பேச்சு:பர்பரோசா நடவடிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்பரோசா நடவடிக்கை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஆபரேஷன்[தொகு]

கனக்ஸ், ஆபரேஷனை நடவடிக்கை என மாற்றியுள்ளீர்கள். இது ஒரு வித கலைச் சொல். campaign என்ற பொருளில் வரும். தமிழர்கள் யாரும் , தங்கள் வைத்தியருடன் பேசும் போது “டாக்டர், இதய நடவடிக்கை நடக்குமா” என பேசுவதில்லை. ”டாக்டர், ஆபரேஷன் எப்ப நடக்கும்” என்ரதான் சொல்லுவர். ஒவ்வொரு சொல்லும் `தூய` தமிழில்தான் இருக்க வேண்டும் என்பது, வாழ்க்கை தொடர்பற்றது. --Ginger 09:18, 27 ஜூன் 2009 (UTC)

இட்லர் தனது திட்டத்துக்கு பெயர் வைக்கும் போது ஆப்பரேஷன் என்று வைக்கவில்லை. அவன் தனது மொழியில் Unternehmen என்றுதான் வைத்தான். (வேண்டுமானால் "உண்டெர்னேமென் பர்பரோசா" எனத் தலைப்பிடுவோமா:) மேலும், வைத்தியத்தில் ஆப்பரேஷன் என்பது சத்திரசிகிச்சை என்று மொழிபெயர்ப்போம். இங்கு அது பொருந்தாது. வைத்தியத்தையும் போரையும் குழப்ப வேண்டாம். ஆப்பரேஷன் என்பது பல பொருள் தரவல்லது. இங்கு நடவடிக்கை பொருத்தமே. விடுதலைப்புலிகளின் ஒப்பரேஷன்கள் எல்லாம் அவர்கள் நடவடிக்கை என்றே மொழி பெயர்த்தார்கள். இதற்கு இணையான தமிழ்ச் சொல் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 09:29, 27 ஜூன் 2009 (UTC)
ராணுவ ஆபரேஷன் என தமிழ் கூகிளில் தேடிப் பாடுங்கள். பல்லாயிரக்கணக்கான பதில்கள் வரும். --Ginger 11:10, 27 ஜூன் 2009 (UTC)
encounter என்பதைத் தமிழ்ப்படுத்தக்கூட முயற்சிக்காமல் ஊடகங்களில் அப்படியே என்கவுண்டர் என்று எழுதியும் சொல்லியும் பழகிவிட்டீர்கள். (எதற்கும், கூகிளில் இராணுவ நடவடிக்கை - 16,900, ராணுவ ஆபரேஷன் - 60??). எது எப்படி இருந்தாலும், இக்கட்டுரையின் தலைப்பை மாற்றுவதற்கு உடன்படேன்.--Kanags \பேச்சு 11:23, 27 ஜூன் 2009 (UTC)
ராணுவ ஆபரேஷன் 7000 ம் மேல் பக்கங்கள் http://www.google.com/search?hl=ta&q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D&btnG=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D. இராணுவ ஆபரேஷன் 2000 மேல். http://www.google.com/search?hl=ta&q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D&btnG=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D. இதில் ஈழ, புலிகள் சார்பான ஊடகங்களும் அடங்கும்--Ginger 12:49, 27 ஜூன் 2009 (UTC)
