பேச்சு:பரிசோதனை உளவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

பரிசோதனை உளவியல்[தொகு]

பரிசோதனை உளவியல் (experimental psychology) என்பதுதான் பொருத்தமானது. செய்முறை உளவியல் (practical psychology) என்ற கருத்து உளவியல் நோக்கில் தவறான பிரயோகம் ஆகும். அப்படி ஒன்று உள்ளதா என்பதே ஐயமானது. --AntonTalk 04:00, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பரிசோதனை, செய்முறை இரண்டும் ஒன்று தான். நீங்கள் நினைப்பதே சரியென நீங்கள் கருதினால் இதனை அங்கு நீங்களே மாற்றி விடுங்கள்.--Kanags \உரையாடுக 04:09, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
Experimental Physics என்பதை நீங்கள் பரிசோதனைப் பௌதிகவியல் என்றா படித்தீர்கள்?--Kanags \உரையாடுக 04:14, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
இது நான் நினைப்பதல்ல இலங்கையில் அவ்வாறுதான் படித்திருக்கிறேன். இங்கு உள்ளது சரியென்றால் பரிசோதனை செய்முறை என்பன பிழையா? பரிசோதனை, செய்முறை இரண்டும் ஒன்று தான் என்றால் ஏன் "செய்முறை"யை முன்னனிருத்த முயல்கிறீர்கள்? வழிமாற்று இருக்கட்டுமே. நான் இங்கு பேசுவது உளவியற் சொல் பற்றி பெளதீகச் சொல் பற்றியல்ல. --AntonTalk 04:42, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
பரிசோதனை என்ற சொல்லின் மூலம் நான் அறியேன். அது தமிழ்ச் சொல் தானா என்பதிலும் சந்தேகமே. ஆனால் செய்முறை என்பது தமிழ்ச்சொல் என்பது தெரியும். பல்கலைக்கழக அகரமுதலியில் செய்முறை உளவியல் என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். என்றாலும், நான் மிழி அறிஞன் அல்ல, அதனால் உங்களுடன் வாதாட விரும்பவில்லை.--Kanags \உரையாடுக 04:53, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
பரிசோதனை, செய்முறை என்பவற்றின் இலங்கைப் பாவனை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் போன்ற உளவியல் சஞ்சிகைகள் இப்பதங்களையே பயன்படுத்துகின்றன. அவ்வாறே அபிவிருத்தி உளவியல் என்பதற்கும் தலைப்பிட்டேன். பரிசோதனை, அபிவிருத்தி ஆகிய பதங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலை தமிழக வழக்கு கொடுக்காது. இலங்கை வழக்கை முன்னிருத்தி தலைப்பிடுவது என் இயல்பு. பல்கலைக்கழக அகரமுதலியில் மொழிபெயர்ப்பு தமிழக வழக்கு. அதற்கு வழிமாற்று இருக்கலாமே. இவ்வாறுதானே தலைப்பிடுவது வழக்கம். --AntonTalk 05:07, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
இலங்கை வழக்கும், தமிழக வழக்கு இரு முறைகள் பற்றியும் நான் அறிவேன். இரண்டும் தமிழ்ச் சொற்களாயிருக்கும் இடத்தில், முதலாவதாக எழுத ஆரம்பித்தவரின் சொல்லையே முதன்மைப் படுத்துவது என்பது பொதுவான வழக்கம். ஆனாலும், ஒரு சொல் தூய தமிழ்ச் சொல்லாக இல்லாத பட்சத்தில் தமிழ்ச் சொல்லுக்கு முன்னுரிமை தரவேண்டும்.--Kanags \உரையாடுக 05:24, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
பார்க்க பேச்சு:அபிவிருத்தி உளவியல் --AntonTalk 05:42, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

சோதனை உளவியல்[தொகு]

சோதனை உளவியல் என்ற சொல்லாக்கம் தமிழகத்தில் பயன்படுத்தப் படுகிறது.--உழவன் (உரை) 04:55, 3 சனவரி 2020 (UTC)[பதிலளி]

நண்பர் உழவன் அவர்களுக்கு[தொகு]

நீங்கள் உருவாக்கிய பரிசோதனை உளவியல் என்ற இக்கட்டுரையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். பரிசோதனை உளவியல் என்ற தலைப்பை மையமாகக் கொண்ட இக்கட்டுரையில் தத்துவவியல் தொடர்பான கருத்துகள் சற்று அதிகமாக கொடுக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். எனவே கீழ்கண்ட அப்பத்திகளை நீக்கியுள்ளேன்.

