பேச்சு:பாரீசுவ ஜீனாலயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:Arulghsr

நீங்கள் கொடுத்திருந்த இரண்டு படங்களையும் பார்த்தேன். மானுடன் இருப்பது சாந்திநாதர் கதாப்பாத்திரம்.

மற்றொரு படத்தில் இருப்பதில் நீங்கள் குறிப்பிட்டது போல் பாம்பு இல்லை. அது வழக்கமாக சைன தீர்த்தங்கரர் பாத்திரங்களில் இருக்கும் படிகள் போன்ற அமைப்பே. அதனால் இந்த சைனர் யாரென உறுதியாக சொல்ல இயலாது. அந்த தலை பின்னாடி இருக்கும் வட்டம் நீலத்தாமரையாக இருந்தால் நாமிநாதர். வழக்கமான தாமரையாக இருந்தால் பத்மபிரபர். மேலே பிறையும் காணப்படுவதால் இது சந்திரபிரபராகவும் இருக்கலாம்.

ஆனால் கோயில் பெயர் அங்கொரு பார்சுவநாதர் சிற்பம் கட்டாயமாக இருக்க வேண்டுமென ஊகத்தை கொடுக்கிறது. அதனால் தேடிப்பாருங்கள். பல கற்பனை பாத்திர தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள் அங்கிருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:15, 19 செப்டம்பர் 2016 (UTC)

பயனர்:தென்காசி சுப்பிரமணியன் படங்களை ஆராய்ந்து கருத்து கூரியமைக்கு நன்றி தாங்கள் கூறியபடி மீண்டுமொருமுறை வேறு சிற்பங்கள் உள்ளனவா என பார்க்கிறேன் நன்றி arulghsrArulghsr (பேச்சு) 10:09, 20 செப்டம்பர் 2016 (UTC)

தென்காசி, நீங்கள் சமணம் என்ற சொல்லை சைன என்ற சொல்லாக மாற்றி வருகிறீர்கள். சமணமும் சைனமும் வெவ்வேறு என நீங்கள் கருதுகிறீர்கள் போல் தெரிகிறது. இந்தப் பிரச்சினையை இப்போது நான் கிளப்பவில்லை. வேறு ஒரு நேரத்தில் தீர்க்கலாம். ஆனால், படிமங்களின் பெயர்களையும் நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள். அப்படி மாற்றினால் படிமங்கள் கட்டுரையில் தெரியாமல் போகிறது என்பது நீங்கள் அறியாததல்ல. நான் கூறுவது விளங்காவிட்டால் கேளுங்கள். இன்னும் தெளிவாகக் கூறுகிறேன்.--Kanags \உரையாடுக 21:51, 19 செப்டம்பர் 2016 (UTC)

நீங்க மேல சொன்னதுல வழக்கமான உங்கள் சுட்டிக்குழந்தை கேள்விகள் எதுமில்லை. கேள்வியா கேட்டுட்டு விளக்கம் கொடுத்ததா சுட்டிடிவி கதை விடவும் இல்லை. அதனால் நல்லாவே புரியும். மாற்றுனதுக்கு நன்றி. உங்களுக்கு இந்த பதில் போதவில்லைனா சொல்லுங்க. இன்னும் விளக்கமா பாடம் எடுக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 01:59, 20 செப்டம்பர் 2016 (UTC)

நன்றி. உங்களுக்கு விளங்கியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.--Kanags \உரையாடுக 02:19, 20 செப்டம்பர் 2016 (UTC)

கேள்விகளை மட்டும் கேட்டுட்டு விளக்கம் கொடுத்ததா உங்களையே மெச்சிக்கொள்ளும் சுட்டிக்குழந்தை வழக்கம் போய் இப்ப இயல்பான நிலையில் நீங்க விளக்கம் கொடுப்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:36, 20 செப்டம்பர் 2016 (UTC)

தென்காசி சுப்பிரமணியன், தாங்கள் இப்பக்கத்தில் உரையாடும் தொனி ஒரு நிருவாகியாக மற்றவர்களுக்கு முன்மாதிரியான செயற்பாடன்று. தங்கள் பங்களிப்பின் தொடக்கக் காலங்களில் இவ்வாறான உரையாடல்களைத் தங்கள் ஆளுமை சார்ந்த வேடிக்கைப் பேச்சாக எண்ணிக் கடந்து போயிருக்கிறேன். ஆனால், தொடர்ந்து இவ்வாறு இயங்குவது ஏற்புடையதன்று. கட்டுரையை மேம்படுத்த என்ன தேவையோ அதனை மட்டும் உரையாடுங்கள். தனிப்பட்ட கருத்துகளைத் தவிருங்கள். நன்றி.

