பேச்சு:புரோட்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மிகவும் தேவையான ஒரு தலைப்பில் அருமையான அறிமுகக் கட்டுரை. பாராட்டுக்கள், ரவி. -- Sundar \பேச்சு 13:31, 10 ஜனவரி 2006 (UTC)

நன்றி சுந்தர். பயணங்கள், பணியிட மாற்றம் காரணமாக அடுத்து ஓரிரு மாதங்களுக்கு என் பங்களிப்பு குறைவாகத் தான் இருக்கும். ஏப்ரல் மாதம் தொடங்கி பழைய முனைப்போடு செயலாற்ற இயலும் என நம்புகிறேன். இந்தக் கட்டுரை உட்பட நான் தொடங்கிய பல கட்டுரைகளை தரமுயர்த்த விருப்பம்--ரவி 21:54, 10 ஜனவரி 2006 (UTC)

கட்டுரைப் பக்கத்தில் இருந்த அருஞ்சொற்களை இங்கு நகர்த்தி உள்ளேன். கருத்துரையாடி, பொருத்தமானவற்றை பின்னர் அங்கு சேர்க்க்லாம்.

அருஞ்சொற்பொருள்[தொகு]

 • புரதக்கூறு - Peptide
 • கலம் - Cell [செல் --செல்வா 15:39, 6 ஏப்ரல் 2008 (UTC) கண்ணறை --செல்வா 15:39, 6 ஏப்ரல் 2008 (UTC)] (கலம் என்பது இலங்கைச்சொல் என்பதை அறிவேன் --செல்வா 15:39, 6 ஏப்ரல் 2008 (UTC))
 • தீ நுண்மம் - Virus
 • நொதி - Enzyme
 • புரதத் துணையலகு - Protein subunit
 • கலச்சட்டகம் - Cytoskeleton
 • எதிர்ப்பொருள் - Antibody
 • ஈந்தணைவி - Ligand
 • திருகுசுழல் - Helix [திருகுச்சுழி --செல்வா 15:39, 6 ஏப்ரல் 2008 (UTC)
 • பருப்பியம் - Lipid [கொழுப்பியம் --செல்வா 15:39, 6 ஏப்ரல் 2008 (UTC)]
 • குருதிக்கொழுப்பு - Cholestrol
 • பருப்புப்புரதம் - Lipoprotein [கொழுப்புப் புரதம் --செல்வா 15:39, 6 ஏப்ரல் 2008 (UTC)
 • ஊக்கியம் - Steroid (?)
 • தாவரநீர்க்கரிமம் - Terpene (?)
 • நாரினி - Fibrinogen [நாரீனி --செல்வா 15:39, 6 ஏப்ரல் 2008 (UTC) அல்லது இழையீனி, நூலீனி --செல்வா 15:39, 6 ஏப்ரல் 2008 (UTC)]

--செல்வா 15:39, 6 ஏப்ரல் 2008 (UTC)


ஆங்கில சொல்லான Lipidக்கு Fatக்கு வேறுபாடு உள்ளது. Fat எனப்படுவது Lipidன் ஒரு வகையாகும். http://en.wikipedia.org/wiki/Lipid; அது ஒரே சொல்லாக பயன்படுத்தப்பட்டாலும் உண்மையில் Lipid ஒரு பொதுச்சொல். Fat ஒரு குறிப்பிட்ட வகை. ஆகவே கொழுப்பு என்கிற சொல் Fatக்கு பொறுந்தும், ஆனால் Lipidக்கு நேரடி பொறுத்தம் இல்லை. பருப்பு என்கிற சொல் பருமையை குறிக்கும். Fat/Lipid வேறுப்பாட்டிற்கு உதவும் பருப்பியம் ஒரு சொல்லாகும். இன்னும் பல உள்ளன.

ஊக்கியம் "ஊக்கமருந்து/Steroidal drug" என்கிற தற்கால மொழிபெயர்ப்பிலிருந்து பெறப்பட்டது.

Terpene தாவரத்திலிருந்து பெறப்படும் Hydrocarbon/நீர்க்கரிமம்; எனவே தாவரநீர்க்கரிமம்.

