பேச்சு:பீரங்கி வண்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீரங்கி வண்டி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

சிவப்பு இணைப்புகள் நீக்கப்பட்டுவிட்டன. மற்றவை போட்டியின்போது மேற்கோள்ளப்பட வேண்டியனவல்ல. போட்டிக்குப் பின்னர் கட்டுரை விரிவாக்கும்போது மேற்கொள்ளப்படும் அல்லது இயல்பாகிவிடும். எனவே கட்டுரையை முழுமையானதாக ஏற்க. குறியீட்டளவுக்கு கட்டுரை விரிவாக்கப்பட்டுவிட்டது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:46, 6 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. புள்ளியிடலில் சிறு தவறு இருப்பதாகத் தெரிகிறது. திருத்தங்களின் பின்னர் ஒரு நடுவரால் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் முழுமையாகப் புள்ளி வழங்கப்படும். --சிவகோசரன் (பேச்சு) 16:03, 11 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
AntanO அவர்களே , தகரி என்னும் சொல்லானது பாவாணரின் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் இடம்பெற்றுள்ளது.. இது அனைத்தையும் தகர்க்கும் என்னும் பொருளில் தகர்-> தகரி என்று முன்மொழியப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் இந்த பீரங்கி என்னும் சொல்லானது வேற்று மொழிச்சொல். அதனை தவிர்ப்பது நல்லம் பெரும்பாண்டியன்2 (பேச்சு) 5:27 pm eastern time, 29 மார்ச் 2020
கட்டுரையில் தலைப்பு மாற்ற கோரிக்கை வார்ப்புரு சேர்த்துள்ளேன். மற்றவர்களின் கருத்து அறிந்து எத்தலைப்புக்கு கட்டுரையின் தலைப்பு அமைய வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். --AntanO (பேச்சு) 01:47, 30 மார்ச் 2020 (UTC)
நன்றி, அப்படியே ஆகட்டும்(பேச்சு) 11.18am eastern time, 30 மார்ச் 2020

தகரி எனும் சொல்லே சிறந்தது. பீரங்கி என்பது பொருந்தா சொல் அல்லவா? --Jayreborn (பேச்சு) 20:54, 23 செப்டம்பர் 2020 (UTC)


சொன்னால் எங்கையா கேட்கின்றனர். இதே போல தான் தெறுவேயம் என்று கன்னொன்னை மொழிபெயர்த்து எழுதினேன். ஆனால் அவர்கட்கு பீரங்கி (From port. firangki https://en.wiktionary.org/wiki/firangi#English) என்பது தான் தமிழாம். தெறுவேயம் என்னும் புதிதாய் உருவான சொல்லிற்கு ஆதாரம் வேண்டும். இதற்கெல்லாம் ஆதாரத்திற்கு எங்கையா போவது.? ஆதாராம் வேண்டுமென்றால் இன்னுமொரு ஐம்பது வருடம் கழித்துதான் கொடுக்க முடியும். அப்போது தமிழே சிதைந்திருக்கும். நான் அத்துடன் விட்டு விட்டேன், ஒன்றும் பேசவில்லை. ஏதோ, தமிழை சிதைக்காமல் இருந்தால் சரி. (பயனர் பேச்சு:பெரும்பாண்டியன்2 ) 11.01am eastern time, 05 jan 2021

