பேச்சு:புனே சந்திப்பு தொடருந்து நிலையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடருந்து நிலையம் (இலங்கை வழக்கு) அல்லது தொடர்வண்டி நிலையம் (தமிழக வழக்கு) என எழுதலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:58, 11 சூலை 2014 (UTC) பார்வைக்கு: யாழ் தேவி, ஈரோடு சந்திப்பு--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:08, 11 சூலை 2014 (UTC)[பதிலளி]

ரயில் நிலையம் என்பது பரவலான வழக்காக இருக்கிறது. ஆங்கில வழியில் படித்த பிள்ளைகள் தமிழில் தேடினாலும் ரயில்வே ஸ்டேஷன் என்றே தேடும் நிலையில் இருக்கிறோம். :( ரயில் நிலையம் என்பது தலைப்பாக இருக்கட்டுமே. ஏனையவற்றை வழிமாற்றாக அமைப்பது நல்லதென்றே உணருகிறேன். இந்தியாவில் உள்ள ரயில் நிலையம் என்பதால் இந்திய வழக்கில் எழுதுவது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:12, 11 சூலை 2014 (UTC)[பதிலளி]

Tsunami என்பதனை ஆழிப்பேரலை எனத் தலைப்பிட்டு கட்டுரை எழுதுகிறார்கள். Indian Institute of Technology Joint Entrance Examination என்பதனை இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எனத் தலைப்பிட்டு கட்டுரை எழுதுகிறார்கள். ஆனால் தொடர்வண்டி அல்லது தொடருந்து என குறிப்பிட யோசிக்கிறீர்கள்! இது கடினமான சொல்லாகவும் இல்லை; எளிதில் புரியக்கூடியது. ஆங்கில வழியில் படித்த பிள்ளைகள் தேடட்டும்; அவர்களுக்காக புனே ரயில்வே ஸ்டேஷன் எனும் தலைப்பிலிருந்து வழிமாற்று கொடுங்களேன்! ரயில் என நீங்கள் எழுதுவதால், தமிழின் பெருமை குறையப்போவதில்லை; ஆனால் அதே நேரத்தில் தொடர்வண்டி அல்லது தொடருந்து என எழுதும்போது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:24, 12 சூலை 2014 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசில், தொடர்வண்டி, தொடருந்து ஆகிய சொற்கள் வெகுமக்கள் ஊடகங்களிலும் நன்கு புழக்கத்தில் உள்ளவை. சென்னை மின் தொடர்வண்டி நிலையங்களில் கூட இவ்வாறு தான் தமிழில் அறிவிக்கிறார்கள். ஆங்கிலம் வழி சிந்திப்பவர்களுக்காக தமிழ் விக்கிப்பீடியாவை எழுதவில்லை. பல சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது அறியப்பட்ட தமிழ் சொல்லுக்கு முன்னுரிமை தரலாம் என்பது நெடுநாள் தமிழ் விக்கிப்பீடியா நடைமுறை. இந்த உரையாடலில் இந்திய வழக்கு எதிர் இலங்கை வழக்கு போன்ற அணுகுமுறை தேவையற்றது. தொடர்வண்டி நிலையம் என்றே தலைப்பிடுங்கள். ரயில் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் முதலிய வழிமாற்றுகள் கூட தேவையற்றது. --இரவி (பேச்சு) 07:31, 12 சூலை 2014 (UTC)[பதிலளி]
தமிழார்வலர்கள் மத்தியில் தொடருந்து புழக்கமான சொல்லாக இருக்கலாம். தமிழார்வலர் வட்டத்திற்கு வெளியில், பொது வழக்கில், அதிக புழக்கத்தைப் பெறவில்லை. கூகுள் தேடலில், ரயில் - 8,14,000, தொடருந்து - 30,700. தொடர்வண்டி - 47,000 முடிவுகள். நான் விதண்டாவாதத்திற்கு வருவதாக நினைக்க வேண்டாம். அரசுகளும், ஊடகங்களும் வெளியிடும் சொற்களே மக்கள் மத்தியில் புழக்கமாக இருக்கின்றதை மறுக்க முடியாது. தவறாகவே இருந்தாலும், அவர்களுக்கு அத்தகைய சொற்களே தெரிகின்றன. :( எனவே, அவற்றை கட்டுரையில் குறிப்பிட்டால் தான் தேடும்பொழுது கிடைக்கும். ஆங்கிலத்தில் வேறு சொல்லை தேடினால் தொடர்பான சொல்லைக் கூட காட்டுகின்றன தேடுபொறிகள். தமிழுக்கு அத்தகைய வசதிகள் இன்னும் வரவில்லை. குறில், நெடில் மாற்றி எழுதினால் கூட தேடல் முடிவுகள் கிடைப்பதில்லை. தேடும்பொழுது ஏற்படும் சிக்கல்களையே நான் குறிப்பிட்டேன். நெடுநாளைய நடைமுறைக்கு எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:52, 12 சூலை 2014 (UTC)[பதிலளி]

