பேச்சு:பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பு "விலைமாதர்களுக்கெதிரான வன்முறை" என்ற தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

  • கட்டுரையின் உள்ளடக்கத்தில், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலான பாலியல் பெண்தொழிலாளர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கட்டுரையானது ஆண், பெண் என இருபால் பாலியல் தொழிலாளர்களுக்கும் பொதுவானது.
  • முக்கியமாக "விலைமாதர்" என்று பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் பெயரை நான் எதிர்க்கிறேன். அது ஒரே சொல்லாகவும், சுருக்கமாகவும் அமைகிறது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும், சமுதாயத்தில் பெண்களை விலைமாதர், குலமாதர் என இரு வகைப்படுத்தும் விதமான இழிவைத் தருகிறது. அனைத்து தொழிலாளர்களியும்போல அவர்களும் தொழிலாளர்களே, அவர்கள் விலைபேசப்படக்கூடிய "நுகர்பொருள்" அல்லர் என்பது எனது வருத்தத்துடன் கூடிய பதிவாகும்.
  • தயவுசெய்து, தமிழ் விக்கியில் பெண்களுக்கான இந்த வரலாற்று மாதத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட இந்த "விலைமாதர்" என்ற சொல்லைத் தவிர்க்கலாமே!

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கிலோ அல்லது யாரையும் குற்றஞ்சாட்டும் வகையிலோ நான் இதைப் பதிவு செய்யவில்லை என்பதையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாற்றுக்கருத்துகள் இருந்தால் தெரிவிக்கவும்.நன்றி. --Booradleyp1 (பேச்சு) 04:04, 13 மார்ச் 2015 (UTC)

Booradleyp1, இங்கு விபச்சாரிகளுக்கு எதிரான வன்முறை என்று தலைப்பு இருந்தது. தமிழ் சொல்லைப் பயன்படுத்தலாமே என்று விலைமாதர்களுக்கு எதிரான வன்முறை என்று தலைப்பிட்டேன். ஆனால், அதன் பின் இத்தகைய கண்ணோட்டம் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கத் தவறி விட்டேன் :( தனிப்பட்ட முறையிலும் இனி விலைமாதர் என்ற சொல்லைத் தவிர்க்கிறேன். நடுநிலை நோக்குடன் உரிய மாற்றத்தைச் செய்தமைக்கு நன்றி.--இரவி (பேச்சு) 05:39, 13 மார்ச் 2015 (UTC)
👍 விருப்பம் பெண்ணியம் நோக்கி நாம் செல்ல வேண்டிய தொலைவினை இது உணர்த்துகின்றது. நானிழைத்தப் பிழைக்கு உண்மையிலேயே வருந்துகின்றேன். சரியான பாதைக்கு இட்டுச் சென்றமைக்கு மிகுந்த நன்றிகள் !!--மணியன் (பேச்சு) 05:48, 13 மார்ச் 2015 (UTC)
இரவி, மணியன், இருவரின் புரிதலுக்கும் நன்றி.

ஒரு வேண்டுகோள், முடியுமானால் விலைமாதர்க்கெதிரான வன்முறை என்ற வழிமாற்றை நீக்கிவிடுங்களேன். அண்மைய மாற்றங்களின் மேற்புறம் அதைக்காணும்போது மனது வலிக்கின்றது.--Booradleyp1 (பேச்சு) 13:44, 13 மார்ச் 2015 (UTC)

விலைமாதருக்கெதிரான வன்முறை என்பதை நீக்க வேண்டாம். பாலியல் தொழிலாளர் என்று தற்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பதம் பின்னொரு காலத்தில் தற்காலத்தில் விலைமாதர் எனும் போது எழும் அதே உளப்பாங்கை எழச் செய்யுமென்பது திண்ணம். பிறிதொரு காலத்தில் மற்றொரு சொல்லைப் பயன்படுத்தினால், அப்போதும் காலப்போக்கில் அதே மாற்றம் ஏற்படுவதை மாற்ற முடியாது.--பாஹிம் (பேச்சு) 14:07, 13 மார்ச் 2015 (UTC)
Booradleyp1, உங்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப குறிப்பிட்ட வழிமாற்று நீக்கப்பட்டுள்ளது. பாகிம், ஆவணப்படுத்தல் நோக்கில், பாலியல் தொடர்பான சொற்களை பால்வினைத் தொழில் என்ற முதன்மைக் கட்டுரைக்கு மட்டும் வழிமாற்றினால் போதும். தொடர்புடைய எல்லா கட்டுரைகளுக்கும் பல்வேறு வழிமாற்றுகளை உருவாக்கத் தேவையில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இதுவே வழக்கமாக உள்ளது.--இரவி (பேச்சு) 15:07, 13 மார்ச் 2015 (UTC)