நண்பர் உழவனுக்கு என்று மட்டுமே அழையுங்கள். என்னவோ போல், கூச்சமாக இருக்கிறது.--உழவன் (உரை) 04:29, 15 சனவரி 2020 (UTC)[பதிலளி]

'தோற்றம்' - முதன்மைப் பக்கத்தில் இருந்து நகர்த்தப்பட்ட தரவு

தோற்றம்[தொகு]

ரோசர் போகன்
(Roger Bacon)
1214-1292<ref>https://www.iep.utm.edu/bacon-ro/</ref>
வேபர்
(Ernst Heinrich Weber)
1795-1878<ref>https://www.britannica.com/biography/Ernst-Heinrich-Weber</ref>

மக்கள் பண்டைக் காலந் தொட்டே, தங்கள் நடத்தையிலும், தங்கள் அனுபவத்திலும், அக்கறையுடையவர்களாக இருந்து வந்தபோதிலும், அவர்கள் தரவுகளைச் சேகரிக்கவும், அவற்றை வைத்து முடிவுகளைப் பெறவும், அறிவியல் முறைகளைக் கையாளவில்லை. மனித இயல்பை அறிவதற்கு மனத்தில் நிகழும் எண்ணங்களை ஆராய்ந்தால் மட்டும் போதும் என்று எண்ணினர். இந்திய நாட்டிலிருந்த சாங்கிய அறிஞர்கள் மற்ற இயற்கைப் பொருள்களைப்போல் மனமும், இயற்கை மூலத்தின் பலபடி வளர்ச்சிகளின் விளைபொருளே என்று கருதினர். உள்ளத்தில் நிகழும் எண்ணங்களை அடக்கிக் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக யோகக் கருத்தாளர்கள் பலதிறப்பட்ட முறைகளை வகுப்பதற்கு அடிப்படையாக, இந்தச் சாங்கியங்கள் பேருதவிப் புரிந்தன.<ref>[https://www.sacred-texts.com/hin/sak/index.htm இணையத்தில் இருக்கும் சாங்கிய நூல்கள்]</ref>

பதின்மூன்றாம் நூற்றாண்டில், இங்கிலாந்து நாட்டின் ஆக்சுபோர்டு நகரத்தில் வாழ்ந்த ரோசர் பேக்கன் என்பவர், “எதையும் கவனித்துக் காண்பதும், பரிசோதனைச் செய்து பார்ப்பதுமே அறிவு பெறுவதற்கு இன்றியமையாத முறைகள்” என்றும், “எந்த அறிஞர் கூற்றையும், கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதை விட்டுவிட்டு, இயற்கை நிகழ்ச்சிகளைத் தாமே கவனித்து, ஆராய வேண்டும்” என்று கூறினார். அக்காலத்திலிருந்த ஐரோப்பிய மக்கள் தாங்கள் அறியவேண்டுவன அனைத்தையும், தங்கள் கிறித்தவ வேத நூலிலிருந்தே அறிந்துவந்த படியால், ரோஜர் பேக்கன் கூறியது, ஒரு பெரிய புரட்சிகரமான செயலாகும். இவ்வாறு அவர் கிறித்தவ மதச் சபையின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், இயற்கையை நேரே தாமே ஆராய்ந்து அறியவேண்டும் என்று கூறியபடியால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.<ref>https://en.wikisource.org/wiki/Encyclop%C3%A6dia_Britannica,_Ninth_Edition/Roger_Bacon</ref><ref>''{{lang|la|Compendium Studii Philosophiae}}''</ref><ref>[https://books.google.co.in/books?id=fx84AAAAIAAJ&q=Roger+Bacon&source=gbs_word_cloud_r&cad=5#v=snippet&q=Roger%20Bacon&f=false கூகுள் இணைய நூல்]</ref> பதினெட்டாம் நூற்றாண்டிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் போகனின், கவனச் சோதனைமுறையான, ‘தொகுப்பு அனுமான முறை’யைப் பின்பற்றி, உயிருள்ளவற்றை ஆராய்வதற்கும் பயன் படுத்தலாயினர். இயற்பியலும், வேதியியலும் வளர்ந்த பிறகே, உயிரியல் வளர இயலும். உயிரியல் வளர்ந்தது. அதன் பிறகே, உளவியல் துறைகள் வளர்ந்தன.

