பேச்சு:பிராங்க்புர்ட் தமிழ் மன்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பை தமிழ் மன்றம் (ஆண்டு மலர்) என மாற்றக் கோருகிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 13:45, 30 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 04:51, 10 மார்ச் 2012 (UTC)
ஆண்டு மலருக்காக இக்கட்டுரை இருப்பதால், பல்வேறு தகவல்களை இணைத்து மேலும் செம்மைச் செய்ய இயலாததாக இருக்கிறது. இக்கட்டுரையின் வளர்ச்சியை வரும்காலத்தில் கடைபிடித்தல் சிரமமாகும். எனவே தமிழ் மன்றம் என்ற மன்றத்தினைப் பற்றியதாக மாற்றிவிட்டு, அதில் சிறு பிரிவாக தமிழ் மன்றத்தின் ஆண்டுமலரைப் பற்றி இணைக்கலாம். தமிழ் மன்றம் என்று வரும் போது, அது தொடங்கப்பட்ட நோக்கம், ஆண்டு, தொடங்கிய நபர்கள், தற்போதைய செயல்பாடுகள் என கட்டுரை விரிவடையும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:02, 22 மார்ச் 2015 (UTC)
ஜெகதீசுவரனின் பரிந்துரை நல்லது. பிராங்க்போர்ட் தமிழ் மன்றம் என்று தலைப்பை மாற்றலாம். அம்மன்றம் இப்போதும் இயங்குகிறதா அல்லது 2-3 ஆண்டுகளுடன் நின்று போயிற்றா? போதிய தகவல்கள் இல்லாதவிடத்து கட்டுரையை நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். வெறுமனே ஆண்டு மலருக்கான இணைப்புகளை மட்டும் கொண்ட தனிக் கட்டுரை தேவையில்லை. பயனர்:Chandravathanaa கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 07:02, 22 மார்ச் 2015 (UTC)


பிராங்க்போர்ட் தமிழ் மன்றம் என்று மாற்றுவது நல்லதே Kanags. அதன் இருப்பு, செயற்பாடுகள் பற்றி அறிந்து விட்டு மீண்டும் எழுதுகிறேன். --Chandravathanaa (பேச்சு) 11:34, 22 மார்ச் 2015 (UTC)