பேச்சு:பறக்கும் இடியாப்ப அரக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png பறக்கும் இடியாப்ப அரக்கன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

அடேங்கப்பா. அரிய கட்டுரை. இந்தக் கட்டுரையின் தாக்கத்தால், நான் இந்தச் சமயத்தில் நம்பிக்கை வைக்கைத் தொடங்கி உள்ளேன். :)--Natkeeran 13:44, 15 ஏப்ரல் 2011 (UTC)

நல்ல தகவல்.. Pastafarianism என்று அடைப்புக்குறிக்குள் இட்டால் நன்று, (நான் பதிந்தேன், ஏனோ சரிவரவில்லை)--சி. செந்தி 14:10, 15 ஏப்ரல் 2011 (UTC)

ஒரு தனிமனிதனின் செயல்பாடுகள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துக்கின்றன என்பதை பார்த்து வியக்கின்றேன். உலகில் கைக்கட்டி, வாய்பொத்தி "ஆமாம்" போடுபவரைப் போன்றல்லாமல், எதிர்த்து நிற்போராலேயே புரட்சிகளும் புதிய சிந்தனைகளும் பிறக்கின்றன.

கட்டுரையை எழுதிய சோடாப்பாட்டிலுக்கு நன்றி! --HK Arun 15:10, 15 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி நண்பர்களே. நற்கீரனின் இறைமறுப்பு கட்டுரைகளே இதனை எழுதத் தூண்டின. ரசலின் தேனீர் கேத்தல் கட்டுரையில், மேலும் பார்க்க பகுதியில் FSM ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு தரப்பட்டுள்ளது. சில மாதங்கள் முன்பு நான் 2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் சமயம் என்ற பெயரில் இதைத் தான் கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால் கணக்காளர் ஏற்றுக்கொள்ளவில்லை சமயம் என்ற கட்டத்தில் “மற்றவை” என்று பொட்டுவிட்டார் :-). அந்த நினைவு தேனீர் கேத்தல் கட்டுரையைக் கண்டவுடன் இதை எழுததூண்டிவிட்டது.--சோடாபாட்டில்உரையாடுக 15:41, 15 ஏப்ரல் 2011 (UTC)
சோடாபாட்டில், கொன்னுட்டீங்க!! பாராட்டுகள்!--செல்வா 14:27, 17 ஏப்ரல் 2011 (UTC)
அருமையான களிப்பூட்டும் கட்டுரை, சோடாபாட்டில். :-) -- சுந்தர் \பேச்சு 05:57, 18 ஏப்ரல் 2011 (UTC)
நல்ல கட்டுரை. பாராட்டுக்கள் சோடாபாட்டில். --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 06:10, 18 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி செல்வா, சுந்தர், சஞ்சீவி. :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:55, 19 ஏப்ரல் 2011 (UTC)

  • இந்தக் கட்டுரை தொடங்கப்பட்ட போது ஏதோ பத்தோடு ஒன்று என்று விட்டுவிட்டேன். ஆனால் இக்கட்டுரை முதற்பக்கத்தில் இடம் பெற்ற பின்பு அப்படி என்னதான் இந்தக் கட்டுரையில் இருக்கிறது? என்று முழுமையாகப் படித்துப் பார்த்தேன். உண்மையில் சிறப்பான கட்டுரை... சோடாபாட்டில் கொடுத்த கட்டுரை இறை மறுப்புக் கொள்கையிலான புதுமைக் கட்டுரை, எனக்கு முற்றிலும் புதிதான கட்டுரை. வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 05:27, 19 ஏப்ரல் 2011 (UTC)

அருமையான கட்டுரை. பறக்கும் இடியாப்ப அரக்கன் திருச்சபையின் தமிழகக் கிளையில் சோடாபாட்டிலை ஏதாவது ஒரு சின்னமாகச் சேர்க்கலாம் :)--இரவி 12:18, 19 ஏப்ரல் 2011 (UTC) அருமையான கட்டுரை. நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. உங்களது பணியை கண்டு வியக்கேன், - Vatsan34 (பேச்சு) 13:18, 29 மார்ச் 2014 (UTC)