பேச்சு:பால் வழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால் வழி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
பால் வழி என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பால் வெளியா பால் வழியா, ஆங்கிலத்தில் way என்பது குறிப்பிடத்தக்கது. --Natkeeran 12:39, 8 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

பால் வெளி என்றுதான் அறிந்திருக்கிறேன்.
--Chandravathanaa 15:19, 8 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

பால் வழி தான் பால் வெளி அல்ல. பால் வழி என்பது Milky Way என்பதன் மொழிபெயர்ப்பு. மயூரநாதன் 17:29, 8 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

Way என்பதற்கு நேரடியான தமிழ் மொழியாக்கம் வழி. ஆனால் பால் வெளி என்பது வழக்கத்தில் இருக்கும் சொல். கூகிளில் போட்டு பாத்தால் பொருள் வித்தியாசம் தெரிகிறது. --Natkeeran 21:24, 8 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

வெண்ணிறத்தில் அகலமான பட்டையாக வழியை நினைவு படுத்தியதால் தான் முதலில் இலத்தீன் மொழியில் via lactea (via lactea : via, way + lactea, feminine of lacteus, milky) என்றனர். இதைப் பின்னர் ஆங்கிலத்தில் milkyway என மொழி பெயர்த்தனர். இங்கே "வெளி" என்பதற்கு எந்தப் பொருளும் கிடையாது என்பது எனது கருத்து. தமிழில் மொழிபெயர்த்த சிலர் வான் வெளி தொடர்பான விடயத்தில் "வழி"க்கு என்ன வேலை என்று நினைத்து "வெளி" ஆக்கியிருக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். நிற்க கீழே இணைப்புகள் சில தந்திருக்கிறேன். பார்க்கவும்.

இங்கே பார்க்கவும். இது தமிழ் இணையப் பல்கலைக் கழக அகராதியிலிருந்து எடுக்கப்பட்டது என எண்ணுகிறேன். மயூரநாதன் 16:29, 9 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
இதையும் பாருங்கள்]. மயூரநாதன் 16:29, 9 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பால்_வழி&oldid=2289656" இலிருந்து மீள்விக்கப்பட்டது