ஆக, இரு பயனர்கள் ஒருமித்த கருத்தினை தெரிவித்தும்... அதனை கவனத்தில்கொள்ள உங்களின் மனம் ஒப்பவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:04, 13 சூலை 2014 (UTC)[பதிலளி]

எனக்கு விருப்பமே. தேடும்பொழுது ஏற்படும் சிக்கலையே குறிப்பிட்டேன். தவிர, நாம் பயன்படுத்தும் சொற்களை தமிழ் நாட்டில் உள்ள மாணவர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் என்பதே வருத்தமளிக்கும் விடயமாக இருந்தது. இயல்பாகவே, தமிழகத்தில் தமிழ்ச் சூழல் இல்லை. அதுவும் இலக்கண விதிகளுக்கு ஏற்ப புணரப்பட்ட தமிழ்ச் சொற்களை பெரும்பாலானோர் புரிந்துகொள்ள முயல்வதுமில்லை. புதிய தமிழ்ச் சொற்களை சிலர் கற்றுக் கொண்டாலும், அதன் பொருளை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ற அளவில் மனப்பாடம் செய்துகொள்கிறார்கள். கடல் நீரேரி என்பதை கடனீரேரி என்றாலோ, மக்கள் தொகை என்பதை மக்கட்டொகை என்றாலோ விழிப்பார்கள். நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளாதீர்! உண்மை நிலையை விளக்கினேன். :( triangle-க்கு தமிழ்ச் சொல் முக்கோணமா என்றும் என் நண்பர்கள் கேட்டிருக்கின்றனர்!! என் வருத்தத்தை தெரிவித்திருந்தேன். :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:45, 13 சூலை 2014 (UTC)[பதிலளி]
தலைப்பை புனே தொடர்வண்டி நிலையம் என மாற்ற ஆதரவு.--Kanags \உரையாடுக 07:56, 13 சூலை 2014 (UTC)[பதிலளி]

@தமிழ்க்குரிசில். //தமிழகத்தில் தமிழ்ச் சூழல் இல்லை// என்கிறீர்கள். (தனிப்பட்ட முறையில் நான் அப்படி நினைக்கவில்லை). உங்களின் கண்ணோட்டத்திலேயே பார்த்தாலும், அதனை மேலும் கீழ்நிலைக்கு நாம் ஏன் கொண்டு செல்லவேண்டும்? தமிழ் விக்கிப்பீடியாவில் ரயில் என எழுதினால்... "தமிழ் விக்கிப்பீடியாவிலேயே அப்படித்தான் எழுதுகிறார்கள்" என்பர். அதற்கு என்ன பதில் சொல்வது? கடனீரேரி, மக்கட்டொகை எனும் தலைப்புகளில் கருத்து வேறுபாடு இருப்பின்... அதுகுறித்து அக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுங்கள். Triangle என்பதற்கு முக்கோணம் என்பது பொருத்தமான சொல்லே! அதனை விடுத்து 'டிரையாங்கில்' என எவராவது தமிழில் எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? தொடர்வண்டி அல்லது தொடருந்து என்பது பொருத்தமான சொல், தமிழ் வாசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ளத்தக்க சொல், எனவே அதனை முதன்மையாக பயன்படுத்துங்கள் என்கிறேன். (மேலும் கட்டுரையில் train என்பதனை rail எனக் குறிப்பிடுதலும் ஒரு பிழை!). இதற்குமேல் இதுகுறித்து எழுத என்னிடம் வளம் இல்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:34, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]