  • முதலாவது ஆபரேஷன் என்பதை aaba-ray-shun எனப்படிக்க வேண்டும். ஆப்பரேஷன் என்றால் aappa-ray-shun (=Operation) என்று படிக்க வேண்டும். கூகுளில் இருப்பதைப் பார்க்கலாம், பொது ஊடகங்களில் இருப்பதையும் பார்க்கலாம், ஆனால் எது சரியானது என்பதை அறிவடிப்படையில், வளர்முகமாகக் கருத்தாடி, முடிவு செய்து பயன்படுத்துவது, சீரிய கலைக்களஞ்சியம் போன்ற இப்பணிகளில் முக்கியம். மேற்கோள் குறிகளுக்கு இடையே "ராணுவ ஆபரேஷன்" என்று இட்டுத் தேடினால் 50 பக்கங்கள் கிட்டுகின்றன. இதே போல மேற்கோள் குறிகளுக்கு இடையே "ராணுவ நடவடிக்கை" என்று இட்டுத்தேடினால் 4650 பக்கங்கள் கிட்டுகின்றன. ஆனால் எப்பக்கமும் கிட்டாவிட்டாலும்கூட, எது சரியோ அதனையே தேர்ந்தெடுத்தல் வேண்டும். எது சரி என்பது பற்றி அறிவடிப்படையில் இங்கு கருத்தாடி (வளர்முகமாகக் கருத்தாடி) முடிவு செய்யலாம். நான் என் வலைப்பதிவில் எப்படிவேண்டுமானாலும் இடலாம், ஆனால் அது உடனே சரியான பயன்பாடாக ஆகிவிடாது. ஆப்பரேச^ன் என்பது இங்கே படையின் திட்டமிட்ட செயல் முன்னெடுப்பு. அரைகுறையான பேச்சு மொழியை அருள்கூர்ந்து வலியுறுத்தாதீர்கள். சரியான சொல் தெரியவில்லை, கிட்டவில்லை என்றால் ஆப்பரேசன் என்று எழுதலாம். ஆனால் அது மாற்றம் பெற வேண்டிய ஒரு சொல். படையெடுப்பு, படைதொடுப்பு என்பது போல ஒரு குறிப்பிட்ட படையின் ஒரு செயலெடுப்புதான் ஆப்பரேசன்.--செல்வா 13:35, 27 ஜூன் 2009 (UTC)
கூகிளில் ஒரு கோடி முறை ஒரு ஆங்கிலச்சொல்லைத் தமிழில் பயன்படுத்தியிருந்தாலும் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழில் தான் எழுதுவது வழக்கம். வேண்டுமானால் ஆங்கிலத்தில் அடைப்புக்குறிகளில் தருவதுண்டு. ஐயா, "டாக்டர், ஆப்பரேசன் எப்ப நடக்கும்?" என்று எவ்வளவு தொலைவு நாம் பேச்சு வழக்கில் கேட்டாலும், அந்த மருத்துவர் தரும் சீட்டில் "இதய அறுவை சிகிச்சை" என்று தமிழிலும் "Cardiac surgery" என்று ஆங்கிலத்திலும் சரியாகவே எழுதுவார். "Heart operation" என்றோ "இதய ஆப்பரேசன்" என்றோ எழுத மாட்டார். மருந்துச் சீட்டிற்கு இப்படியென்றால் ஒரு மருத்துவ நூலில் எப்படி இருக்கும் அதற்கும் மேலாக ஒரு கலைக்களஞ்சியத்தில் எப்படி இருக்க வேண்டும் என எண்ணிப் பாருங்கள்? பேச்சு வழக்கு, கொச்சை வழக்கு, இணைய வலைப்பதிவர் வழக்கு மட்டும் தான் தமிழா? தமிழின் இருதரத்தன்மையைப் பற்றி எண்ணிப் பாருங்கள். நூல்களிலும் சிறப்பான பயன்பாட்டிலும் செந்தமிழைப் பயன்படுத்துவது மரபுதானே. -- சுந்தர் \பேச்சு 13:32, 27 ஜூன் 2009 (UTC)
நான் `நடவடிப்பு`, செயல்பாடு முதலியவற்றை பற்றி யோசித்தேன். சரியான contexual nuance ஐ, அது கொடுக்கவில்லை என்பது என் துணிபு. சரி, நீங்கள் ஏகோபித்த குரலில் `நடவடிப்பு` என்கிறீர்கள், அதையே வைத்துக் கொள்வோம்--Ginger 14:10, 27 ஜூன் 2009 (UTC).


