பேச்சு:பனிக்கரடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Chordata என்பதற்குப் பதிலாக முள்ளந்தண்டுளி என்ற பதத்தை பாவிக்க முடியாதா. பாடசாலையில் இந்தப் பதத்தைப் பாவித்ததாகவே நினைவுள்ளது, --ஜெ.மயூரேசன் 04:34, 28 மே 2006 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும், இப்பொழுதுதான் பார்த்தேன். notochord என்பது முதுகெலும்பு தோன்றும் முன் உள்ள தொல்பழம் உருவம். இதிலிருந்தே சில உயிரினங்கள் முதுகெலும்பு பெற்றதாகக் கூறுவர். முள்ளந்தண்டு என்பது notochord என்பதை விளக்குமெனில், கட்டாயம் பயன்படுத்தலாம். முள்ளந்தண்டுளி என்பது vertebrata வோ என ஒரு ஐயம்.--C.R.Selvakumar 19:31, 12 ஜூன் 2006 (UTC)செல்வா
கார்டேட்டா என்பதற்கு முதுகுநாணி என தமிழ்நாட்டுப்பாடநூலில் தரப்பட்டுள்ளது. பார்க்க: பேச்சு:அறிவியல் வகைப்பாடு--சிவகுமார் \பேச்சு 12:02, 23 ஜனவரி 2008 (UTC)

பேச்சு:துருவக்கரடி[தொகு]

கர்ப்பம் - தமிழ்ச்சொல் தானா? தமிழ்ச்சொல் என்ன? கர்ப்ப காலத்தை பேறு காலம் எனச்சொல்லாமா?--ரவி 16:01, 3 ஆகஸ்ட் 2006 (UTC)

கர்ப்பம் தமிழ்ச்சொல் போன்று தோன்றவில்லை. கருவுறுதல் என்ற சொல் அரசு நலத்திட்ட விளம்பரங்களில் பயன்படுத்தப்படக் கண்டிருக்கிறேன். கரு என்ற வேர்ச்சொல் தமிழ்ச்சொல்லா? -- Sundar \பேச்சு 03:44, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

இரண்டு கருத்துக்கள்: (1)கருவுற்று சினை ஆகின்றது என்று எழுதலாம். கருப்பம் என்பது மனிதர்களுக்கு சிறப்பாகப் பயன்படுவது (வழக்கில்). விலங்குகள் கருவுற்றால் சினையாகி உள்ளது, சினைப்பட்டு உள்ளது என்று கூறுதல் வழக்கம். சூல் சூலி சூல்லுற்றுள்ளாள் என்பது பெரும்பாலும் மக்களுக்கு, எனினினும் மரஞ் செடி கொடிகளுக்கும் (பூ), விலங்குகளுக்கும் பயன்படுத்துவதுண்டு. சினை என்பதும் சணை என்பதும் வினையாக பயன்படுத்தலாம். (2) இக்கட்டுரையின் தலைப்பு பனிமுனைக் கரடி என்று இருக்கவேண்டும். பனிக்கரடி என்று ஒரு கட்டுரையும் உள்ளது. இது இரண்டும் ஒன்றைப்பற்றிதானே? துருவம் என்று வருமிடங்களிலெல்லாம், முனை, அச்சு முனை முதலிய சொற்களை ஆளலாம் என்பது என் பரிந்துரை. காந்த முனை, நிலவுலகின் வட முனை (பூமியின் வட முனை, புவியின் வடமுனை) என்பது போல. துருவம் என்றால் எதையோ துருவிப்பார்க்கப்படுவது என்பது போல தோன்றுகிறது.--C.R.Selvakumar 04:03, 4 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

இக் கட்டுரை பனிக்கரடி என்னும் கட்டுரையிடன் இணைக்கபட வேண்டும். --செல்வா 14:56, 11 டிசம்பர் 2007 (UTC)

பனிக்கரடி+துருவக்கரடி[தொகு]

கட்டுரை, பேச்சுப்பக்கம் என்பன இணைக்கப்பட்டதுடன் அவற்றின் வரலாறுகளும் இணைக்கப்பட்டன. கோபி 17:36, 11 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனிக்கரடி&oldid=205748" இலிருந்து மீள்விக்கப்பட்டது