பேச்சு:புஷ்பலத்திகா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏறுவரிசை, இறங்குவரிசை என்று குறிப்பிடலாம். அதிக சமசுகிருதம் சொற்களும், எழுத்துக்களும் தொடர்ச்சியாகப் மேலதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. --Natkeeran 19:22, 21 பெப்ரவரி 2011 (UTC)

நற்கீரன், கூடிய அளவுக்கு நல்ல தமிழையும், தமிழ் எழுத்துக்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் சரியான சொற்கள் கிடைக்கும்வரை புழக்கத்தில் உள்ள சொற்களை மாற்றுவதில் கவனம் வேண்டும். ஏறுவரிசை, இறங்குவரிசை என்பது ஒரு பொதுவான பொருள் புலப்பாட்டைத் தருகிறது எனினும், தற்காலத்தில் ஏறத்தாழ 100% புழக்கத்தில் உள்ள ஆரோகணம், அவரோகணம் ஆகிய சொற்கள் தருவது போன்ற இசைத்துறைக்கேயுரிய சிறப்புப் பொருளை இச் சொற்கள் தரவில்லை. இச் சொற்கள் Ascending Order, Descending Order என்பவற்றுக்கு இணையாகக் கணிதத்துறையில் பயன்பட்டுவருவதை நீங்கள் அறிவீர்கள். சில நூல்களில் காணக்கிடைக்கும் "ஆரோசை" "அமரோசை" போன்ற சொற்கள் இந்த வகையில் கூடிய பொருத்தமானவை ஆனால் அவையும் முழுத் தமிழ் சொற்கள் அல்ல. எனவே, பொருத்தமான சொற்கள் கிடைக்கும்வரை நடைமுறையில் இருக்கும் சொற்களை மாற்றுவது நன்றாக இருக்காது.
கர்நாடக இசைத்துறை பெருமளவில் சமசுக்கிருதச் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கும் ஒரு துறை. பலர் இன்னும் ஸ்வரம், ஷட்ஜம், ரிஷபம், நிஷாதம் என்றுதான் எழுதிவருகிறார்கள். நான் தொடங்கியிருக்கும் இராகம் தொடர்பான கட்டுரைகளில் கூடியவரை இவ்வாறான கிரந்த எழுத்துப் பயன்பாட்டைக் குறைத்தே எழுதிவருகிறேன். மாற்றும்போது "நகைச்சுவையை" உண்டாக்கும் போலிருக்கும் இடங்களிலும், பிழையான பொருள் விளக்கம் ஏற்படக்கூடும் எனக் கருதும் இடங்களில் இவ்வாறு மாற்றுவதைத் தவிர்த்து வருகிறேன். நாம் இசைத்துறை வல்லுனர்கள் அல்ல. எனவே இசைத்துறைக் கலைச்சொற்களில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும். சரியான சொற்கள் கண்டறியப்படும்போது படிப்படியாக மாற்றிக்கொள்ளலாம் என்பது எனது கருத்து.

--- மயூரநாதன் 21:31, 24 பெப்ரவரி 2011 (UTC)

விளக்கத்திற்கு நன்றி. நல்ல தமிழில் விரிவான இசை அகராதி, இசைக் கலைக்களஞ்சியம் ஆகியவை வெளிவந்துள்ளன. மேலும் உசாத்துணைகளுக்கு பார்க்க: தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்.

--Natkeeran 00:09, 25 பெப்ரவரி 2011 (UTC)

எடுத்துக்காட்டுக்கு நன்றி நற்கீரன். தமிழிசைப் பேரகராதி யாரிடமாவது உண்டா? சென்னையில் அல்லது இலங்கையில் எங்காவது விற்பனைக்கு இருப்பது தெரிந்தால் அறியத்தரவும். மயூரநாதன் 08:47, 25 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புஷ்பலத்திகா&oldid=702832" இலிருந்து மீள்விக்கப்பட்டது