பேச்சு:பிரி புனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புனல் தமிழ்ப் பெயரா இல்லை funnel என்பதில் இருந்து வந்ததா? அறிந்து கொள்ளும் ஆர்வத்துக்காக மட்டுமே இக்கேள்வி. நன்றி--Ravidreams 18:12, 26 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் அல்ல என்றுதான் நினைக்கிறேன். சரியான தமிழ்ச்சொல் இருப்பதாகவும் தெரியவில்லை. செல்வாதான் விளக்க வேண்டும்.Mayooranathan 18:21, 26 பெப்ரவரி 2007 (UTC)

புனல் என்று தமிழில் (?) சொல் இருக்கிறது. ஆனால், அதற்கு ஆறு என்று பொருள் என்று நினைக்கிறேன். இந்தப் புனல் ஆங்கிலச் சொல்லுக்கான ஒலிப்பு நெருக்கத்தால் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்--Ravidreams 18:29, 26 பெப்ரவரி 2007 (UTC)


சிங்களத்தில் Funnel என்பதைப் புனல் என்றே கூறுகின்றனர். தமிழ் நாட்டில் எவ்வாறு கூறுகின்றார்களோ தெரியவில்லை--Umapathy 18:33, 26 பெப்ரவரி 2007 (UTC).

மதராஸ் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் இச் சொல் இந்தப் பொருளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. Mayooranathan 19:16, 26 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ்நாட்டுப் பாடப் புத்தகத்திலும் புனல் தான். இந்தப் பெயரை மாற்றச் சொல்வதற்காக நான் இந்த உரையாடலை தொடங்க வில்லை. மொழி மூலத்தை அறிந்து கொள்ளும் ஆவல் தான். புனல் என்பது தமிழக கிராமப்புறங்களிலும் funnelஐ குறிக்கப் பயன்படுகிறது. எனவே கட்டுரை இதே பெயரில் தொடர வேண்டும்.--Ravidreams 19:42, 26 பெப்ரவரி 2007 (UTC)

புனல் என்பது ஆங்கிலச் சொல் funnel என்பதின் தமிழ் வடிவம்தான். தமிழில் புனல் என்றால் நீர். புனலாடி என்றால் நீராடி (பொதுவாக ஆறுநீர், அருவி நீர் என்று ஓடும் நீரைக் குறிக்கும்). புனல் என்னும் கருவியானது வாய் குறுகிய ஒன்றின் வழியே நீர், எண்ணெய் போன்ற நீர்மங்களை எளிதாக ஊற்ற ஒருபுறம் வாய் அகன்றும் மறுபுறம் வாய் குறுகியும் உள்ள ஒரு சிறு குழாய் ஆகும். இதனை விரிவாய்க் குழாய் அல்லது விரிவாய் ஊற்றி, விரியூற்றி, விரிவாய், விரிகுழல், விரிசி என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் புனல் என்று புழக்கத்தில் உள்ளதாலும் புனல்வடிவப் (நீர்ம வடிவப்) பொருட்களை ஊற்றப் பயன் படுவதாலும் தமிழ்வழி பொருள்கொண்டும் ஏற்றுக் கொள்ளலாம். புனல் என்றே இருப்பதை நானும் ஒப்புகின்றேன். --செல்வா 03:15, 27 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரி_புனல்&oldid=107725" இருந்து மீள்விக்கப்பட்டது