பேச்சு:பால்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பதிப்புரிமைச் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.--பாஹிம் (பேச்சு) 19:46, 2 அக்டோபர் 2012 (UTC)

வணக்கம். இதில் பதிப்புரிமைச் சிக்கல் இருபப்தாக தெரியவில்லை. இக் கண்டுரையை மேன்படுத்தலாம். தமிழ் மொழியை உலகறிய செய்த இன்றைய ஆதாரம் என்று இவற்றை சொல்லலாம். --சிவம் 20:28, 2 அக்டோபர் 2012 (UTC)

மன்னிக்கவும் இக் கட்டுரை ஆரம்பிக்க பட்டுள்ளது... பால்ராஜ் ஆனால் தரவுகள் குறைவாக உள்ளன..--சிவம் 20:33, 2 அக்டோபர் 2012 (UTC)


பதிப்புரிமை தெளிவாக மீறப்பட்டுள்ளது. பங்களித்த பயனர் கருத்துக் கூறினால் மீள் பரிசீலிக்கப்படும். --Natkeeran (பேச்சு) 20:41, 2 அக்டோபர் 2012 (UTC)
சிவம், நீக்கப்பட்ட கட்டுரையில் உள்ள விடுபட்ட தகவல்களை மட்டும் உங்கள் எழுத்தில் இக்கட்டுரையுடன் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 21:04, 2 அக்டோபர் 2012 (UTC)

நன்றி கனக்ஸ். கண்டிப்பாக செய்கிறேன்.--சிவம் 21:34, 2 அக்டோபர் 2012 (UTC)

நடுநிலைமை[தொகு]

இக்கட்டுரையிலும் தேன்மொழி ராசரத்தினம், கிட்டு, இசைப்பிரியா போன்ற கட்டுரைகளிலும் பிறப்பு - தமிழீழம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழம் என்ற தன்னாட்சிப் பகுதி ஒரு காலத்திலும் இருந்ததில்லை. விடுதலைப் புலிகளும் தமிழீழம் என்று தனி நாடு கோரினார்களே தவிர தனி நாட்டுப் பிரகடனம் செய்யவில்லை. இந்நிலையில் பிறப்பு - தமிழீழம் எனக் குறிப்பிடுவது ஒரு பக்கச் சார்பான கருத்தாகவே காணப்படுகிறது. அவ்வாறே பல கட்டுரைகளில் வீரச் சாவடைந்தார், வீர மரணமடைந்தார் என்பன போன்ற சொற் பயன்பாடுகளைக் காண முடிகிறது. வெறுமனே கொல்லப்பட்டார் என்று சொல்லாமல் வீர மரணமடைந்தார் என்று கூறுவது நடுநிலையற்றது என்பது தெளிவு.--பாஹிம் (பேச்சு) 02:35, 16 மார்ச் 2015 (UTC)

யாசிர் அரஃபாத் கட்டுரையில் பாலத்தீனம் என்பது தேசியமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தீனம் என்று ஒரு நாடு இல்லை. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இவ்வாறே உள்ளதால் இவ்வாறான நடைமுறைக்கு உலக ஏற்பு உண்டு என்று கருத இடமுண்டு. தமிழீழம் List of historical unrecognized states என்று குறிப்பிடப்படுவதையும் காணலாம். மற்றபடி, "வீரச் சாவடைந்தார், வீர மரணமடைந்தார்" போன்ற சொல்லாடல்களைக் காணும் இடத்து நீங்களே நடுநிலையுடன் திருத்தி எழுதலாம். நன்றி.--இரவி (பேச்சு) 07:14, 16 மார்ச் 2015 (UTC)
இப்பொழுதும் சிக்கல் தீரவில்லை, இரவி. தேசியம் என்பது வேறு தேசம் என்பது வேறு. தேசியம் என்பது எப்போதும் வெறும் கருதுகோளே தவிர வேறில்லை. ஆனால் தேசம் அல்லது நாடு என்பது தனியான தன்னாட்சிப் பகுதி. அதற்கென்று தனியான ஆட்புலமும் ஆட்சியும் காணப்படும். பலத்தீனத் தேசியத்தைக் கொண்டோர் உலகில் எந்நாட்டிலும் இருக்கலாம். பலத்தீனத் தேசம் என்பது வேறு. யாசிர் அரபாத் பற்றிய கட்டுரையில் பலத்தீனத் தேசியம் என்பதைத்தான் குறிப்பிட்டுருக்கிறார்களே தவிர பலத்தீன நாட்டையல்ல. இங்கேயும் தமிழ்த் தேசியம் என்ற கருதுகோளைக் கொண்டோர் பல்வேறு நாடுகளிலும் இருப்பதை நான் மறுக்கவில்லை. மாறாக, தமிழீழம் என்றொரு நாடு ஒரு காலத்திலும் இருக்கவேயில்லை. அவ்வாறே அதற்காகப் போராடிய விடுதலைப் புலிகளும் தமிழீழம் என்றொரு தனி நாட்டைப் பிரகடனப்படுத்தவேயில்லை. பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒன்றை ஒரு சிலர் அமைத்திருக்கிறார்கள். அதுவும் நாடு என்ற வரையறைக்குள் வரவில்லை.--பாஹிம் (பேச்சு) 09:02, 16 மார்ச் 2015 (UTC)
தமிழீழம் என்பதனை தேசியமாக குறிப்பிடலாம் என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. தமிழீழம் கட்டுரை அதனை ஒரு நாடு என்று எங்கேயும் நடுநிலைமை மீறி குறிப்பிடவில்லை. //தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் எனப்படுவது இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களை உட்பட்ட நிலப்பகுதியைக் குறிக்கும்.// என்றே வரையறுக்கிறது. தென்னிந்தியா, வட இந்தியா, தலைநகரப் பகுதி என்று விக்கிப்பீடியாவில் பல இடங்களில் நிலப்பகுதியை அடிப்படையாக வைத்து குறிப்பிட்டே வருகிறோம். குறிப்பிட்ட தகவல் பெட்டியில் பிறப்பு, இறப்பு இடங்களுக்கு உலக ஏற்பு பெற்ற நாட்டின் பெயரைச் சேர்க்க வேண்டும் என்றால் இலங்கை என்று குறிப்பிடலாம். ஆனால், தமிழீழம் என்று அனைவராலும் நன்கு புரிந்துகொள்ளப்படக்கூடிய ஒரு நிலப்பகுதியைக் குறிப்பது நடுநிலை மீறலாகாது.--இரவி (பேச்சு) 12:06, 16 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பால்ராஜ்&oldid=1818603" இருந்து மீள்விக்கப்பட்டது