குறுக்கீடுவதற்கு பொருத்தருள வேண்டும். நாம் ஆங்கில மொழியிலிருந்து அனைத்தையும் தமிழாக்கவேண்டும் என்ற கொள்கையில் மாறுபடாமல் இருப்பது சிறந்ததாக இருக்கும். தவிர தமிங்கலமாக மக்கள் உரையாடுவது காலத்தினால், சூழ்நிலையினால் விளைந்தது. தமிழ் தளத்தில் தமிழைத் தவிர பிறமொழிகளின் ஒலியைக் கூடத் தவிர்ப்பது நல்லது. ஒருமிறை உதாரண்திற்கு கொடுத்துவிட்டு ஆரம்பிக்கலாம். ஆபரேஷன் என்பதை கீழே பார்பரோசா நடவடிக்கை அல்லது பார்பரோசா ஆப்பரேஷன் என்று ஒரு முறை தலைப்பிட்டுத் துவங்கி கட்டுரையை முன்னிருத்தினால் இந்த சொற்கள் பயன்பாட்டுக்கு நாளடைவில் வந்து விடும்.

தமிழ் சொற்களை அறிமுகப்படுத்தாத காரணத்தால் இப்படிபட்ட கலந்து உரையாடும் பழக்கம் ஏற்பட்டது. மானாட மயிலாட என்ற ஒருத் தொலைக்காட்சி நிகழ்ச்சி அதைக் கூட மக்கள் எம். எம் என்று சுருக்கி கொண்டார்கள். அது விமர்சிக்கப்பட்டு மீண்டும் ஒரளவுக்கு தவிர்க்கப்படுகின்றது. அது மாதிரி ஆங்கில சொற்களுக்கு இணையானத் தமிழ் சொற்களை, எளிய தமிழ் சொற்களை உள்ளிட்டால் நலமாக இருக்கும். இது நெடுங்காலமாக நாம் பின்பற்றி வந்த மரபு தான். அவ்வப்பொழுது வணிகத்திற்காக தளர்த்தப்படுகின்றது. தமிழ் தொலைகாட்சிகளில் பெரும்பாலும் வணிகத்திற்காக தமிங்கலங்கள் பயனபடுத்தப்படுகின்றது. ஆனால் ஒரேயொரு தொலைக்காட்சி மட்டும் முழுக்க (அங்கங்கே தவறிருக்கலாம்) தமிழ் நிகழ்ச்சிகளை தமிழிலேயே வழங்குகின்றது. அதை தமிழர்கள் வரவேற்கின்றார்கள். தமிங்கலமாக வழங்கும் தொலைக்காட்சியை சட்டமன்றத்திலேயே விமர்சிக்கப்பட்டது.

அனைத்து இடங்களிலும் நாம் மேற்கோளைக் கூட தமிழிலேயே உள்ளிடவேண்டும். அதுவே முரண்பாடுதான். மேள்கோள் என்ன என்று அனைவருக்கும் தெரியவேண்டாமா? புரியவும் வேண்டும். (பொதுவாக குறிப்பிட்டது) தமிழில் தலைப்பிடுவதில் எளியத் தமிழ் வார்த்தைகளைப், முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்துவதில் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்பது என்னுடைய அவா. இணையத்தில் தவறுசெய்கிறார்கள் உண்மைதான் நாம் அதிலிருந்து மாறுபடலாமே? இது நல்ல விடயம் தானே. நாம் உரைநடைத் தமிழ் தானேப் பயன்படுத்துகின்றோம். தேவைப்பட்டால் அடைப்பு குறிக்குள் வழக்குச் சொல்லையும் உள்ளிடலாம் அல்லது ஆங்கிலச் சொல்லையும் உள்ளிடலாம். முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இதற்கு ஈடான எளியத் தமிழை உள்ளிடலாம் பார்போசா "செயல்" "இயக்கம்" அல்லது வேறு ஏதாவது தமிழில் கட்டுரைக்கு பொறுத்தமாக..... (கருத்துக்கள் தான் தவறாக நினைக்கவேண்டாம்.) நன்றி--செல்வம் தமிழ் 14:17, 27 ஜூன் 2009 (UTC)


