பேச்சு:புருகாடா நோய்க்கூட்டறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கார்த்தி, தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் கூடாது. எனவே புருகாடா நோய்க்கூட்டறிகுறி என தலைப்பை மாற்றுவது நல்லது. மாற்றட்டுமா? --செல்வா 01:12, 5 சூலை 2011 (UTC)

நானும் செல்வாவின் கருத்தை வழிமொழிகிறேன்.--பாஹிம் 01:32, 5 சூலை 2011 (UTC)

நன்றி பாஃகிம்.--செல்வா 02:20, 5 சூலை 2011 (UTC)
செல்வா, பாஃகிம் கருத்தை ஏற்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 03:11, 5 சூலை 2011 (UTC)

அப்படியே செய்கிறேன். இனிமேல் நான் எழுதியவற்றுள் ஏதேனும் பிழை இருப்பின் என்னிடம் கேட்காமலேயே நீங்கள் மாற்றி விடலாம். என் பேச்சுப்பக்கத்தில் இது குறித்த அறிவிப்பு இட இருக்கிறேன். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 03:16, 5 சூலை 2011 (UTC)

செல்வா, பல இடங்களிலும் இந்த இலக்கண விதியைச் சுட்டிக் காட்டி உதவி வருகிறீர்கள். இதை ஒரு தமிழ் விக்கி பெயரிடல் மரபாகவே அனைவரும் ஏற்பார்கள் எனில், தயங்காமல் எல்லா இடங்களிலும் வழிமாற்றலாம்--இரவி 18:13, 5 சூலை 2011 (UTC)