பேச்சு:பிசுமில்லா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • இறப்பு நாளை சரிபார்க்க வேண்டும். ஆகத்து 22தேதியில் இறந்ததாக அறிகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 04:12, 9 சூலை 2013 (UTC)
21 அதிகாலையிலேயே இறந்தார். [1]. அன்றே அவரது இறுதி நிகழ்வுகளும் இடம்பெற்றன.--Kanags \உரையாடுக 08:20, 9 சூலை 2013 (UTC)
குறிப்புத்தொடுப்புக்கு நன்றி.கனகு! ஆங்கில விக்கிப்பீடியாவில் அகவை தவறாக உள்ளது. மேலும் அவர் பற்றிய அறிய இணையத்தில் உசாவியபோது, அம்மாமனிதனின் எளிமை, கூட்டுக்குடும்ப வாழ்க்கை, கலைஞர்களுக்கு இருக்கும் பொருளாதார குறைவு, மதம் பற்றிய அவரது பார்வை, வாழ்வியல் உண்மைகளை பி.பி.சியில் நிகழ்படமாகக் கண்டு கண்கள் பனித்தன. இயன்றவரை இக்கட்டுரையை வளர்க்க வேண்டும். --≈ உழவன் ( கூறுக ) 17:23, 9 சூலை 2013 (UTC)

மேற்கோள்[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பது போல இங்கு குறிப்புகளை மேற்கோள்களாகக் கொடுத்தால் வழுவருகிறது.அங்கு இந்தஇணைப்புத்தான் கொடுக்கப்பட்டிருந்தது. வழுநீங்க என்ன செய்யவேண்டும்?--≈ உழவன் ( கூறுக ) 17:43, 9 சூலை 2013 (UTC)

சரி செய்துள்ளேன், தகவலுழவன். மேற்கோள் ஒன்றை முதன் முதலாக ஒரு பக்கத்தில் பயன்படுத்தும்போது பெயரிட்டுப் பலமுறை பயன்படுத்தலாம். ஆங்கில விக்கியில் அவ்வாறு செய்திருந்தனர். இரண்டாவது முறை வெறும் பெயர்தான் இருக்கும் சான்றுக்கான சுட்டி இருக்காது. அந்த உரையைக் கவர்ந்து வேறு பக்கத்தில் (எ.கா. தமிழ் விக்கிக் கட்டுரையில்) ஒட்டும்போது முதல்முறை அவர்கள் அளித்திருக்கும் தகவல்கள் இங்கு இருக்காது. அதனால் வரும் வழு. நான் செய்துள்ள மாற்றத்தைப் பார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 03:24, 10 சூலை 2013 (UTC)
நன்றி!அழகு(சுந்தர்!)இனி அவ்விதம் வேறு கட்டுரைகளில் வரும் போது, நான் பின்பற்ற வேண்டியன ஏதும் உள்ளதா? அல்லது தமிழ்விக்கிப்பீடியா முழுவதும் நீங்கள் செய்த மாற்றம் ஆளுமை செய்யுமா? --≈ உழவன் ( கூறுக ) 03:42, 10 சூலை 2013 (UTC)
தகவலுழவன், இனி வெறும் <ref name="ஏதாவது"/> என்று இருக்கும்போது மூலவிக்கிக் கட்டுரையில் அந்தப்பெயரில் அதே சான்றுக்கான முந்தைய மேற்கோளை எடுத்துப் பயன்படுத்துங்கள். காட்டாக, ஆங்கிலவிக்கியில் பிசுமில்லா கான் கட்டுரையில் நீங்கள் பெற்ற த இண்டிப்பெண்டண்டு சான்றை இருமுறை பயன்படுத்தியுள்ளார்கள். இரண்டாம் முறை வெறும் பெயரைக் கொண்டு குறித்திருந்தார்கள். நீங்கள் முன்னதை எடுத்துப் பார்த்தால் பெயரோடு மற்ற தகவல்களும் இருக்கும். அதை மேற்கோளாகப் பயன்படுத்தினால் சரியாக வரும். -- சுந்தர் \பேச்சு 04:01, 10 சூலை 2013 (UTC)
ஓ..சரி.சரி.. மேற்கோளை மறுமுறை உள்ளீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், சுருக்கமாக நீங்கள் சொல்லியது போல பயன்படுத்த வேண்டும். அதே கட்டுரையில், மறுபடியும் விரிவான விவரங்களுடன் பயன்படுத்தத் தேவையில்லை. ஆனால், வேறு கட்டுரையில் அதே மேற்கோளை பயன்படுத்த வேண்டுமெனில், ஒருமுறை விரிவான உள்ளீடு இட்டே ஆக வேண்டும் என்பதை தெளிவாக அறிந்தேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.சுந்தர்! மீண்டும் பிறிதொரு பக்கத்தில் சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 04:14, 10 சூலை 2013 (UTC)
நல்லது தகவலுழவன். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளது மிகச்சரி. -- சுந்தர் \பேச்சு 04:49, 10 சூலை 2013 (UTC)