பேச்சு:பீட்டா டெய்லர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை ஆங்கில ஒலிப்புக்கு ஏற்ப பீட்டா டெய்லர் என மாற்றப்பரிந்துரைக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 14:44, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]

நானும் சிவக்குமார் கூறுவதை வழி மொழிகிறேன். பீடா என்றால் peedaa என்று தமிழில் ஒலிக்கும். பீட்டா என்றால் peetaa என்று ஒலிக்கும். அரிதான, சூழல்சார்ந்த நுட்பத் தமிழ் ஒலிப்பு முறையைப் பேணும் முகமாக எழுதுவது நல்லது. முதல் ஒலி, மெல்லொலி பகரமாக இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். தமிழ் மொழியையே tamil என்று ஆங்கிலேயர் சொல்வதில்லையா? மொழிக்கு மொழி ஒலி வேறுபாடுகள் இருக்கும், சிறிதும் பெரிதுமாக பிறழ்வுகள் இருக்கும், என்பதை நாம் ஏற்க வேண்டும். பீடா டெய்லர் என்று எழுதி peedaa teylar என்று ஒலித்தால் தவறில்லை. ஆனால் peetaa teylar என்று ஒலிக்கத் தொடங்கினால், அடிப்படைத் தமிழ் ஒலிப்பு முறையில் குழப்பமும் சீரின்மையும் நுழைந்து சிதைவுறும். எனவே தான் பீட்டா என "வலித்து" வரும் நுனிநாக்கு டகரம் வருமாறு எழுத வேண்டுகிறேன். (t என்பது தமிழ் ட அல்ல, அது நுனிநா டகரம். இப்படி நுணுக்க வேறுபாடுகள் பல இருக்கும்). டெய்லர் என்பதைக்கூட தெய்லர் என்றாலும் பிழை இல்லை. இது சற்றே வேறான திரிபு. பல ஐரோப்பிய மொழியரும் t என்பதைத் தகரக் கலப்பொலியோடுதான் ஒலிக்கின்றனர்.--செல்வா 14:59, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]

மாற்றிவிட்டேன் சிவக்குமார். இதுபோன்ற சிறு சிறு திருத்தங்களை நீங்களே செய்யலாம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சிவா. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:59, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]

  • அன்பு விக்கி உறவுகளே ஆங்கில ஒலிப்புக்கு ஏற்ப என் தலைப்புக்களில் ஏற்படக் கூடிய பிழைகள் இருப்பின் தயை கூர்ந்து திருத்தி விடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.--P.M.Puniyameen 15:13, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]
விளக்கத்திற்கு நன்றி செல்வா, சூர்யப்பிரகாசு. புன்னியாமீன், கட்டாயம் நாங்கள் திருத்துவோம். தங்களுடைய இடைவிடாத பணி எங்களை ஊக்குவிக்கிறது.--சிவக்குமார் \பேச்சு 15:20, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பீட்டா_டெய்லர்&oldid=798425" இலிருந்து மீள்விக்கப்பட்டது