பேச்சு:பிசின்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீலம் என்பதற்கு மாறாக வழக்கில் உள்ள பிசின் என்னும் சொல்லை தலைப்பாக இடப் பரிந்துரைக்கிறேன். மரப்பிசின் என்பது நல்ல வழக்கில் உள்ள சொல். கீலம் என்பது வடமொழிப் பிராகிருத, சமசுக்கிருதச் சொல். இது க்ஷீர (= நெய், நெய் போன்ற பொருள்) என்னும் சொல்வழி வந்தது. ஆனால் கீலம் என்றால் சிறு துண்டு (< கிழி) என்று தமிழ்வழிப் பொருள் கொண்ட தமிழ்ச்சொல்லும் உள்ளது. கந்தல் துணி, சிறு துணிக்கு கீலம் என்பர். பொற்கிழி என்பது பொன்முடிப்பு. அதில் வரும் கிழி ஒரு சிறு அழகிய துணியைக் குறிக்கும். ஆனால் கீலம் என்பது எந்தச் சிறு கந்தல், கிழிவுத் துணியையும் சுட்டும். ஆனால் பிசினை கீலம் என்பது வடமொழி பிராகிருத-சமசுக்கிருதச்சொல் வழக்கு. --செல்வா 14:01, 14 ஆகஸ்ட் 2009 (UTC)


தகவலுக்கு நன்றி . நானும் மற்றிடதான் எண்ணினேன் . --இராஜ்குமார்
ரெசின் என்ற கட்டுரை ஒரு இணையத்தளத்தில் இருந்து அப்படியே பிரதி எடுத்து எழுதியிருந்ததானல், அக்கட்டுரையை வெளி இணைப்பாக பிசின் கட்டுரையில் இணைத்து, வழிமாற்றுக் கொடுத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:43, 8 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி. --இராஜ்குமார் 06:48, 8 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிசின்&oldid=506608" இலிருந்து மீள்விக்கப்பட்டது