-ராஜ்

மறுமொழி[தொகு]

 • லிப்பி'ட் (lipid) என்பது நீரில் கரையாது கொழுப்பில் கரையும். எனவேதான் கொழுப்பியம் என்று கூறினேன். மாறாக கொழுமியம் என்றும் கூறலாம். கொழுதியம் என்றும் கூறலாம்! கொழுதம் என்றும் கூறலாமா என அறியேன். லிப்பி'ட் என்பது நெய்போலும், கொழுப்புபோலும் வழவழப்பான பொருள். கிரேக்க மொழியில் lipos என்றாலும் கொழுப்பு என்றே பொருள். கொழுப்பு வகைகளை உள்ளடக்கிய ஒரு பொதுப்பெயர் லிப்பி'ட் என்பது. நெய்போல், எண்ணெய் போல் வழுவழுப்பாக இருப்பதும் நீரில் கரையாது இருப்பது, கொழுப்புப்பொருள்களில் கரைவது, முனைவுறா நீரியக்கரிம கரைப்பான்களில் (nonpolar organic solvents) கரைவது. ஆனால் பருப்பு என்பது Lentil என்பதால், அது புரதப்பொருளைச் சுட்டும். புரதமும் "பருமை"யான சேர்மம் தான். [Lipid < Greek lipos fat + English id(e) ]
 • ஸ்ட்டெராய்'ட் (steroid) என்பது நான்கு ஒட்டிய கரிம வளையம் கொண்ட கொழுப்பியம் (கொழுமியம்). டெர்ப்பினாய்ட் லிப்பி'ட் (terpenoid lipid). இதனை ஊக்கியம் என்று சொல்வது நல்லதா என்று தெரியவில்லை. ஊக்கக்கொழுமியம் எனலாம். ஆனால் இது நல்ல சொல்லா என்று தெரியவில்லை. ஊட்டுக்கொழு எனலாமோ? ஊக்கு என்பதைவிட ஊட்டு என்பது பொருந்தும். இவ்வகையான கலைச்சொல் ஆக்கும் பொழுது இருவகையாக எண்ணுதல் வேண்டும். பொதுப்பயன்பாடு, வேதியியல் தொடர்பாடு. டெர்ப்பினாய்டு என்றே கொள்வது பொருந்தும் என்பது என் நினைப்பு. ஸ்ட்டெராய்டு என்றே சொல்லாம். கூடவே நல்ல தமிழ்ச்சொற்களையும் ஆளலாம்.
 • டெர்ப்பீன் (Terpene), என்பதை டெர்ப்பீன் என்றே சொல்லலாம். இது பொதுவாக பயினி மரம் போன்ற ஊசியிலை மரங்களில் இருந்து பெறும் நறுமணம் தரும் ஒரு ஹைடிரோகார்பன் (நீரியக்கரிமம்) பொருள். இதன் வேதியியல் வாய்பாடு C10H16 எனக்கொள்வர். இதனைப் பயினியம் என்று கூடக் கூறலாம். செடிகொடிகளில் இருந்து எத்தனையோ நீரியக்கரிமப் பொருள்கள் (கரிமநீரதைப் பொருள்கள்= ஹைடிரோகார்பன்) பெறலாம். எனவே "தாவரநீர்க்கரிமம்" என்பது சரியாக இருக்காது. மேலும் "நீர்க்கரிமம்" என்பது ஏதோ நீர்ம நிலையில் உள்ள கரிமம் என்பதுபோல் பொருள்படுகின்றது (கரிமம் நீர்மமாகாது, நேரடியாக ஆவியாகும்). எனவே நீரியக்கரிமம் அல்லது கரிமநீரதை எனலாம். ஹைடிரோகார்பன் என்றே சொல்லலாம்.

--செல்வா 01:28, 7 ஏப்ரல் 2008 (UTC)

ஊட்டு/ஊட்டம் என்கிற சொல் Nutrientன் மொழிப்பெயர்ப்பாக நிறைய இதழ்கள் பயன்படுத்துகின்றன. இதை வேறுபடுத்த Steroid ஊக்கக்கொழுமியம் நன்று என தோன்றுகிறது. ஊக்கியம் எனவும் சுருக்கலாமோ? Fatக்கு கொழுப்பியம், Lipidக்கு கொழுமியம் என வேறுபடுத்தம் சொற்கள் சரி என தோன்றுகிறது.

Terpeneக்கு பயினியம் சரியான சுருக்கச்சொல்.

