பேச்சு:பா. ராகவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. ராகவன் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

விக்கிபீடியா நடைக்கு ஏற்ப வணிக இணைப்புகளை நீக்கியும், உயர்வு நவிற்சி அணிகளைத் தவிர்த்தும், சுருங்கக் கூறியும் இக்கட்டுரையில் பல மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. மாற்றி எழுதிய வடிவத்தை கீழே தருகிறேன். கட்டுரையாசிரியரின் ஆட்சேபணைகள் இருந்தால் தெரிவிக்கலாம். நிறைய மாற்றங்கள் உள்ளதால் அவரின் கருத்தறிந்த பின் மாற்றங்களை செயல்படுத்தலாம் எனக் கருதுகிறேன்.

ரவி, உங்களின் கருத்தை அமோதிக்கின்றேன். உங்களின் மாற்றங்களும் நன்று. நீங்கள் கூறுயபடியே கட்டுரையாளரின் கருத்தையும் உள்வாங்குவதும் முக்கியமே. --Natkeeran 19:49, 17 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தொடுப்பும் ஒரே தொடரின் தொகுப்பாகும். ஒன்று தனியொருவரின் வலைப்பதிவில் பதியப்பட்டது. இன்னொன்று பிரத்யேகமாக அதற்காக தொடங்கப்பட்டது. ஆகவே சற்று மாற்றியமைத்திருக்கிறேன். சரியா என்று பாருங்கள். "-- முஃப்தி 07:08, 18 நவம்பர் 2005 (UTC)"[பதிலளி]

பரிந்துரைக்கப்படும் திருத்தம்

பா. ராகவன். (Pa. Raghavan) (பிறப்பு-அக்டோபர் 8, 1971; சென்னை) தமிழ் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். இயந்திரவியல் பட்டப்படிப்பு முடித்தவர். அமுதசுரபி, தாய் போன்ற இதழ்களில் சில காலம் பணியாற்றிவிட்டு, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கல்கியில் சேரந்து பணியாற்றத் தொடங்கினார். திரைப்பட விமரிசகராக நுழைந்து, 2000ம் ஆண்டு வரை [கல்கி]யில் துணையாசிரியராகப் பணியாற்றிய பா.ராகவன், அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக இரண்டாண்டுகாலம் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து 'ஜங்ஷன்' என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பாசிரியராக ஓராண்டுகாலம் பணியாற்றினார். அதன்பின் பத்திரிகைப் பணியிலிருந்து விலகி பதிப்புத்துறைக்கு வந்து. New Horizon Media நிறுவனத்தின் அங்கமான கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகப் பணிபுரிகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பா._ராகவன்&oldid=3874900" இலிருந்து மீள்விக்கப்பட்டது