பேச்சு:பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்கத்தின் தலைப்பு நகர்த்தல்[தொகு]

அய்யா நந்தகுமார் இந்த கட்டுரையை உருவாக்கியவர்கள் இந்த கட்டுரையின் தலைப்பை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்று மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். ஆங்கிலத்தில் இந்த கட்டுரையின் தலைப்பு Popular front of india என்பதாகும். Front Of என்பதற்கு ஃப்ரண்ட் ஆஃப் என்பதாக வர வேண்டும். ஆனால் தலைப்பில் பிரண்ட் ஆப் என்று வந்துள்ளது. தலைப்பை நகர்த்த உதவ வேண்டும். --Yousufdeen (பேச்சு) 13:10, 27 சனவரி 2021 (UTC)[பதிலளி]

@Kanags:, வணக்கம். இக்கட்டுரையின் தலைப்பு எனக்கு குழப்பமாக உள்ளது. உதவவும். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 11:58, 28 சனவரி 2021 (UTC)[பதிலளி]
@Nan: தலைப்பில் மாற்றம், எதுவும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். தமிழ் இலக்கண வரம்பிற்குள் தான் தலைப்பு எழுதப்பட்டுள்ளது. ஃப்ரண்ட் என்று தமிழில் எழுத முடியாது. வேண்டுமானால் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என எழுதலாம்.--Kanags \உரையாடுக 07:52, 29 சனவரி 2021 (UTC)[பதிலளி]
@Kanags:, வணக்கம். விளக்கத்திற்கு நன்றி. இதே தலைப்பு இருக்கட்டும் என்று எண்ணுகிறேன். ஆனால் என் குழப்பத்திற்கு காரணம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பதை நான் தமிழில் படிக்கும்போது எனக்கு தோன்றியது: "popular friend of India" not "popular front of India"--நந்தகுமார் (பேச்சு) 09:41, 29 சனவரி 2021 (UTC)[பதிலளி]
@Nan: நீங்கள் சொல்வது சரி. நான் தலைப்பிட்டால் இலங்கைத் தமிழ் முறையில் "பொப்பியூலர் புரொண்ட் ஒஃப் இந்தியா" என்றுதான் எழுதுவேன்.--Kanags \உரையாடுக 10:10, 29 சனவரி 2021 (UTC)[பதிலளி]
@Kanags:,தோழர் செய்திகளில் மற்றும் பொதுவெளியில் இந்த அமைப்பின் பெயர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று தான் அதிகம் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது. விவாதத்திற்கு பிறகு நாம் முடிவுக்கு வருவோம். நன்றி --Yousufdeen (பேச்சு) 13:07, 30 சனவரி 2021 (UTC)[பதிலளி]