பேச்சு:பழையாறை
Jump to navigation
Jump to search
பழையாறைக்கோயில்கள்[தொகு]
புலவர் வே.மகாதேவன் பழையாறைத் திருக்கோயில்கள் என்ற கட்டுரையில் (மகாமகம் 1992 சிறப்பு மலர்) பழையாறையில் உள்ள கோயில்களைக் குறிப்பிடுகிறார். (இதனடிப்படையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது)
- பழையாறை (வைப்புத்தலம்) : சோமநாதர், சோமகமலாம்பிகை, அமர்நீதிநாயனார் வாழ்ந்த தலம். யானையும், குதிரையும் இழுப்பதாக அமைந்துள்ள முன்மண்டபம் சோழர் காலக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டு. காமக்கோட்டப் படிக்கட்டினருகில் நரசிம்மாவதாரச் சிற்பங்கள் உள்ளன.
- பழையாறை - வடதளி : முழையூரிலுள்ள இக்கோயில் வள்ளலார் கோயில் எனவும் தர்மபுரீஸ்வரர்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. மாடக்கோயில். வடதளி என்பதில் மாறுபாடு இல்லை. ஆனால் ஊரின் பெயரோ பழையாறை எனவும் ஆறை எனவும் கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் சமணர் மறைததிருந்த வடதளிநாதரை வெளிப்படுத்தியதை பெரிய புராணம் கூறுகிறது. திருக்கோட்டமுடைய நாச்சியார் விமல நாயகி எனப்படுகிறார். கோபுர வாயில் அழிவினை நோக்கியுள்ளது.
- ஆறை மேற்றளி (வைப்புத்தலம்): பழையாறையின் மேற்கிலிருந்த கோயில். மதில் இல்லா திருச்சுற்று. இரண்டடி உயரத்தில் ஒரு மேடை. அதில் நந்தி, நந்தி மண்டபம், முன் மண்டபம், கருவறை ஆகியவை உள்ளன. கோபுரம் அழிந்துள்ளது. ஒருதள விமானத்தின்கீழ் லிங்கத்திருமேனி உள்ளது.
- பழையாறைத் தென் தளி : இக்கோயில் எதுவென கண்டுபிடிக்க முயலவில்லை. அது வேறு பெயருடன் உள்ளதா? அல்லது காலவெள்ளத்தில் அழிந்ததா என்பதற்கு திட்டமான விடை கூற முடியவில்லை. ----