பேச்சு:பர்த்தலோமேயு சீகன்பால்க்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்த்தலோமேயு சீகன்பால்க் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

நற்கீரன், இக்கட்டுரையில் இருக்கு தகவல் தவறான எண்ணம் தரவ்வல்லது. தமிழில் முதன் முதல் அச்சிட்டது 1554ல். போர்த்துகீசிய பாதிரியார் ஹென்றீக் ஹென்றீகெஸ் என்பவர் லிஸ்பனில் அச்சிட்டது. இந்திய மொழிகளிலேயே இதுவே முதல். இவரைப்பற்றி எழுத வேண்டும். இப்போதைக்கு ஒரு சிறு தொடக்கம் எழுதியுள்ளேன் பார்க்கவும்: பாதிரி ஹென்றீக் ஹென்றீக்கஸ் --செல்வா 14:00, 7 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

ஆமாம். நான் வலையில் பெற்ற தகவல்கள் சற்று முரண்படுகின்றன. எழுதுங்கள் பின்னர் பிற ஆதாரங்களோடு அலசி சரிபார்க்கலாம். நன்றி. --Natkeeran 14:01, 7 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நற்கீரன் இங்கு முரண்படுவதற்கு ஏதும் இல்லை. பாதிரியார் ஹென்றீக் ஹென்றீக்கஸ் அவர்களின் பணி மிக நன்றாக மிகப்பலரும் அறிந்தது. அவர் அச்சிட்ட புத்தகத்தின் படியை 1991ல் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. என்னிடமும் சில பக்கங்கள் ஒளியச்சு எடுத்து வைத்துள்ளேன் பல கலைக்களஞ்சியங்களிலும் உள்ளது. வலைப்பதிவுகளை நீங்கள் அதிகம் நம்புவது போல் தெரிகின்றது. இங்கு செய்தி கட்டாயம் தவறு. Donald Lach அவர்களின் நூலையும், எங்கு எப்பக்கத்தில் இக்கருத்து உள்ளது என்பதனையும் சுட்டிக் காட்டியுள்ளேன். இந்த மேற்கோள் தவிர மேலும் பல உள்ளன. கலைக்களஞ்சியங்களும் குறிப்பிடுகின்றன. வலைப்பதிவுகளை முன்னிலைப்படுத்தாதீர்கள். மிக நன்றாகத் தெரிந்த செய்திகளையும் தாவறாகவும் திரித்தும் அறிந்தோ அறியாமலோ பல வலைப்பதிவுகள் தருகின்றன.--செல்வா 14:18, 7 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
சரி, செல்வா. நான் பிழையான தகவல்களை நீக்கிவிடுகிறேன். இன்னுமொரு விடயம். நீங்கள் சுட்டிய நூலில் தரப்பட்ட விடயங்கள் சற்று பயம் தருகின்றது. இதன்படி தமிழ் எழுத்துக்களையும் இலக்கணத்தையும் அவர்களே முதலில் ஆக்கியது அல்லது சீரமைத்தது போன்றல்லவா தெரிகின்றது. --Natkeeran 14:16, 7 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]