பேச்சு:பாலுறுப்பு உண்ணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரசவம் என்பதற்கு நல்ல மாற்றுத் தமிழ்ச் சொல் உண்டா? பிரசவம் தமிழ்ச் சொல்லா?--ரவி 17:08, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

மகப்பேறு (எ-கா: மகப்பேறு மருத்துவ மனை)--C.R.Selvakumar 17:22, 9 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

பிரசவம் தமிழா இலையா தெரியவில்லை. ஆனால் மகப்பெறு பரவலாகப் பயன்படும் சொல்லாகும். மாற்றத்துக்கு நன்றி. --கோபி 18:06, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

பிரசவம் தமிழில்லை. தமிழில் பிர என்று தொடங்கும் சொற்கள் மிகக்குறைவு. தமிழில் ப என்று தொடங்குவது வடமொழியில் ப்ர என்று மாறும் அதனை தமிழில் எடுத்தாளும்பொழுது பிர என்று மாற்றுகிறோம். எனவே, பிரதி, பிரச்சாரம், பிரச்சினை, பிரசாதம், பிரபலம், பிரமாதம், பிரபு, பிரளயம், பிரபஞ்சம், பிரமிப்பு, பிரத்யேகம், பிரசுரித்தல் போன்ற சொற்கள் தமிழல்ல.

விளக்கத்துக்கு நன்றி செல்வா. எனது தமிழறிவு மிகவும் சாதரணமானதே. முறையாகக் கற்றவனல்லன். ஆயினும் முடிந்தளவு தூய தமிழையே பயன்படுத்த முயற்சிக்கிறேன். உங்கள் விளக்கங்களுக்கு (இந்தப் பக்கத்தில் விளக்கியவை மட்டுமல்லாமல் ஏனையவற்றுக்கும்) மீண்டும் என் நன்றிகள். --கோபி 18:47, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

அன்புள்ள கோபி, மற்றும் நண்பர்களே, வடமொழியை அறவே விலக்க வேண்டியதில்லை. அதே போல ஆங்கிலம், மற்றும் பிற மொழிச்சொற்களையும் அறவே விலக்கவும் வேண்டியதில்லை. தேவைக்கேற்ப எடுத்தாளுவது நல்லதே. என்ன கருத்தில் கொண்டால் நல்லதென்றால். நல்ல தமிழ்ச்சொல் இருந்தால் அதனை ஆளுவதால் மிகுந்த பயன் தரும். தமிழ்த்தூய்மையை விட, ஒருசொல் பல சொல்லாக கிளைக்கவும், பிற தமிழ்ச்சொற்களுக்கு வலுவூட்டியும் நிற்கும். ஒன்றுக்கு ஒன்று துணையாக வலு கூட்டி நிற்கும். இதனை inner-linguistic-ecology (ஒத்தியக்க, ஒத்திணக்க சூழுயிர்ப்பு). மேலும் பொதுவாக தமிழ்ச்சொற்கள் எளிதாகவும் உட்பொருளை உணர்த்த வல்லது. நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் ஒரு சிறு திருத்தம். முயலுகிறேன் என்று சொல்ல வேண்டும் அல்லது முயற்சி செய்கிறேன் என்று சொல்ல வேண்டும். முயற்சிக்கிறேன் என்பது தவறான ஆட்சி. மிகப்பலரும் பயன்படுத்தும் ஒரு தவறான சொல்லாட்சி (அண்மையில் நற்கீரனும் இப்படிப் பயன்படுத்தினார். பல பெரிய எழுத்தாளர்களும் இப்பிழையைச் செய்கிறார்கள்). நீங்கள் தெரிவித்த நன்றிக்கு மகிழ்ச்சி. கோபி, தாங்கள் விக்கிக்கு நல்கும் கடும் உழைப்பைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். நான் இங்கே எத்தனையோ கற்றுக் கொண்டுள்ளேன், கோபி, உங்களுக்கும் மற்றும் எல்லோருக்கும், என் மனமார்ந்த நன்றிகள். 2-3 வார்ங்கள் அதிகம் பங்கு கொள்ள இயலாது.

தலைப்பு மாற்றம் வேண்டி[தொகு]

இந்தக் கட்டுரை Genital warts க்குரிய கட்டுரையாக உள்ளது. உண்ணிகள் என்பவை ticks ஆக இருப்பதனால், இந்தக் கட்டுரையின் தலைப்பை பாலுறுப்பு பருக்கள் அல்லது பாலுறுப்பு மருக்கள் என மாற்றலாம் என நினைக்கின்றேன். கருத்துக்கள் தேவை.--கலை (பேச்சு) 10:38, 4 சூன் 2013 (UTC)[பதில் அளி]