பேச்சு:பரசிட்டமோல் நச்சுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செந்தி மிக நன்றாக இக்கட்டுரையை வரைந்துள்ளீர்கள். வலிநிவாரணி என்பதைவிட வலிநீக்கி, வலிவிடுப்பி, வலிகுறைப்பி என்பன எளிதாகப் புரியும். உள்ளே இன்னும் சிறுசிறு மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும், மாற்றாலாமா? --செல்வா 21:09, 11 அக்டோபர் 2010 (UTC)

நன்றி செல்வா, தங்களால் மாற்ற முடியுமெனின் .தாராளமாக மாற்றவும், இல்லையெனின் பிழைகளைச் சுட்டினால் நானே மாற்றிவிடுகிறேன்; அப்போதுதான் தரமான கட்டுரை எவ்வாறு எழுதுவது என்பதைப் பயின்றவனாவேன். நன்றி --சி. செந்தி 06:03, 12 அக்டோபர் 2010 (UTC)

மேலும், நச்சுத்தன்மையை நச்சுமை என்று குறிப்பது சரியா? -இமை ஒட்டுதானே தன்மையைக் குறிக்கும்? (ஓ, இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே வேற்றுமை நினைவுக்கு வருகிறது. இருந்தாலும் சில இடங்களில் மேட்டிமை என்று வருகிறது. இந்த இடத்தில் எது சரி?) -- சுந்தர் \பேச்சு 07:41, 12 அக்டோபர் 2010 (UTC)

முதலில் poisoning என்பதற்கு "நஞ்சூட்டம்" என "http://ta.wiktionary.org/wiki/poisoning" இலிருந்து எடுத்தேன். அதேபோல toxicity என்பதற்கும் நிறைய சொற்பதங்கள் உண்டு. http://ta.wiktionary.org/wiki/toxicity - இங்கே நச்சுமை எனவும் குறிக்கப்பட்டிருந்தது. --சி. செந்தி 08:00, 12 அக்டோபர் 2010 (UTC)

தகவலுக்கு நன்றி, செந்தி. -- சுந்தர் \பேச்சு 09:11, 12 அக்டோபர் 2010 (UTC)