பேச்சு:பார்த்திபன் கனவு (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐயையோ, அப்படியென்றால் பார்த்திபேந்திர சோழன் கற்பனை பாத்திரமா?

//நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.//

நான் வரலாற்று மன்னன் என்றல்லவா நினைத்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் 16:52, 29 சனவரி 2012 (UTC)

நானும் அவ்வாறுதான் நினைக்கிறேன் ஐயா.. புத்தகத்தின் பதிப்புரையில் ஒருசில வரலாற்று மாந்தர்களை மட்டும் கொண்டு முழுக்க கற்பனைவடிவம் கொண்ட படைப்பு என்கிறது... அப்படியெனில் அவர்கள் வரலாற்று மனனர்கள் தானே? --shanmugam 17:02, 29 சனவரி 2012 (UTC)

இக்கட்டுரையிலுள்ள உண்மைச் சரித்திரப் பாத்திரங்கள் பட்டியலிலும் சோழர் கட்டுரையிலும் பார்த்திபன், விக்கிரமன் பற்றிய விவரங்களில்லை. முதல் இடைக்கால சோழனாக விசயாலயனே வருகிறான்.கி.பி. 848-871. ஆனால் மகேந்திரவர்மன் காலம் (கி.பி. 600 முதல் 630 வரை). அப்படியென்றால் 650-850 2 நூற்றாண்டு வரையுள்ள சோழர்கள் யார்? யார்?--தென்காசி சுப்பிரமணியன் 17:16, 29 சனவரி 2012 (UTC)