ஆங்கில விக்கியில் பரிசோதனை உளவியல் என்ற தலைப்பு தொடர்பான நேரடியான கருத்துகள் அதிகமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மட்டும் மொழியாக்கம் செய்தாலேயே இக்கட்டுரை ஒரு சிறுகதை போல செறிவாக இருக்கும் என்பது என் கருத்து. நீக்கப்பட்ட மேற்கண்ட பத்திகள் தத்துவவியலுக்கும் (Philosophy) உளவியலுக்கும் (Psychology) இடையிலான தொடர்பு குறித்த கட்டுரையில் ஒரு முன்னுரையாக இடம்பெற்றால் நலமாக இருக்கும். இக்கட்டுரையில் அவை சிறுகதையின் செறிவுக்கு பதிலாக ஒரு நாவலாக விரிவாக்கும் அணுகுமுறையாகத் தெரிகிறது.

தமிழ் விக்கிப்பீடியாவில் மிக நீண்ட கட்டுரைகள் இடம்பெறுவதைக்காட்டிலும் நீண்ட செறிவான கட்டுரைகள் இடம்பெற்றால் மிகுந்த பயனளிக்கும் என்பது என் கருத்து. தாங்கள் தானியக்கமாக கட்டுரைகளை பதிவேற்ற முயலும் ஆர்வலர் என்பதால் இக்கருத்துகள் அச்செயலுக்கும் உதவக்கூடும்.

எனது கருத்துகள் சரியானவைதானே……!?--கி.மூர்த்தி (பேச்சு) 02:52, 15 சனவரி 2020 (UTC)[பதிலளி]

ஆம். கட்டுரைத்தலைப்புக்கு ஏற்ப, தரவுகளை இட்டு, கட்டுரையைச் செறிவு படுத்துகிறேன். நீக்காமல் பேச்சுப் பக்கத்திற்கு தரவுகளை இட்டமைக்கு நன்றி. இதனால் பலரும் புரிந்து கொள்ள ஏதுவாகிறது. அதனால் என்னைப் போன்ற பங்களிப்பாளரும், தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். இவ்வாறு நகர்த்தலுக்கான பணியை எளிதாக்க ஏதேனும் நுட்பம் செய்ய முயற்சி எடுப்பேன். தற்போது வீட்டின் சொத்தினைக் காப்பாற்ற, சட்டக்கல்வியில் பட்டம்(B.L.) பெற்று, பகுதி நேரப்பணியாளனாக வழக்குரைஞரிடம் பணியாற்றுகிறேன். அதனால் பல நோக்கங்களை, உடன் செய்ய இயலவில்லை. பொறுக்கவும். --உழவன் (உரை) 04:29, 15 சனவரி 2020 (UTC)[பதிலளி]
மேம்படுத்தி உள்ளேன். தொடர்ந்து தரவு கிடைப்பின் விரிவுபடுத்துவேன்.--உழவன் (உரை) 23:52, 23 சனவரி 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பரிசோதனை_உளவியல்&oldid=2899979" இலிருந்து மீள்விக்கப்பட்டது