உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பழஞ்சோறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் ஆதாரமாகத் தரப்பட்டுள்ளது ஆய்வுத் தகவலல்ல. அது ஒரு வெற்றுக் கூற்று. அத்தகைய கூற்றுக்களை ஆதாரங்களாக ஏற்க முடியாது. எனவே இப்பக்கத்தை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 14:02, 9 செப்டம்பர் 2015 (UTC)

@Fahimrazick: ஏனைய மூன்று வரிகளிலும் சிக்கலில்லை. அவற்றுக்குச் சான்று இணைக்க வேண்டும். பக்கத்தை நீக்கத் தேவையில்லை. நீங்கள் கூறிய வரியைக் கேள்விக்குட்படுத்துகிறேன். --மதனாகரன் (பேச்சு) 14:05, 9 செப்டம்பர் 2015 (UTC)
@Kurinjinet: தங்கள் கவனத்திற்கு. --மதனாகரன் (பேச்சு) 14:10, 9 செப்டம்பர் 2015 (UTC)


@Fahimrazick: :@மதனாஹரன்: ஒத்துக்கொள்கிறேன், தற்போது அமெரிக்க ஆய்வறிக்கை சம்பந்தமான ஏதேனும் சான்றுகள் கிடைக்கவில்லை, கிடைக்கும்பொழுது ஏற்றுகின்றேன், மற்றபடி இந்த கட்டுரையை விரிவுபடுத்த போதுமான காரணங்கள் நம் தின வாழ்வில் கொட்டிக்கிடக்கிறது, இதனை விரிவுபடுத்தலாம் நீக்கத்தேவையில்லை, இது 20வருடங்களுக்கு முன்புவரை தமிழர்களின் அன்றாட வாழ்வியலில் கலந்த உணவு.


இக்கட்டுரையை நீக்கவேண்டாம். தமிழ் இந்துவில் கட்டுரை\செய்தி இது தொடர்பில் படித்த நினைவு. -Mdmahir (பேச்சு) 04:37, 17 செப்டம்பர் 2015 (UTC)

பிறமொழிகளுக்கான இணைப்பு

[தொகு]

பழஞ்சோறும், Congee என்பதும் ஒன்றல்ல. பழஞ்சோறு என்பதற்குப் பொருத்தமான ஆங்கிலக் கட்டுரை எதுவும் இல்லாததால் ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த இணைப்புக்களை நீக்கியுள்ளேன். --மயூரநாதன் (பேச்சு) 01:57, 18 செப்டம்பர் 2015 (UTC)

கஞ்சி என்பதை வார்ப்புருவில் சொடுக்கித்தான் இங்கு வந்தேன். நீச்சோறு, நீச்சத்தண்ணி என்றும் சொல்கிறார்கள். -- Mdmahir (பேச்சு) 02:06, 18 செப்டம்பர் 2015 (UTC)
en:congee (கஞ்சி) வேறு, பழஞ்சோறு வேறு.--Kanags \உரையாடுக 02:46, 18 செப்டம்பர் 2015 (UTC)


@Mayooranathan:, @Kanags:, @Mdmahir: :-பழஞ்சோறும், கஞ்சியும் வேறுவேறே, ஆனால் கஞ்சி என்ற பொதுத்தன்மையின் கீழே பழஞ்சோறினை சொல்லும் வழக்காடல் தமிழகத்திலே உண்டு, அதனால் வார்ப்புருவில் கஞ்சி என்பதன் கீழே பழஞ்சோறு பக்கத்தினை இணைத்திருந்தேன், மேலும் நேரம் கிடைக்கும்பொழுது அந்த கட்டுரையை கஞ்சி என பெயர்மாற்றம் செய்து கூடுதலாக உளுந்தங்கஞ்சி போன்றவற்றையும் இணைக்க எண்ணினேன். தற்போது கஞ்சி எனும் புதுப்பக்க உருவாக்கம் நண்பர்களால் முயற்சிக்கப்பட்டதும் நல்லதே. தனித்தனியே இருக்கட்டும். நன்றி. எமது தாமதத்தினால் விளைந்த குழப்பங்களுக்கு மன்னிக்கவும்.--குறிஞ்சி (பேச்சு) 04:46, 18 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழஞ்சோறு&oldid=1918892" இலிருந்து மீள்விக்கப்பட்டது