பேச்சு:புரோக்குளோரோக்காக்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Prochlorococcus என்பதை புரோக்குளோரோக்காக்கசு (புரோ-குளோரோ-காக்கசு) என்று எழுதுதல் வேண்டும் என்று நினைக்கிறேன்.. இதில் காக்கசு என்பது உருண்டை வடிவான நுண்ணியிரி என்பதைக் குறிக்கிறது. குளோரோ என்பது குளோரோ'வில் (குளோரோஃவில்) என்னும் பச்சையம் அல்லது பசியம் தொடர்பான ஆனால் நீலப்பசிய நுண்ணுயிரி (Cyanobacteria) என்னும் வகையைச் சேர்ந்த நுண்ணுயிரி என்பதை காட்டுக்கின்றது. புரோட்டோ (முதலுரு, அடியுரு) என்பதன் குறு வடிவாக புரோ என்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனவே இதனை புரோக்குளோரோக்காக்கசு என்று குறிக்கலாம் என்று நினைக்கிறேன். அல்லது முதலுருநீலப்பசியக் கோளநுண்ணுயிரி என்றும் சொல்லலாம். bacillus வகை நுண்ணுயிரிகளுக்கு கோலுயிரி என்பது பொருந்தும். காசநோய்( டிபி (TB)) உண்டாக்கும மைக்கோபாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகள் கோலுயிரி ஆகும். காக்கசு (coccus) வேறோர் உரு கொண்ட (உருண்டை) நுண்ணுயிரி. எனவே இவ்வகை நுண்ணுயிரியை கோளவுயிரி எனலாமா? --செல்வா 11:47, 14 ஜூன் 2008 (UTC)

செல்வா, புரோக்குளோரோக்காக்கசு என்கிற பெயர் சரியானது தான். அப்படியே மாற்றிவிடலாம். பொருள்செறிவு நிறைந்துள்ளது. கோலுயிரி, கோளவுயிரி என்பன பாக்டீரியாவின் வகைகளுக்கு வைத்துக் கொண்டாலும், பாக்டீரியா என்று பொதுவாகச் சொல்லுவதற்குத் தமிழில் எப்படிச் சொல்லுவது? நேற்று NPRல் இது பற்றிய செய்திக்குறிப்பு ஒன்று கேட்டேன். 20 விழுக்காடு ஆக்சிஜனுக்கு இவ்வுயிரி தான் காரணம் என்பது ஆச்சரியமாய் இருந்தது. (இதனைக் கண்டுபிடித்த 20ஆம் ஆண்டு நிறைவுவிழா கொண்டாடுகிறார்கள்). அதைப் பற்றித் த.வி யில் எழுதலாம் என்று காலையிலேயே நினைத்துக் கொண்டேன். மற்றபடி உயிரியலில் இருந்து எனக்கு வெகுதூரம் :-). --இரா.செல்வராசு 15:41, 14 ஜூன் 2008 (UTC)