கூகுளுக்குத் தமிழ் தெரியாது. அதே கூகுளின் கண்ணுக்கு தொடர்வண்டி என்றால் என்னவென்றும் தெரியும். தமிழ்நாட்டில் தமிழ் செய்தித்தாள் வாசிக்கிற யாருக்கும் தொடர்வண்டி என்றால் புரியும். முன்பே சுட்டியது போல், தொடர்வண்டி நிலையங்களின் அலுவல் முறை அறிவிப்புகளிலும் இந்தச் சொல் இடம்பெறுகிறது. எனவே, தமிழ் ஆர்வலர் மட்டும் புழங்குகிற சொல் இல்லை. பேச்சு:காப்பி போன்ற இடங்களில் உங்களின் தயக்கம் கருத்தில் கொள்ளப்பட்டதுண்டு. ஆங்கில விக்கிப்பீடியா கூட எல்லாருக்கும் புரியாது. அதனால் தான் Simple Wikipedia என்று ஒரு திட்டம். இப்பக்கத்தில் உள்ள பொதுக் கருத்துகளின் அடிப்படையில் கட்டுரையில் தொடர் வண்டி என்று மாற்ற முடியும். ஆனால், நீங்கள் இதே தலைப்பில் பல கட்டுரைகளை எழுதி வருவதால் இக்கருத்தைக் கவனித்து உரிய மாற்றங்களை எல்லா இடங்களிலும் செய்ய வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:00, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]

சரி, மாற்றுவதானால் மாற்றிவிடுங்கள். தொடருந்து என்பது ஒரு வாகனம் என எண்ண முடிந்தாலும், அது ட்ரெயினை குறிக்கிறது என்பது ஒரு நகர்ப்புற மாணவன் என்ற முறையில் ஊகிக்கக் கடினமாகவே உள்ளது. தொடர்வண்டி என்ற சொல்லும் தொடருந்து என்ற சொல்லும் ஒன்றையே குறிக்கின்றன என்பதும் ஊகிக்க கடினமாக உள்ளது. :( மேலும், அரசு ஆவணங்களில், பலகைகளில், அறிவிப்புகளில் ரயில் என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளது. சென்னை புறநகரிலும், “அடுத்த ரயில் நிலையம்” என்பார்கள். ”ரயில்வே அதிகாரி” என்பார்கள். railway என்ற சொல்லின் பொருள் புரியாவிட்டாலும் கூட, அதற்கு தாங்களே பொருள் கொள்கின்றனர் மக்கள். அதை இருப்புவழி என்று சொல்வது புரிந்துகொள்ளும்படி இல்லை. இந்த சொல், ரயில்வே என்பதற்கு இணையானதாக பயன்படுகிறது என்பதை ஊகிக்க முடியவில்லை. யாரேனும் விளக்குவீர்களா? தலைப்பையோ, உள்ளடக்கத்தையோ மாற்றுவதில் சிக்கல் எதுவும் இல்லை. மாற்றிவிடலாம் தானே!

மாற்றுவதற்கு ஆதரவு.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:22, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]

இலங்கையில் இன்னமும் புகையிரதம் என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளது. ஊர்ப்பக்கங்களில் கோச்சி என்ற சொல்லும் பேச்சுவழக்கில் உள்ளது. Railways என்பதற்கு புகையிரத சேவைகள் என்றே அதிகாரபூர்வமாகப் பாவிக்கிறார்கள்.--Kanags \உரையாடுக