Hydrogen என்கிற சொல் நீரகம், நீரியம் இரண்டும் பயனாகிறது. ஆனால் நீரகம் என்கிற சொல் இன்னும் புழக்கத்துல் உள்ளது. எ.கா. Sura Mega English-Tamil, Great Lifco English-Tamil அகராதிகள், 'சித்த அறிவியல் மருத்துவம்' மாதிகை. எனவே Hydrocarbon நீரகக்கரிமம் எனலாமோ?

Fat ('வேட்) என்பதற்கு கொழுப்பு என்றே கூறலாம். லிப்பி'ட் என்பதற்கு மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்து எடுக்கலாம் (கொழுப்பியம், கொழுமியம், கொழுதியம், கொழுதம்). ஹைடிரோகார்பன் என்பதற்கு நீர்கக்கரிமம் அல்லது நீரியக்கரிமம் அல்லது கரைமநீரதை என்று சொல்லலாம். ஊக்கம் என்னும் சொல் பொருந்துவதாக த்தெரியவில்லையே ராஜ்! ஊக்கம் என்பது enthusiasm, encouragement, catalyst போன்ற பொருட்களில் தமிழில் வழங்கும். nutrient என்பதற்கு ஊட்டச்சத்து என்பார்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக ஸ்ட்டெராய்'ட் என்பதில் ஊட்டம் என்பதையே வலியுறுத்துவது சரியா என தெரியவில்லை. அது ஒருவகை கொழுப்பியம் (கொழுமியம்). என்பதுதான் முக்கியம். நான்கு கரிமவளையங்கள் கொண்ட கொழுமியச் சேர்மம். டெர்ப்பினாய்'ட் லிப்பி'ட் என்பதில் உள்ள டெர்ப்பினாய்'ட் என்பது நான்கு கரிமவளையம் கொண்டதைக் குறிக்கும். கொலஸ்ட்டெரால் என்னும் வெண்கொழுமியம் போன்ற பொருளில் இருந்து பெறப்படும் பொருள் ஸ்ட்டெராய்'ட் கொழுமியம். --செல்வா 02:40, 7 ஏப்ரல் 2008 (UTC)

"நுண்ணூட்டம்" என்கிற சொல் "பசுமை விகடன்" (Reg. TNTAM./2007/19744) என்னும் மாதிகையில் பயனாகிறது. "ஊட்டம்" என்கிற சொல் "சித்தர் அறிவியல் மருத்துவம்" (Reg. TN/CCN/264/07-09) என்கிற மாதிகையில் பயனாகிறது. இவைகளை மாதந்தோறும் வாங்கிப் படிப்பதுண்டு. இவைகள் இப்போதைக்கு அச்சுவடிவில் மட்டும் கிடைக்கிறது. இணையதளம் இல்லை. ஆனால் அச்சுவடிவில் அதிகப் புழக்கம் கொண்டுள்ளன. நிறை மொழிப்பெயர்ப்புகள் இவ்விதழ்களிருந்து எடுத்துப்போட்டேன். ஊக்கமருந்து என்கிற சொல் தமிழன், மக்கள், Sun ஆகிய அலைவரிசைகள் அடிக்கடி சொல்வார்கள். அதை நினைவில் வைத்துதான் 'ஊக்கியம்' என முன்மொழித்தேன். -ராஜ்

பசுமை விகடன் இணையதளம் கண்டுப்பிடித்துள்ளேன் : http://www.vikatan.com/pasumai/dig8vc.html ஆனால் சற்று மந்தமாக உள்ளது. நிறைய வேளாண் சம்மந்தப்பட்ட சொற்கள் உள்ளன. -ராஜ்

புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவக்கவும் பயன்படுகிறது.புரதச்சத்து ஜீரணநீர்கள், நொதிகள், சுரப்பிகளின் சுரப்பு நீர்கள், வைட்டமீன்கள் ‘ஹீமோ குளோபின்’ எனும் ரத்தத்தின் புரதம் இவற்றைதயார் செய்வதற்கு மிகவும் இன்றியமையாததாகும். நகம்,முடி இவை வளருவதற்கும் புரதச்சத்து மிகவும் தேவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புரோட்டீன்&oldid=815937" இருந்து மீள்விக்கப்பட்டது