சில வேதியியல் பெயர்கள், உயிரியல் பெயர்கள், நிறுவனங்கள் பெயர்கள் தவிர்த்து அனைத்து கலைச்சொற்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பது அவசியம். குறைந்த பட்சம் இது கூடத் தேவை இல்லையென்றால், தமிழில் ஒரு கலைக்களஞ்சியம் என்று ஒன்று தேவை இல்லை. கலைச்சொற்கள் கூட்டாகச் சேந்து ஒரு கருத்துச் சூழலை உருவாக்குகின்றன. எனவே இங்கு தமிழில் பொருள் உணரத் தக்க கலைச்சொற்களே பொருந்தும். நடவடிக்கை என்ற சொல் பரந்த பயன்பாட்டில் இருக்கும் ஒரு சொல். எனவே இங்கு மிகப் பொருத்தம். --Natkeeran 20:56, 27 ஜூன் 2009 (UTC)

Nazi நாஜி? நாசி? நாச்சி? நாட்சி? நாட்ஃசி?[தொகு]

Nazi என்னும் சொல்லை naatzi என்பது போல ஒலிப்பர். எனவே இதனை நாச்சி அல்லது நாட்சி எனலாம். அல்லது நாட்ஃசி (=naatzi) எனலாம். நாஜி என்பது சரியல்ல. நாசி என்பது naasi என்று ஒலிக்கப்பெறும். நாசி என்று கூறலாம் ஆனால் நாட்சி (naatchi) என்பது இன்னும் சரியாக இருக்கும். நாச்சி என்றாவது கூறுதல் வேண்டும். நாஜி என்பது தவறு. எப்படி மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கவும்.--செல்வா 02:22, 30 ஜூன் 2009 (UTC)

என் விருப்பம் வரிசைப்படி: நாட்சி, நாசி, நாட்ஃசி, நாச்சி -- சுந்தர் \பேச்சு 02:45, 30 ஜூன் 2009 (UTC)
நன்றி சுந்தர்!--செல்வா 03:36, 30 ஜூன் 2009 (UTC)

திணிப்பு நல்லதல்ல[தொகு]

ஹிட்லரை இட்லர் என்றும், யூனியனை ஒன்றியம் என்றும் இன்னும் பல வித திணிப்புகளும் செய்யப் பட்டுள்ளன. அது படிப்பவர்களு்க்கும், எழுதுபவர்க்கும் இடைஞ்சல் கொடுப்பதாகும். அதை கண்டிக்கிறேன்.--Ginger 10:14, 30 ஜூன் 2009 (UTC)

:).--Kanags \பேச்சு 12:03, 30 ஜூன் 2009 (UTC)
Giger, எல்லா இடத்திலும் சோவியத் ஒன்றியம் என்று இருந்தால் நல்லதல்லவா? ஹிந்து, ஹிந்தி, ஹிட்லர் என்பதை தமிழில் இந்து, இந்தி, இட்லர் என்பது வழக்கம்தானே? ஏன் இதனைத் திணிப்பு என்கின்றீர்கள்? சில இடங்களில் சொற்களும் சொற்றொடர்களும் சரியாக இல்லாததால் உரை திருத்தம் செய்தேன். சில இடங்களில் நீங்கள் ஆங்கில விக்கியில் இருந்து மொழி பெயர்க்காமல் விட்ட சொற்றொடர்களையும் சேர்த்தேன். நீங்கள் எழுதிய கட்டுரையை மேம்படுத்துவதாகவும், கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றவாறு சீரான சொல்-மொழி நடையில் அமைத்தாகவும் நினைத்தே மாற்றங்களைச் செய்தேன். அருள் கூர்ந்து நடுநிலை நின்று எண்ணிப்பாருங்கள். பொதுநலம் குறித்து நீங்கள் இவற்றை இணக்கமான முறையில் அணுகி எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். நீங்கள் ஜெர்மன் என்பதை செருமன் என்றோ டாய்ட்சு என்றோ இடாய்ட்சு என்றோ எழுதுவது சரியானதாக இருக்கும், ஆனாலும் மாற்றாமல் விட்டிருந்தேன். நீங்கள் ஜெர்மன் என்று எழுதுகின்றீர்கள், ஆனால் அவர்கள் தங்களை டாய்ட்சு என்றும் தங்கள் மொழியை டாய்ட்சு மொழி என்றும் கூறுகின்றனர். அவர்கள் மொழியில் ஜ ஒலியே கிடையாது. இவற்றையெல்லாம் அருள்கூர்ந்து சாய்வின்றி எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். பார்பரோசா கட்டுரையை நல்ல உழைப்புடன், நன்றாக மொழி பெயர்த்து உள்ளீர்கள். உங்களை மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் கட்டுரையில் உள்ள சிறு சிறு எழுத்து, சொல், சொறொடர் பிழைகளைத் திருத்தவும், சில இடங்களில் சொற்பயன்பாடுகளைச் சீர் செய்யவும் முனைந்தேன். இவற்றைத் திணிப்பு என நினைக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். --செல்வா 13:20, 30 ஜூன் 2009 (UTC)

