பேச்சு:பயற்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயற்றம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பயற்றம் என்று தனியான சொல்லாக தமிழில் இது அழைக்கப்படுகிறதா?--Kanags \உரையாடுக 06:21, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உள்ளது. ”பயத்தம்” என்ற தனி பேச்சும் வழக்கு உள்ளது. (பயத்தம் பருப்பு, பயத்தம் பணியாரம், பயத்தம் உருண்டை)--சோடாபாட்டில்உரையாடுக 06:40, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பயற்றம் என்றுதான் இலங்கையிற் பொதுவாக அழைக்கப்படுகிறது. பாடநூல்களும் அப்படியே குறிப்பிடுகின்றன.--பாஹிம் 06:42, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கூகுள் அல்லது யாஹூவிற் தேடிப் பார்த்தால் ஏராளமான பெறுபேறுகள் பயற்றம் என்பதற்கு வருகின்றன.--பாஹிம் 06:44, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் குறிப்பிட்டவாறு சேர்ந்து வருகிறது உண்மை. ஆனால் தனிச் சொல்லாக எங்கும் கண்ட மாதிரித் தெரியவில்லை:).--Kanags \உரையாடுக 06:51, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பின்னொட்டுகள் பலவாயின் தனிப்பயன்பாடு எனக் கொள்ளலாம். “பயற்றம்” / “பயத்தம்” + பருப்பு/பணியாரம்/உருண்டை. செடியினைத் தனியாகக் குறிப்பிடும் பயன்பாடு அதிகம் தேவையில்லை என்பதால். இது உணவுப் பொருள்ட்களின் வாயிலாகவே அறியப்படுகிறது. (பெரும்பாலான பருப்பு/பயறு வகைகள் இவ்வாறே உள்ளன - உளுந்து, துவரம் போன்றன்). --சோடாபாட்டில்உரையாடுக 06:57, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த கட்டுரை எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது? பயற்றம் என்ற செடியைப் பற்றியதா அல்லது அதன் காயான பயற்றங்காய் பற்றியதா? //பயற்றம் (பேச்சு வழக்கு: பயத்தம்) என்பது அவரை (bean) வகையைச் சார்ந்த ஒரு தாவரத்தின் காய் ஆகும்// என்று எழுதியிருக்கிறீர்கள். அவ்வாறென்றால் அதன் தாவரத்திற்கு வேறு பெயர் உண்டா?--Kanags \உரையாடுக 07:03, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தாவரத்தைப் பற்றிக் குறிப்பிடும் கட்டுரையில் முதல் வரி பிழையாக உள்ளது. அதைத் திருத்தி விட்டாற் சரி.--பாஹிம் 07:08, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கட்டுரையை முழுதாக தாவரத்தைக் குறிப்பதாக மாற்றி விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:09, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
'பயிற்றம் / பயித்தம்' என்ற சொல் தனியாக நானும் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் இந்த தாவரத்தை எப்படி அழைப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தால் தற்போது நினைவுக்கு வர மறுக்கின்றது. எனக்கு இதில் வேறும் ஒரு சந்தேகம். இந்த தாவரத்தின் காய் பயிற்றம்காய் என்பது சரிதான். ஆனால், பயத்தம் பருப்பு, இந்தக் காய்களில் இருந்து பெறப்படும் விதைகளைத்தானா? மேலும் பயத்தம் பணியாரம், பயத்தம் உருண்டை போன்றனவும் இந்தத் தாவரத்தில் இருந்து பெறப்படும் உணவு இல்லை என நினைக்கின்றேன். --கலை 00:32, 13 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]



பயிற்றங்காய் என்பதுதான் சரியானது. பயிற்றங்கொடியில் (பயித்தங்கொடி) காய்ப்பதுவே பயிற்றங்காய் (பயித்தங்காய்). இதை பயிற்றம் என்றோ, பயற்றம் என்றோ சொல்வதில்லை. அல்லது நான் அப்படி ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை. மற்றும் பயற்றம்பருப்பு (பயித்தம்பருப்பு), பயற்றம் பணியாரம்(பயித்தம்பணியாரம்) போன்றவை பயறில் இருந்து பெறப்படுபவை. பயிற்றங்காய் வேறு. பயறு வேறு. --Chandravathanaa 23:32, 13 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சந்திரவதனா, நீங்கள் பயற்றம் என்று தனியாகப் பயன்படுத்துவதை அறியவில்லை என்பதற்காக அப்படிச் சொல்வதில்லை என்பது தவறு. இலங்கையில் பயற்றம் என்று தனிச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.--பாஹிம் 04:52, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
பயற்றங்கொடி என்ற பெயரிலும் ஒரு பக்கத்தைத் தொடங்கி, அதனை இங்கே பயற்றம் என்ற கட்டுரைக்கு மீள்வழிப்படுத்தியுள்ளேன்.--கலை 11:24, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பயற்றம்&oldid=1094056" இலிருந்து மீள்விக்கப்பட்டது