பேச்சு:பால்வினை நோய்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Wikipedia-logo-v2-bw.svg பால்வினை நோய்கள் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பாலியல் நோய்கள் என்ற விரிவான கட்டுரை இருப்பதால் இதனை நீக்கலாம். --கோபி 19:46, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

பாலியல் நோய்கள் என்பதை விட பால்வினை நோய்கள் என்ற பெயர் பொருத்தமாகப் படுகிறது. அந்தக் கட்டுரை உள்ளடக்கங்களை இந்தத் தலைப்புக்கு நகர்த்தலாம்--ரவி 19:49, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
பால்வினை என்றால்? --கோபி 19:52, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
கோபி, இது ஒரு நல்ல கேள்வி :) ஆனால் எனக்கு சரியான பதில் தெரியவில்லை :) பாலியல் என்பது sexology அல்லது sexual என்ற பொருளில் வரும். பால்வினை என்பதை sexually transmitted என்பது போல் பொருள் கொள்ளலாம். பால்வினை என்பது தமிழ்நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல் தான்.--ரவி 19:57, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
வினை என்பது செயல் எனப் பொருள்படும் என நினைக்கிறேன். ஆதலால் பாலியற் செயலால் பரவும் நோயைப் பால்வினை நோய் என்கிறார்கள் என நினைக்கிறேன். எனக்குப் பாலியல் நோய் என்பது பரிச்சயமானது என்பதால் அத்தலைப்பில் கட்டுரை உருவாக்கினேன். பொருத்தமான மாற்றஞ் செய்துவுடுக. ஒரே விடயம் பற்றி இரு கட்டுரைகள் அவசியமில்லை. --கோபி 20:01, 25 ஆகஸ்ட் 2006 (UTC)