Kanags, தாங்கள் தென்காசி சுப்பிரமணியனுக்கு இட்ட கருத்தைப் பாருங்கள். அதில் நிறைய கேள்விகள், தொடர் உரையாடல்களுக்கான கண்ணிகள் தொக்கி நிற்கின்றன. இவ்வாறான கருத்து கூட மற்றவர்களைத் தூண்டி விடலாம். நீங்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் போது வழமையாக மற்ற பயனர்களிடம் ஏற்படும் முரண்களுக்கு இதுவும் ஒரு காரணமோ என்று தோன்றுகிறது. சுட்ட வேண்டிய திருத்தத்தை மட்டும் சுருக்கமாகச் சுட்டுவதன் மூலம் இத்தகைய தொடர் உரையாடல் சூழலைத் தவிர்க்கலாம். இதனை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். என் கருத்தில் பயன் இல்லையெனில் புறக்கணிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:51, 21 செப்டம்பர் 2016 (UTC)

உங்கள் கருத்துக்கு நன்றி. முயற்சி செய்து பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 11:33, 21 செப்டம்பர் 2016 (UTC)

பயனர்:Ravidreams நீங்கள் சொல்லும் எந்த கருத்தையும் நான் ஏற்கவில்லை. கேள்வியா கேட்டுட்டு விளக்கம் கொடுத்ததா கனகர் சொல்றார். அது மட்டும் இல்லாமல் குழந்தைத்தனமா பேசுறேன்னு சொல்லி எள்ளி நகையாடுறார். அதனால் தான் அப்டி பதில் கொடுக்கத்தேவை ஏற்படுகிறது.

//கட்டுரையை மேம்படுத்த என்ன தேவையோ அதனை மட்டும் உரையாடுங்கள். தனிப்பட்ட கருத்துகளைத் தவிருங்கள்.//

தனிப்பட்ட கருத்துக்களை நான் ஏதும் தொடங்கி வைக்கலயே. செய்த மாற்றம் தொடர்பான கேள்விகள் வரும்போது அதுக்கு பதிலளிக்கனும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:56, 21 செப்டம்பர் 2016 (UTC)

பேச்சு:தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள் அப்டியே இந்த பக்கமும் பாருங்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:01, 21 செப்டம்பர் 2016 (UTC)

தென்காசி சுப்பிரமணியன்,

//நீங்க மேல சொன்னதுல வழக்கமான உங்கள் சுட்டிக்குழந்தை கேள்விகள் எதுமில்லை. கேள்வியா கேட்டுட்டு விளக்கம் கொடுத்ததா சுட்டிடிவி கதை விடவும் இல்லை. //

//கேள்விகளை மட்டும் கேட்டுட்டு விளக்கம் கொடுத்ததா உங்களையே மெச்சிக்கொள்ளும் சுட்டிக்குழந்தை வழக்கம் போய்//

போன்றவற்றை எள்ளலாகவே கருத முடியும். இத்தகைய சொல்லாடல்களைத் தவிர்க்க வேண்டுகிறேன்.

இன்னொரு பக்கத்தின் நீட்சியாக இவ்வுரையாடல் இருப்பதைப் புரிந்து கொள்கிறேன். அதனாலேயே கனக்சுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். உடன் உரையாடுபவர் தூண்டுவது போல் பேசினாலும் நாம் விசயத்தை மட்டும் பேசுவதன் மூலம் உரையாடல் வளராமல் தவிர்க்க முடியும். --இரவி (பேச்சு) 17:18, 21 செப்டம்பர் 2016 (UTC)

அது பதிலுக்கு கொடுக்கப்பட்டவை. எள்ளலின் தொடக்கம் கனகரிடம் தான் உள்ளது.

//உடன் உரையாடுபவர் தூண்டுவது போல் பேசினாலும் நாம் விசயத்தை மட்டும் பேசுவதன் மூலம் உரையாடல் வளராமல் தவிர்க்க முடியும்.//

அது உண்மைதான். ஆனா ஒரு விசயத்துல அப்டி பண்ணா சரினு விட்ரலாம். தொடர்ந்து இதைப்போல் பேசிக்கொண்டே இருப்பார். கேட்டுக்கொண்டே இருக்கனும் என்பது போல் இருக்க முடியாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:33, 21 செப்டம்பர் 2016 (UTC)

தென்காசி சுப்பிரமணியன் , பதிலுக்குப் பதில் என்று எல்லாரும் இறங்கினால், உரையாடல் மாண்பு சீர்குலையவே செய்யும். ஒருவர் உரையாடும் முறை உங்களுக்கு ஏற்பு இல்லையெனில், முதலிலேயே விக்கிப்பீடியா:கண்ணியம் பக்கத்தைச் சுட்டி உங்கள் மறுப்பை முறையாகத் தெரிவித்து விடுங்கள். பெரும்பாலும், முதலில் உரையாடுபவர் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வர். தொடர்ந்து முறை தவறிப் பேசினால் பேச்சுப் பக்கத்தில் மூன்று எச்சரிக்கைகள் தரலாம். தேவைப்படின், நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 03:29, 22 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாரீசுவ_ஜீனாலயம்&oldid=2121209" இலிருந்து மீள்விக்கப்பட்டது