Ginger, பார்பரோசா நடவடிக்கையைப் பற்றி தமிழில் இவ்வளவு விரிவாக எழுதிய முதல் தமிழர் என்று உங்களை நான் போற்றுவேன் (தமிழர்கள் போற்றுவர்). இது உண்மையான புகழ்ச்சி. வேந்தன் அரசு என்பவர்தான் பொனொபோ என்னும் முதனியைப் பற்றி முதன் முதலில் தமிழில் விரிவாக எழுதியவர். இப்படிப் பல "முதல்"கள் நாம் நாட்ட வேண்டும்.--செல்வா 13:30, 30 ஜூன் 2009 (UTC)

"Panchayat union" என்பதை ஊராட்சி ஒன்றியம் என்று வழங்கும் நடைமுறையையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 13:33, 30 ஜூன் 2009 (UTC)


செல்வா,அப்படியென்றால் எல்லா இடத்திலேயும் சோவியத் யூனியன் என வைக்கலாம். நாம் வழக்கமாக தமிழ் எழுதும் உலகத்தை பிரதிபலிக்க வேண்டும். "ஹிந்து, ஹிந்தி, ஹிட்லர் என்பதை தமிழில் இந்து, இந்தி, இட்லர் என்பது வழக்கம்தானே" என்பது சரியல்ல. அப்படி ஒரு வழக்கமே இல்லை.. நீங்கள் இல்லாததை சொல்லுகிறீர்கள்.. உதாரணமாக ஹிட்லர் என்பதற்கு 30700 பக்கங்கள் வருகின்றன, இட்லர் என்பதிற்கு 2000 சொச்சம் பக்கம் வருகின்றன. ஆதாரம் இவ்வளவு பலமாக இருக்கும் போது "ஏன் இதனைத் திணிப்பு என்கின்றீர்கள்? " என தெரியாததுபோல் கேட்கிறீர்கள்.

'சில இடங்களில் சொற்களும் சொற்றொடர்களும் சரியாக இல்லாததால் உரை திருத்தம் செய்தேன் ' என்பது உங்கள் சாய்வே தவிற உண்மை இல்லை. நீங்கள் செய்த சில மற்றங்கள் சரியான பொருளை கொடுப்பதில்லை, சரியான nuance ஐ கொடுப்பதில்லை. நீங்கள் செய்த தேவையற்ற அல்லது தவறான மாற்றங்கள்


ரசசிய ஷரத்துக்கள் மறைமுக உட்கூறுகள்........ ஜெர்மனியும் சோவியத் உருயாவும் (??)

பரஸ்புர ஒன்றுக்கொன்று

தொழில் கச்சா பொருள்களை தொழிலக துவக்கப் பொருள்களை

சந்தேகிததன. ஐயத்துடனேயே

போடாவிட்டாலும் தீட்டாவிட்டாலும்

~மீது அதீத நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்~. "மீது அலவுக்கு மீறிய நம்பிக்கை வைகத் தொடங்கினார்." ( ???)

"உருசிய்யர்கள் இப்படியான பல தோல்விகளை அடைந்திருந்தாலும், அவர்கள் ஜெர்மானியர்களை மாஸ்கோவில் இருந்து வெளியேற்றினர்" (???)


