பேச்சு:பீட்சன பைரவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்சன பைரவர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பை மாற்றக் கோருகிறேன். க்ஷ் என்ற எழுத்து பயன்பாட்டில் இல்லை. (எ.கா: லக்ஷ்மி - லட்சுமி/இலக்குமி) அதற்கு மாற்றாக தமிழில் ட்ச போட்டு எழுதும் வழக்கம் பரவலானது. எனினும், க்ச போட்டு எழுதுவாரும் உளர். மேலும், இவ்வெழுத்து தேடுகையில் சிக்குவது கடினமே (கூட்டெழுத்தாக உள்ளமையால்). இவ்வெழுத்தைக் கொண்டு தேடுவார் யாரும் இல்லை என்றே கூட கொள்ளலாம். பீக்‌ஷன என்றோ பீக்சன என்றோ பீட்சன என்றோ மாற்றலாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:05, 29 மார்ச் 2013 (UTC)

வைரவர் என்று தானே தமிழில் எழுதப்படுகிறது? பீட்சன வைரவர் என்றிருக்கலாமா?--Kanags \உரையாடுக 13:11, 29 மார்ச் 2013 (UTC)
வைரவர் என்றும் கேட்டிருக்கிறேன். ba ஒலிப்புக்கு வ எழுதுவது வழக்கம் என்று கூறுவர் (பாஹிம் கஜபாகு என்பதை கயவாகு என்று இருப்பதாக நினைவூட்டியுள்ளார்.) ஆயினும், பைரவர் என்பது மிகப் பரவலாக இருக்கிறது. வைரவர் என்பது இவரைக் குறிக்கிறது என நீங்கள் கூறித்தான் அறிகிறேன். (வைரவர் என்பதற்கும் கூகிளில் நிறைய தேடல் முடிவுகள் கிடைக்கின்றன. மற்றோர் வழக்கை அடைப்புக்குறிக்குள் தருதல் நலம்.):) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:26, 29 மார்ச் 2013 (UTC)
புதுக்கோட்டையில் உள்ள எங்கள் ஊரின் பக்கத்து ஊர் வைரம்பட்டி. அங்கு இருக்கும் சாமி வைரவர். அந்த ஊரில் இருக்கும் நண்பர் பெயர் வைரவன் :) வைரவர் என்பது பொது வழக்கில் உள்ள பெயர் தான்--இரவி (பேச்சு) 14:15, 29 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பீட்சன_பைரவர்&oldid=1417817" இலிருந்து மீள்விக்கப்பட்டது