பேச்சு:பழைமைவாதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரபுவாதம் என்பது கூடிய பொருத்தமாக இருக்குமா? பழமைவாதம் என்பது old அல்லது காலவாதியான கொள்கை போன்று பொருள் தருகிறது. --Natkeeran 18:52, 25 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

மரபுவாதம் என்பது சரியெனவே எனக்கும் படுகிறது. இருப்பினும் வாதம் என்பது தமிழா?--Terrance \பேச்சு 01:41, 26 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
எழுதும்போதே மரபுவாதம் என்று எழுதலாமா என்றே நானும் எண்ணினேன். அது கூடிய பொருத்தமாக இருக்கும்போல்தான் தெரிகிறது. ஆனால் பழமைவாதம் என்பது இலங்கையில் பரவலாக வழக்கில் உள்ள சொல். தமிழ் நாட்டில் எப்படியென்று தெரியவில்லை. ஏற்கெனவே புழங்கும் சொற்களுக்கு மாற்றுச் சொற்கள் உருவாக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். வாதம் என்பது தமிழ்ச் சொல் அல்ல என்றுதான் நினைக்கிறேன். செல்வா வாதம் என்பதற்குப் பதிலாக -இயம் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்திருந்தார். சில சொற்களில் பயன்படுத்தியும் உள்ளோம் (எ-கா மாக்சியம், அடிமனவெளிப்பாட்டியம்). இதனைப் பயன்படுத்துவதானால் மரபியம் எனலாம். மயூரநாதன் 04:33, 26 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழைமைவாதம்&oldid=981906" இலிருந்து மீள்விக்கப்பட்டது