பேச்சு:புதிய உடன்படிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழைய ஏற்பாட்டின் மக்களாகிய இஸ்ரயேல் மக்கள் இனத்தோடு கடவுள் செய்துகொண்ட உடன்படிக்கை ”பழைய உடன்படிக்கை” என்றும், புதிய ஏற்பாட்டின் மக்களாகிய கிறிஸ்தவ மக்களோடு கடவுள் செய்துகொண்ட உடன்படிக்கை ”புதிய உடன்படிக்கை” என்றும் அழைக்கப்படுகின்றன.

மேலேயுள்ள கூற்று ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதல்ல. ஆங்கிலக் கட்டுரையில் காணப்படுவது போன்று (பார்க்க: en:New_Covenant#Outline) நடுநிலையான இறையியலாக இருப்பது நல்லது. மற்றும் en:Supersessionism தாக்கம் இங்கு உள்ளதையே மேலேயுள்ள கூற்றுக்கள் பிரதிபலிப்பதாக உணர்கிறேன். --Anton (பேச்சு) 09:22, 15 சூன் 2012 (UTC)[பதிலளி]

ஏற்பாடு என்றால் உடன்படிக்கை என்பது பொருள். பழைய உடன்படிக்கை அல்லது ஏற்பாடு கடவுள் சீனாய் மலையில் இஸ்ரயேல் மக்களோடு செய்த உடன்படிக்கை. புதிய உடன்படிக்கை உலக மக்கள் அனைவரோடு கடவுள் செய்த உடன்படிக்கை. உடன்படிக்கை ஏற்றுக் கொண்ட மக்கள் கிறிஸ்தவர்கள். --நிர்மல் (பேச்சு) 15:41, 22 சூன் 2015 (UTC)[பதிலளி]

இது கிறித்தவ இறையியல் கருத்தோடு மட்டும் ஒத்துப்போகிறது. --AntanO 17:22, 23 சூன் 2015 (UTC)[பதிலளி]
கிறிஸ்தவத்தை பற்றிய கட்டுரையில் கிறிஸ்தவ இறையியல் பற்றியே இருக்கும். இதில் பிற கருத்துகளை எதிர்பார்ப்பது முறையற்றது. ஒரு மதம் சார் கட்டுரையில் அதை தவிர்த்து பிற கருத்துகளை திணிக்க முயற்சிப்பது வீண் பிரச்சனைகளுக்கு வழிகோலும். --நிர்மல் (பேச்சு) 06:20, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]

புதிய உடன்படிக்கை கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே காணப்படுகிறது. --நிர்மல் (பேச்சு) 06:23, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]

இது கிறித்தவ கட்டுரை அல்ல என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவும். தெளிவில்லாது இருந்தால் ஆ.வி கட்டுரையைப் படிக்கவும் புதிய உடன்படிக்கை கிறித்தவ மதத்தில் மட்டும் காணப்படவில்லை. மாறாக, யூத இறையியலை தன்னுள் உள்வாங்கி கிறித்தவ இறையியலாக விளங்குகிறது. //வீண் பிரச்சனைகளுக்கு வழிகோலும்// எப்படியான பிரச்சனைகள்? பொதுவான கட்டுரையில் எப்படி கிறித்தவத்தை மட்டும் திணிக்கலாம்? --AntanO 09:05, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]

யூத மதத்தின் நிறைவுதான் கிறிஸ்தவ மதம். யூத மதத்திலும் புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவராவார். ஆகவே இக்கட்டுரை கிறிஸ்தவ மதத்தை பற்றியது என்று கூறியதில் தவறில்லை. கிறிஸ்தவராகாத யூதர்கள் புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே புதிய உடன்படிக்கையை பற்றிய விளக்க உரையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை.--நிர்மல் (பேச்சு) 11:57, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]

நிறைவு வாதம் தரும் தாக்கமே யூத மதத்தின் நிறைவுதான் கிறிஸ்தவ மதம் என்பது. கட்டுரை திருத்தி எழுதப்படாதவரை கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கும். --AntanO 12:16, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]