நீங்கள் செய்யும் தேவையற்ற , சில சமயம் தவறான மாற்றங்கள் படிப்பவர்ககுக்கு குழப்பத்தை கொடுக்கும், எழுதுபவரை உற்சாகம் குறையச் செய்யும்

10 நாள் முன்பு, பர்பரோசாவின் 60 ஆண்டுகள் நிறைவு. இன்னும் இரண்டம் போரிலேயே, 150 கிலோபைட் மேலான நீளமுடைய 300 கட்டுரைகள் ஏளிதாக உள்ளன.. இப்படி தேவையற்ற மாற்றங்களால், எழுதுவது தடை ஆகிரது.--Ginger 10:35, 1 ஜூலை 2009 (UTC)

//இப்படியான வெற்றிகளைப் பெற்றும், உருசியர்கள் ஜெர்மானியர்களை மாஸ்கோவில் இருந்து வெளியேற்றினர்// என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். இங்கு இலக்கணப் பிழை உள்ளது. உருசியர்கள் வெற்றி பெற்றாலும், அவர்கள் ஜெர்மனியரை மாஸ்கோவில் இருந்து வெளியேற்றினர் என்றவாறு பொருள் தருகிறது. இது தவறான பொருள் தானே. அதனாலேயே நான் பின்வருமாறு மாற்றியிருந்தேன். //உருசியர்கள் இப்படியான பல தோல்விகளை அடைந்திருந்தாலும், அவர்கள் ஜெர்மானியர்களை மாஸ்கோவில் இருந்து வெளியேற்றினர்//. இதனையே கொஞ்சம் நீட்டி முழக்கி வேறு வடிவிலும் எழுதியிருக்கலாம்.
மேலும், கூகிளின் எண்ணிக்கையைக் கொண்டு அதையே வேத வாக்காகக் கருத வேண்டாம். இணையத்தில் எழுதுபவர்கள் எல்லோரும் நல்ல தமிழில் எழுதுவதில்லை. குறிப்பாக வலைப்பூகளில் எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பேச்சுத் தமிழில் அதாவது தமிங்கிலத்திலேயே எழுதுகின்றனர். இதனால் "யூனியன்" என்ற சொல்லுக்கு கூகிளில் அதிக எண்ணிக்கைகள் வருகிறது.--Kanags \பேச்சு 10:56, 1 ஜூலை 2009 (UTC)
கனக்ஸ், எது இலக்கண பிழை என்று பாருங்கள். நான் `வெற்றிகளை பெற்று` என எழுதவில்லை, `வெற்றிகளை பெற்றும்` என எழுதினேன். அந்த உம் சேர்க்கையால் கவனம், வெற்றிபெற்றவர் மீது போகிறது. தமிழ் உம் என்பது ஆங்கில 'in spite of' என ஆகிரது. அது இலக்கணப்பிழை அல்ல, சில பேருக்கு அது ambiguity கொடுக்கும் என சொல்லலாம். மேலும் ரஷ்யர்கள் என்பதை உருசிய்யர்கள் யாரும் புரிந்தகொள்ள மாட்டார்கள் --Ginger 11:33, 1 ஜூலை 2009 (UTC)
மேலும் , யூனியன் என்பது தமிங்கிலம், அதனால் ஒதுக்கப் படவேண்டியது என்பது, இங்கள் அபிப்பிராயம். செய்தி துறை, கவிஞர்கள், இலக்கியம் போன்றவை சோவியத் யூனியன் என்றுதான் எழுதுகிறன. உதாரணம் ஒரு கவிஞர் எழுதி, அது தமிழ் இணைய பல்கலைகழகத்தில் உள்ளது

http://www.tamilvu.org/slet/l9317/l9317pom.jsp?pno=113. கோடிக்கணக்கான தமிழர்களை விட நீங்கள் கொஞ்சம் உசத்தி என நிரூபிக்க முயல்வது, அபத்தம்--Ginger 11:45, 1 ஜூலை 2009 (UTC)

