உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பரீட்சை மீதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by பொன்னிலவன்

கலாநிதி, பரீட்சை மீதி என்பதைக் காட்டிலும் தேறு மீதி (தேறுதல் என்பது சோதித்து உணர்தல்), உரை மீதி (உரைகல் நினைவிருக்கின்றதா?), உரையறு மீதி (அளவறுத்தல் என்றால் அறிவின் படி சோதித்து ஆய்ந்து உண்மை நிலை அறிதல். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கடவுளை "அளவறுப்பதற் கரியவன்" என்கிறார். (Can not prove by reason and testing)) அளவறு மீதி என்றெல்லாம் சொல்லலாமே?--செல்வா 14:29, 4 மார்ச் 2007 (UTC)Reply


இச் சொல்லே இலங்கையில் புழக்கதில் உள்ளதால் பயன்படுத்தினேன்.எனையவற்றை காட்டிலும் தேறு மீதி பொருத்தமாக இருக்கும் என கருதுகின்றேன்.பரிந்துரைக்கு நன்றிகள்.மேலும் செல்வா உங்கள் பரிந்துரைகளை படியெடுக்க விரும்புகிறேன் த.விக்கியில் இருந்து விக்சனரிக்கு தொடுப்பு கொடுப்பது எவ்வாறு என யாரேனும் அறிய தந்தால் எனக்கு மிக உதவியாக இருக்கும் --கலாநிதி 16:52, 4 மார்ச் 2007 (UTC)

தமிழகப் பாடநூல்களிற் பயன்படும் சொல் என்ன? --கோபி 16:58, 4 மார்ச் 2007 (UTC)Reply

கோபி, தமிழகப் பாடநூல்களில் என்ன பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை. --செல்வா 20:36, 4 மார்ச் 2007 (UTC)Reply


Trial Balance = சரிபார்ப்பு இருப்பு, அல்லது ஐந்தொகை என்பது சரிவரும் என்பது எமது புரிதல்.கட்டுரை பக்கத்தி இட்ட ஞானமின் கருத்து இது Trial Balance என்னும் சொல்லை தமிழகப் பாடநூல்களில் இருப்பாய்வு என்னும் சொல்லால் குறிக்கிறார் அதாவது பற்றுக்கு இணையாக வரவு இருக்கிறதா என ஆய்வு செய்தல். (Trial = ஆய்வு; Balance = சமனாக இருத்தல்)--பொன்னிலவன் (பேச்சு) 08:54, 30 சூலை 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பரீட்சை_மீதி&oldid=1177615" இலிருந்து மீள்விக்கப்பட்டது