விக்கிப்பீடியாவுக்கென்று வழிகாட்டல் உள்ளது. அதன்படிதான் அனைவரும் செயற்பட முடியும். தமிழில் கலந்த பிற மொழிச் சொற்கள் பல உள்ளன. பீரங்கி என்பது அணைவருக்கும் இலகுவில் விளங்கக்கூடியது, பயன்பாட்டில் உள்ளது. அவற்றை நீக்குதல், தூய தமிழ் போன்ற மாற்றங்களுக்கு விக்கி ஏற்ற இடமல்ல. பொதுவெளியில் செய்ய வேண்டிய விடயங்களை விக்கியில் திணிப்பது ஏற்புடையதல்ல. எ.கா: கேணல் கிட்டு பீரங்கி படையணி. இதனை உங்களால் கேணல் கிட்டு தகரி படையணி என மாற்ற முடியுமா? ஏன் கேணல் என்பதே தமிழ்ச் சொல் அல்லவே? சில மாற்றங்களைச் செய்ய கால அவகாசம் வேண்டும். மற்றவர்களையும் அதில் உள்வாங்க வேண்டும். நிற்க, த.வி. வழிகாட்டலின்படி செயற்படுவதுதான் ஏற்புடையது. --AntanO (பேச்சு) 03:44, 8 சனவரி 2021 (UTC)[பதிலளி]
இஞ்ச பாருங்கோ அண்ணை, கடுப்பில குழறிட்டியள் எண்டு நினைக்கிறன். முதலாவது கிட்டு பீரங்கிப் படையணி வந்து டாங்கிப் படையணி இல்லைச் சரியோ! அது பல்குழல் உந்துகணைக்கும்(மல்டி) தெறோச்சிக்குமான(கௌவிட்சர்) படையணி. தகரி(அதான் டாங்கி)க்கு வந்து சூரன் கவச அணி என்டு ஒன்டு தனியாவே இருந்தது. இதையெல்லாம் எழுதினால் எழுதிக்கோண்டே போவேன். இது இஞ்ச கதைக்கிறது உகந்ததும் இல்லை; தேவையும் இல்லைப் பாருங்கோ! (தவிபுவை எதுக்கு இழுத்தனியளோ எனக்கு தெரியாது🤔)
இரண்டாவது கேணல், இது தமிழ்நாட்டில் ஒருத்தருக்கும் விளங்காது; என்னெட்ண்டும் தெரியாது. எமது ஊரில் மட்டுமே இது வழக்கில் இருக்கின்றது. //சில மாற்றங்களைச் செய்ய கால அவகாசம் வேண்டும்// இன்னும் எவ்வளவு காலம் அண்ணை வேணும்?. நான் ஒன்டும் உங்களிற்ற அறிவியல் சொல்லை மாற்றச் சொல்லி கேட்கவில்லை; படைத்துறையில் மாற்றம் கேட்கிறேன். இது இன்னமும் பரவலா ஒரு 10 வீதம் கூட வரவில்லை. தொடக்கத்திலேயே சரியாக நெறிப்படுத்தினால் சும்மா அந்தமாதிரி இருக்கும். இன்னும் ஒரு கொஞ்சக் காலத்திலை எல்லாம் ஆங்கில(சிங்கள) மயமாகப் போகிறது. அப்பவும் வந்து சொல்லுவியளே... இன்னும் கொஞ்சக் காலம் போகட்டும் பாப்பம்ரா எண்டு?..ஆ? இப்பதான் அண்ணை இணையயுகம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இப்பவே ஏத்தீற்றமெண்டால் எதிர்காலத்திலை மக்களும் இதையே தொட்டு நடப்பினம். இல்லையெண்டால் அவையும் ஆங்கிலத்தைத் தான் பயன்படுத்துவினம்.
நான் உங்களை ஒன்டும் பிடிச்சு இழுக்கவில்லை, அண்ணை. நீங்கள்தான் இங்க பெரியைய்யா. உங்களுக்கு தெரியாதது ஒன்டும் இல்லை. விக்கியில் ஒரு சொல் ஏற்றினால் அதன் ஆங்கிலச்சொல்லைக் கொண்டு தேடும் போது அதற்கான தமிழை விக்கி காட்டும். அப்ப விக்கியில நல்ல தமிழில இருந்தால் அதைப் பாக்கிற சனங்களும் அதையேதான் பயன்படுத்துவினம். அப்பிடியே பயன்பாட்டிற்கும் வரும் (இதேபோன்றுதான் வன்னியிலையும் மட்டக்களப்பிலையும் செஞ்சவங்கள், அந்தக்காலத்தில். உங்களுக்கும் தெரியும் என்டு நினைக்கிறன்)
நீங்கள் எங்களுக்கு மேல இருக்கிற ஆக்களை மனசில வச்சுதான் கதைக்கிறியள். அவைக்கு படைத்துறை சைவர். சமருக்கும் போருக்குமே வேறுபாடு தெரியாது. அடிபாடு என்டால் என்ன சண்டையெண்டால் என்ன என்டு தெரியாது. நாங்கள் சரியா ஒழுங்குமைச்சால் தமிழில் படைத்துறை முன்னேறும். இல்லை நீங்களும் பண்டியோட சேர்ந்த கண்டும் ஏதோ தின்னும் எண்டுவியல் என்டால், செய்ய வேண்டாம்... ஆனால் உங்கட இடத்தையும் ஒருக்கா திரும்பிப் பார்த்துவிட்டு போங்கோ! பெரும்பாண்டியன்2 (பேச்சு) 1:31pm eastern time, Jan. 25, 2021
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பீரங்கி_வண்டி&oldid=3420679" இலிருந்து மீள்விக்கப்பட்டது