பேச்சு:புணர்ச்சி (இலக்கணம்)

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தி சமசுகிருத சொல்லா? ஆதாரத்துடன் சேக்கலாம். ஆனால் அடைப்புக்குறிக்குள் இட தேவை இல்லை என்று நினைக்கிறேன். --Natkeeran 02:36, 18 டிசம்பர் 2008 (UTC)

புணர்ச்சி என்ற பொருளுடைய சமசுகிருதச் சொல் சந்தி என்று நினைக்கிறேன். தொல்காப்பியத்தில் புணரியல் என்ற தலைப்பில் ஒரு இயல் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 03:31, 18 டிசம்பர் 2008 (UTC)

சந்தி என்பது ஒரு தமிழ்ச்சொல் தான்.

வினைச்சொல்: அவனை சந்தி, அவனை சந்தித்தேன்.
தொழிற்பெயர்: சந்தித்தல்
பெயர்ச்சொல்: இரண்டு பாதைகள் சந்திக்கும் ஒரு இடம் சந்தி,
இரண்டு பேர் சந்தித்துக்கொண்டால் அந்த நிகவுக்கு பெயர்: சந்திப்பு
மூன்று பாதைகள் சந்திக்கும் ஒரு இடம் முச்சந்தி
நான்கு பாதைகள் சந்திக்கும் ஒரு இடம் நாற்சந்தி
இலங்கை, கொழும்பில் இருக்கும் ஒரு சந்தி "ஐந்துவிளக்குச் சந்தி"> "ஐந்துலாம்புச் சந்தி".
சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்படாத சொற்கள் தமிழில் உள்ளவை ஏராளம். சங்க இலக்கியங்களில் இல்லாத சொற்களை எல்லாம் தமிழில்லை என்பது முறையன்று. சங்க இலக்கியங்கள் அகரமுதலிகள் அன்று.
சங்கதச் சொற்கள் என்று கருதிய பலச்சொற்களின் வேர் பாகதம், பாரசீகம் போன்ற ஆரிய மொழிக்குடும்பச் சொற்கள் வழி சங்கதம் வந்தவைகளாக உள்ளன. ஒரு சொல் சங்கதம் என்பவர் அதற்கான வேர்ச்சொல்லை ஆரிய மொழிக்குடும்ப மொழிகளில் இருந்தோ அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் இருந்தோ காட்ட வேண்டும். குறைந்தது சங்கதத்தின் மூல நூல்களான வேதங்களில் இருந்தாவது காட்ட வேண்டும். குறிப்பு: டேவிட் சுல்மான் எனும் யூத மொழியாய்வாளர் 700 மேலான சங்கதச் சொற்கள் தமிழின் மூலத்தைக் கொண்டவை என இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். பார்க்க: https://www.amazon.com/Tamil-Biography-David-Shulman/dp/0674059921 --Thennakoan (பேச்சு) 22:37, 25 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]