Ginger, உங்களை நான் புரிந்து கொண்டது சரியென்றால் நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைகள் பின்வருமாறு:

  • தமிழர் பேச்சு, எழுத்து வழக்கத்தில் உள்ள தமிழ் அல்லா பிற மொழிச் சொற்களையும் கட்டுரைகளில் பயன்படுத்தி எழுதலாம். எடுத்துக்காட்டு: operation, union.
  • முதலில் எழுதியவர் கிரந்தம் பயன்படுத்தி இருந்தால் உரை திருத்துபவர் அதை மாற்றக் கூடாது.
  • தமிழ் இணையப் பல்கலை போன்ற உயர் உசாத்துணைகளில் உள்ள ஆக்கங்களிலே கூட பிற மொழிச் சொற்கள் உள்ளன. அதை விட உயர்ந்ததா இங்குள்ளவர்கள் கருத்து? எது உயர்ந்த உசாத்துணை?

இது போன்ற பிரச்சினைகளுக்குப் பல எடுத்துக்காட்டுகள் தந்து ஒவ்வொரு கட்டுரைப் பக்கத்திலும் உரையாடினால் நேரம் வீணாகும். இவற்றைக் குறித்து கொள்கை வழிகாட்டல் பக்கங்கள் உருவாக்கி உள்ளேன். தயவுசெய்து அனைத்துப் பயனர்களும் தங்கள் கருத்துகளை அங்கு தெரிவியுங்கள். தனித்தனிப் பக்கங்களில் ஒரே விசயத்தைத் திரும்பத் திரும்ப உரையாட வேண்டாமே?

விக்கிப்பீடியா பேச்சு:உயர்ந்த உசாத்துணை

விக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி

ஹிட்லர்->இட்லர் பிரச்சினையை கொஞ்ச நாள் ஒத்திப் போட வேண்டுகிறேன். கிரந்தப் பயன்பாடு குறித்த கொள்கை முன்மொழிவை விரைவில் செய்வோம். கண்டிப்பாக அது 100% கிரந்தத்தை தடை செய்வதாக இருக்காது. அப்போது உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். செல்வா, ஏனைய பயனர்களுக்கு, தயவு செய்து இந்தக் கிரந்தக் கொள்கை முன்மொழிவு வந்து உரையாடல்கள் முடியும் வரை கிரந்தம் தொடர்பான எந்த விதமான உரை திருத்தத்திலும் ஈடுபட வேண்டாம், சற்று பொறுத்திருங்கள் என வேண்டிக் கொள்கிறேன். நன்றி--ரவி 12:29, 1 ஜூலை 2009 (UTC)

கிரந்தம், தனித் தமிழ் என்பதெல்லாம் கொள்கையே வேண்டாம். “கொள்கைகள்” என்னும் குழப்பத்தை தரும். Indifference is the best policy. எழுதுபவர்களுக்கு விட்டு விட வேண்டும் --Ginger 12:49, 1 ஜூலை 2009 (UTC)

பயனர் செல்வாவின் மேல் திணிப்புகள்[தொகு]

பயனர் செல்வாவின் செய்கை தவிர்க்கத்தக்கது. ஜெர்மனி > செர்மனி, மாஸ்கோ > மாசுக்கோ இதைப்போன்ற தன் விருப்ப சாய்வுகளை தவிர்த்து, ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்வதில்லை. மேலும் ஆபரேஷன் பர்பரோசாவை “படையெடுப்பின் ஒரு நடவடிக்கை” என தவறாக மாற்றியுள்ளார். படையெடுப்பின் பெயரே பர்பரோசாவே தவிர, அது படையெடுப்பில் ஒரு நடவடிக்கை இல்லை. எழுத்தாளர்களின் ஆக்கங்களை இப்படி தாறுமாறாக மாற்றுவது, விகி கொள்கைகளுக்கு எதிராகும். மற்ற நிர்வாகிகள் உள்ளிடுவார்கள் என நம்புகிறேன்.--Ginger 10:30, 5 ஜூலை 2009 (UTC)