பேச்சு:பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Agrobacteriam என்பதை அகுரோபாக்டீரியம் என எழுத்தொலி பெயர்க்கலாம். மெல்லொலியாகிய g என்னும் எழுத்தொலியைக் குறிக்க ஒரு உகரம் கூட்ட வேண்டியுள்ளது. அக்ரோ என்றால் akroh என்று வலித்து ஒலிக்க வேண்டும். இதனை நைட்ரைடு-குறைப்புக் கோல் நூண்ணுயிரி அல்லது பயிர்நோய்க் கோலுயிரி எனலாமா?--செல்வா 20:02, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

பயிர்நோய்க் கோலுயிரி எனலாம் செல்வா -- மகிழ்நன் 20:15, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

நல்லது மகிழ்நன். நாம் கூடவே பிறைக்குறிகளுக்கு இடையே முதலில் இலத்தீன் எழுத்துகளில் பெயரையும் கொடுப்போம் ஆகையால் குழப்பம் ஏதும் வாராது. உங்களைப் போல துறையறிஞர்கள் துணையுடன் இக்கட்டுரைகள் உருவாவது மகிழ்ச்சி ஊட்டுகின்றது. நன்றி. --செல்வா 20:30, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
மகிழ்நன், உங்கள் ஆய்வுக்கட்டுரையையே மேற்கோள் காட்டியிருப்பது மிக அருமை! பாராட்டுகள். பிளாசுமிடு (plasmid) என்பதற்கு அ.கி மூர்த்தியின் அறிவியல் அகராதி, கணிமி எனக்குறிக்கின்றது. அங்குள்ள விளக்கம், "கணிமி: டி.என்.ஏ-வைக் கொண்ட உயிரணுவில் உள்ள உறுப்பு. நிறப்புரியன்றித் தனித்து நின்று தன்னைப் பகர்ப்பு செய்வது (அ.கி. மூர்த்தி, அறிவியல் அகராதி, மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை 600108, திருத்திய பதிப்பு நவம்பர் 1997). தொடர்பான சொற்கள்: plasma plasma cells, plasmagel, முதலான பல சொற்களுக்குக் கணி-, கணிம- என்று தொடங்கும் சொற்களே தந்துள்ளார்கள். குருதியின் பிளாசுமாவையும் கணியம் என்பர். --செல்வா 00:10, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

நன்றி செல்வா, கணிமி மற்றும் பயிர்கோலுயிரி தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன். படம் சேர்ந்ததுக்கு நன்றி. இப்படத்தை பயிர்கோலுயிரி பற்றி தனியாக எழுதும் போது இடலாம் என நினைத்தேன்.

நன்றி

-- மகிழ்நன் 03:33, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

தலைப்பிலுள்ள 'உள் - செலுத்துதல்' என்பதை 'உட்செலுத்தல்', 'உள்-செலுத்தல்' என்பது போல மாற்றலாமா? -- சுந்தர் \பேச்சு 04:51, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

maarrividunkal sundar.

nanri

-- மகிழ்நன் 05:18, 4 ஆகஸ்ட் 2009 (UTC)