை முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆகமம் சாராத ஆலயப் பூசை நடைபெறும் ஆலயங்களில் தீக்குளித்தல் இடம்பெறும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:49, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
சஞ்சீவி சிவகுமார், தீக்குளித்தல் என்பது தவறு. தீ மிதித்தல் என்பதே சரி. இத்திருவிழா பெரும்பான்மையாக மாரியம்மன் கோயில்களில்தான் நடைபெறுகிறது. வேறு சில அம்மன் கோயில்களிலும் நடைபெறலாம். இதுபோன்ற நிகழ்வு இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபெறுகிறதா? நடைபெற்றால் அதையும் இக்கட்டுரையில் சேர்க்கலாமே...?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:03, 20 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஆம் தேனி. தீமிதிப்பு என்பதுதான் சரி. கட்டுரையில் சிலவற்றை சேர்ப்பது சரி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:50, 20 சூலை 2012 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டில் (கொங்கு மண்டலம்) கோயம்புத்தூர், ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களில் குண்டம் (நெருப்பு) திருவிழா என்றும் தென்மாவட்டங்களில் பூக்குழி திருவிழா என்றும் கூறுவது வழக்கு சொல்லாகும்.